சூர்யா - லிங்குசாமி - சந்தோஷ் சிவன் கூட்டணியில் உருவாகவிருக்கும் திரைப்படத்தின் மீது தான் திரையுலகத்தின் மொத்த பார்வையும் இருக்கிறது.
தொழில்நுட்ப ரீதியிலும், படக்குழுவிலும் சிறப்பம்சங்கள் பலவற்றை இந்த பெயரிடப்படாத படத்தில் சேர்த்து ஒரு பிரம்மாண்ட கூட்டணியை உருவாகிக்கொண்டிருக்கின்றனர்.
ஹீரோ சூர்யா, ஹீரோயின் சமந்தா(அப்படி தான் பேசப்படுகிறது) என முன்னணி நடிகர் நடிகைகளை தேர்ந்தெடுத்த லிங்குசாமி வில்லன் கதாபாத்திரத்திற்கு பாலிவுட் நடிகரான மனோஜ் பாஜ்பாயை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
சத்யா(இந்தி) திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற மனோஜ் பாஜ்பாய் தான் முக்கிய வில்லனாம்.
வில்லன் டீமில் இருக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்-அஜித் திரைப்படங்களில் வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வால் நடிக்கிறாராம்.
ஹீரோ தனி ஆளாகவும், வில்லன் கூட்டணி பலமாக இருப்பதையும் பார்த்தால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு ஆக்ஷன் விருந்து இருக்கும் என்கின்றனர் திரையுலகினர்.


0 comments:
Post a Comment