Recent Posts
Saturday, 21 September 2013
யாவரும் நலம் படத்துடன் தெலுங்குக்குப் போன இயக்குனர் விக்ரம் கே குமார் மீண்டும் தமிழில் படம் இயக்குகிறார்.
மாதவன், நீது சந்திராவை வைத்து விக்ரம் கே குமார் இயக்கிய யாவரும் நலம் அவரின் முதல் படம். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் இந்த ஹாரர் படம் தமிழ் ரசிகர்களை மிரட்டியது. 13பி என்ற பெயரில் இந்தியிலும் படத்தை வெளியிட்டனர்.
அதையடுத்து நடிகர் விக்ரமை வைத்து படம் இயக்குவதாக இருந்தார். கதையில் விக்ரம் மூக்கை நுழைத்ததைத் தொடர்ந்து அப்படம் ட்ராப்பானது. விக்ரம் கே குமார் தெலுங்கில் இஸ்க் என்ற படத்தை இயக்கினார். நிதின், நித்யாமேனன் நடித்த அப்படம் சூப்பர்ஹிட்.
இப்போது மனம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஆந்திராவே உற்று நோக்குகிறது. காரணம் படத்தில் நடித்திருக்கும் மூன்று தலைமுறை நடிகர்கள்.
தெலுங்கு சினிமாவின் ஜாம்பவான் நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜுனா, பேரன் நாக சைதன்யா என மூன்று தலைமுறை முதல்முறையாக மனதில் ஒன்றாக நடித்திருக்கிறது. ஹீரோயினாக சமந்தா, ஸ்ரேயா நடித்துள்ளனர். நேற்று, நாகேஸ்வரராவின் 90 வது பிறந்தநாளை முன்னிட்டு மனம் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.
மனம் முடிந்ததும் மீண்டும் விக்ரம் கே குமார் தமிழுக்கு வருகிறhர். வி6 டைமென்சன்ஸ் விமல் தயாhpக்கும் படத்தை விக்ரம் கே குமார் இயக்குகிறhர். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை.
தாத்தா, மகன் பேரன் நடிக்கும் மனம்!
ஹரி இயக்கத்தில் விக்ரம் விரைவில் ஒரு படம் நடிக்கிறார்.
என்னுடைய ரசிகர்கள் பொறுமைசாலிகள். என் படம் வர்றவரைக்கும் காத்திருப்பார்கள் என்று சில வருடங்கள் முன்பு பெருமையுடன் கூறினார் விக்ரம். இப்போது அப்படி சொல்வாரா தெரியாது. ரசிகர்கள் பொறுமையுடன் காத்திருந்து பார்த்த பீமா, தாண்டவம் என்று எந்தப் படமும் அவர்களுக்கு திருப்தியளிக்கவில்லை. தற்போது ஐ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
என்னதான்....
சிரமப்பட்டு நடித்தாலும் மூன்று வருஷத்துக்கு ஒரு படம் என்றால், விக்ரமா...? ஓ அவரும் நடிக்கிறார்ல என்றுதான் கமெண்ட் வரும். விக்ரமின் நிலைமை கிட்டத்தட்ட அதுதான்.
அந்த தீர்மானப்படி தனக்கு தில், தூள் என்று அடுத்தடுத்து லிப்ட் தந்த தரணியின் படத்தில் நடிக்கிறார் விக்ரம். கௌதம் வாசுதேவ மேனனின் இயக்கத்தில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதேபோல் தனக்கு சென்சேஷனல் ஹிட்டாக அமைந்த சாமி பட இயக்குனர் ஹரிக்கு ஒரு படம் நடித்துத் தரவும் சம்மதித்துள்ளார்.
ஐ க்குப் பிறகு தரணி இயக்கும் படத்தில் அனேகமாக விக்ரம் நடிப்பார் என்கிறார்கள்.
ஹரி இயக்கத்தில் விக்ரம்
மெக்ஸிகோவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட அகபுல்கோ என்ற இடத்திலிருந்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மிகேல் ஒசாரியோ சாங் இச்செய்தியை வெளியிட்டார். அப்போது அந்நாட்டு பிரதமர் என்ரிக் பெனா நைட்டோ உடனிருந்தார்.
அங்குள்ள லா பின்டாடா கிராமத்தில் ஏற்பட்ட பெருத்த நிலச்சரிவால் பாதி கிராமம் மூழ்கடிக்கப்பட்டது. இதில் 101 பேர் உயிரிழந்ததாகவும் 68 பேர் காணாமல் போயிருப்பதாகவும் ஒசாரியோ சாங் தெரிவித்தார். மேலும் இன்கிரிட் மற்றும் மனுயெல் ஆகிய இரு வெப்பமண்டல புயல்களின் தாக்கத்தால் நகரங்களில் வெள்ளம் ஏற்பட்டு சாலைகள் மற்றும் 10,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. வடமேற்கு மாநிலமான சினாலோவில் வியாழக்கிழமை ஏற்பட்ட மனுயெல் புயலால் 3 பேர் கொல்லப்பட்டனர். 100,000 மக்கள் பாதிப்புக்குள்ளாகினர் என்று அவர் கூறினார்.
பெரும் பாதிப்புக்குள்ளான குவரேரோ மாநிலத்தில் 65 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள அகபுல்கோ என்ற இடத்திலிருந்து மெக்ஸிகோவிற்கு செல்லும் இரண்டு சாலைகள் நிலச்சரிவில் மூழ்கிவிட்டன.காவல்துறை ஹெலிகாப்டர்கள் மூலமாக லா பின்டாடா கிராமத்திலுள்ள மக்கள் மீட்கப்பட்டு வந்ததாகவும், தற்போது ஏற்பட்டுள்ள பனிமூட்டம் காரணமாக தரைவழியாக அவர்கள் மீட்கப்பட்டு வருவதாக ஒசாரியோ சாங் தெரிவித்தார்.
மேலும் நிலச்சரிவின் காரணமாக 1000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் அகபுல்கோவில் சிக்கிக் கொண்டதாகவும், தற்போது சாலைகள் சீரமைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான போக்குவரத்து சரி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மெக்ஸிகோவில் நிலச்சரிவு: 100க்கும் மேற்பட்டோர் சாவு
இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க சேவாக், கம்பீர், யுவ்ராஜ், ஜாகீர் கான், ஹர்பஜன் ஆகியோர் கடுமையாக போராடி வருகின்றனர்.
இந்த நிஅலியில் நெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளிலும் கேப்டனாக சிறப்பாக ஆடியுள்ள யுவ்ராஜ் சிங் மறு பிரவேசம் நடக்கும்போது நடக்கும் அது பற்றி நான் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஒரு கிரிக்கெட் வீரரனாக தான் கடுமையான போராளி என்று கூறிய யுவ்ராஜ் சிங் கேன்சர் நோயையே எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
இந்திய அணியில் மீண்டும் இடம்பெறும் நம்பிக்கை இருக்கிறது என்றார் யுவ்ராஜ் சிங்.
'நான் செத்துப் பொழச்சவண்டா...'
/அமெரிக்காவில் 850 பாம்புகளை வீட்டில் பதுக்கிய நபர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின், நியூயார்க்கிலுள்ள ஷிர்லே பகுதியில் வசிப்பவர், ரிச்சர்ட் பேரிநெல்லோ. இவர் விலங்குகள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரியாக உள்ளார்.
மியான்மர் நாட்டின் மலைப்பாம்பு உட்பட 850 பாம்புகளை தன் வீட்டில் பதுக்கி வைத்திருந்தார்.
இது மட்டுமல்லாது, ஆமை உள்ளிட்ட விலங்குகளையும் தன் வீட்டில் வைத்து, கள்ளத்தனமாக விற்று வந்தார்.
இவர் மியான்மர் நாட்டின் நான்கு அடி நீளமுள்ள பாம்பை வளர்த்து உள்ளார். இந்த மலைப்பாம்பு, 30 அடி நீளம் வளரக் கூடியது.
கனடா நாட்டில் சமீபத்தில், இரண்டு குழந்தைகளை மலைப்பாம்பு விழுங்கி விட்டது. இந்த சம்பவத்துக்கு பின், நியூயார்க்கில், மலைப்பாம்பு வளர்க்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த விதிமுறையை மீறி பாம்புகளை வைத்திருந்ததற்காக, ரிச்சர்ட் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பாம்புகள், மாசாசூசெட்ஸ் சரணாலயத்தில் விடப்பட்டன.
செல்லப்பிராணிகளாக 850 பாம்புகள் வளர்த்தவர் மீது வழக்கு
அவர்கள் என்றால் தனுஷ், ஐஸ்வர்யா. மனைவிக்காக அவரின் முதல் படம் 3 ல் தனுஷ் நடித்தார். படம் வெளிவரும் முன்பே இருவரும் பரஸ்பர ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டனர். இனி ஐஸ்வர்யா தனுஷை இயக்குவதில்லை.
இவர்கள் அப்படியே உல்டா. உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகாவின் முதல் படம் வணக்கம் சென்னை. கணவர் நடிகராக இருந்தும் முதல் படத்தில் மிர்ச்சி சிவாவை நாயகனாக்கினார். ஹீரோயின் ப்ரியா ஆனந்த். சந்தானம் காமெடி ஏரியாவை கவனிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். அக்டோபர் 11 படத்தை வெளியிடும் வேலைகள் நடக்கின்றன.
முதல் படம் முடிந்த நிலையில் அடுத்தப் படத்தை தனது கணவரை வைத்து இயக்க விரும்புகிறாராம் கிருத்திகா. உதயநிதிக்கும் அது ஓகே தானாம். தற்போது அவர் நடித்து வரும் இது கதிர்வேலன் காதல் முடியும் நிலையில் உள்ளது. அதையடுத்து நண்பேன்டா. இரண்டும் முடிந்த பிறகு கிருத்திகாவின் இயக்கத்தில் நடிப்பார் என்கிறார்கள்.
அவர்கள் அப்படி இவர்கள் இப்படி
ரிசர்வ் வங்கி தன்னுடைய காலாண்டு இடைக்கால நிதிக்கொள்கையில், குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ) 0.25 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதனால் வீடு, கார் உள்ளிட்ட கடன்களின் வட்டி விகிதம் உயரும்.
ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பொறுப்பேற்றுள்ள ரகுராம் ராஜன், முதல் முறையாக ஆர்பிஐயின் காலாண்டு இடைக்கால நிதிக்கொள்கையை நேற்று வெளியிட்டார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 0.25% உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெப்ரோ வட்டி விகிதம் 7.5% ஆக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கியிடம் இருந்து வர்த்தக வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 0.75% குறைக்கப்பட்டு 9.5% ஆக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச தினசரி இருப்புத்தொகை 99%தில் இருந்து 95% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான வட்டி தொடர்ந்து 4 % ஆக இருக்கும். விலைவாசி கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது.
நடப்பாண்டில் மீதமுள்ள மாதங்களில் மொத்த விலைப்புள்ளி எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே இருக்கக்கூடும். பொருளாதார வளர்ச்சி, வளத்தை காட்டிலும் குறைவாகவே உள்ளது. உள்கட்டமைப்பு திட்டங்கள் கால தாமதம் ஆகின்றன. புதிய திட்டங்கள் முடங்கி உள்ளன. ஆர்பிஐயின் அடுத்த நிதிக்கொள்கை அக்டோபர் 29ம் தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வட்டி விகிதம் 0.25% உயர்த்தப்பட்டுள்ளதால், வீடு, கார், சில்லரை கடன்களுக்கான வட்டி விகிதத்தை உடனடியாக வங்கிகள் உயர்த்தும். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கூடியுள்ள நிலையிலும், அமெரிக்க மத்திய வங்கியின் அறிவிப்பை தொடர்ந்தும், வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு நேர்மாறாக வட்டி விகிதத்தை ஆர்பிஐ உயர்த்தியுள்ளது. இது தொழில்துறையினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நிதிக்கொள்கையை வெளியிட்டு ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் கூறுகையில், "குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருந்தாலும், அதை ஈடுகட்டும் வகையில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், வர்த்தக வங்கிகள் கடன் வட்டியை உயர்த்தாது" என்றார். ஆனால், நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தலைவர் பிரதீப் சவுத்ரி கூறுகையில், "பண்டிகை சீசனால் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும்" என்றார்.
RBI நிதிக்கொள்கை வெளியீடு; வட்டி விகிதம் 0.25% உயர்வு
பீட்ரூட் சாறு மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தத்தை தணõக்கவல்லது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஓரு தேநீர் கோப்பை அளவு, அதாவது 250 மிலி லிட்டர் பீட்ரூட் சாறு குடித்தால் ஓருவரின் உயர் ரத்தஅழுத்தம் சுமார் 10 ஙம் அளவு குறைவதாக லண்டன் மருத்துவக் கல்லூரியும் பார்ட்ஸ் சுகாதார மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பதினைந்து பேரிடம் நடத்திய இந்த ஆய்வின் முடிவில் ஓரு சிலருக்கு அவர்களின் உயர் ரத்தஅழுத்தம் சாதாரண அளவுக்கு குறைந்ததாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதாக, மருத்துவ நூலான ஹைபர்டென்ஷன் தெரிவிக்கிறது. இவர்கள் பீட்ரூட் சாற்றைகுடித்து மூன்று முதல் ஆறுமணி நேரம் கழித்து இவர்களின் உயர் ரத்தஅழுத்தம் கணிசமாக குறைந்ததாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள்.
மேலும் மறுநாளும் கூட இவர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைந்தே காணப்பட்டதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் சத்து மனிதர்களின் ரத்தநாளங்களை விரிவடையச் செய்வதனால் ரத்த ஓட்டம் சீராக செல்வதால், மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைவதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே அஞ்ஞைனா என்கிற இரத்தநாள வலிநோயால் அவதிப்படுபவர்களுக்கு நைட்ரேட் மருந்து அளிப்பதன் மூலம் அவர்களின் வலியை குறைக்க முடிவதை சுட்டிக்காட்டும் மருத்துவர்கள், இங்கே நைட்ரேட் சத்து அதிகம் கொண்டிருக்கும் பீட்ரூட் சாறு அதே வேலையை செய்வதாக கருதுகிறார்கள்.
மருந்து அளிப்பதன் மூலம் அவர்களின் வலியை குறைக்க முடிவதை சுட்டிக்காட்டும் மருத்துவர்கள், இங்கே நைட்ரேட் சத்து அதிகம் கொண்டிருக்கும் பீட்ரூட் சாறு அதே வேலையை செய்வதாக கருதுகிறார்கள்.
நைட்ரேட் சத்து ரத்த நாளத்தை விரிவடையச்செய்யும்.
மண்ணில் இயற்கையிலேயே இருக்கும் நைட்ரேட் சத்து, தாவரங்களின் வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்டு அவற்றின் இலை, தண்டு மற்றும் கிழங்குகளில் சேமிக்கப்படுகிறது. ஓவ்வொரு தாவரமும் இந்த நைட்ரேட் சத்தை ஓவ்வொருவிதமாக உறிஞ்சும் தன்மையையும், சேமிக்கும் தன்மையையும் கொண்டிருக்கின்றன. இதில் பீட்ரூட் தாவரம் நிலத்தில் இருந்து உறிஞ்சும் நைட்ரேட் சத்தை தனது கிழங்கில் அடர்த்தியாக சேமிக்கும் தன்மை கொண்டது.
எனவே பீட்ரூட் கிழங்கின் சாற்றை குடிக்கும் போது அதில் இருக்கும் நைட்ரேட் மனிதர்களின் ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும் வேலையை செய்கிறது.
இவ்வளவு குறைவான நைட்ரேட், உயர் ரத்தஅழுத்தத்தில் இவ்வளவு பெரிய நல்ல பலனை அளிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் அம்ரிதா அலுவாலியா.
எனவே நைட்ரேட் சத்து அதிகம் இருக்கும் பீட்ரூட் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், ஓருவரின் உயர் ரத்தஅழுத்தத்தை கணிசமாக குறைக்க முடியும் என்றும் நோயாளிகளுக்கும் எளிதில் கடைபிடிக்கக்கூடியதும், பக்கவிளைவுகளற்ற சிகிச்சை முறையாக மாறும் வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்.
அதே சமயம் நைட்ரேட் அதிகம் உள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதன் மூலம் நாள்பட்ட உயர் அழுத்தத்தை தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமா என்பது குறித்து முடிவு செய்வதற்கு மேலும் ஆய்வுகள் செய்வது அவசியம் என்கிறார் அம்ரிதா அலுவாலியா.
இந்த ஆய்வின் முடிவுக்குக் காத்திராமல் பச்சைக் காய்கறிகளை அதிகம் உண்பது உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்களுக்கு நன்மை. அதே சமயம் பீட்ரூட் சாறு அருந்துபவர்சிறுநீர் இளஞ்சிகப்பு நிறத்தில் இருக்கும் என்று கூறுகிறார்.
நன்றி: பசுமை இந்தியா மாத இதழ்!
பீட்ரூட் சாறு உயர் ரத்தஅழுத்தத்தை தணிக்கிறது
விஷால் நடித்திருக்கும் சுசீந்திரனின் பாண்டிய நாடு படத்தை வேந்தர் மூவிஸ் வாங்கியுள்ளது.
விஷால் இதுவரை வெளி படங்களிலும், தனது அண்ணன் தயாரிக்கும் படங்களிலும் நடித்து வந்தார். முதல்முறையாக விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அவர் தயாரித்திருக்கும் படம், பாண்டிய நாடு.
சுசீந்திரன் இயக்கத்தில்....தயாராகியிருக்கும் இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. நாளை லயோலா கல்லூரியில் படத்தின் ஒரு பாடலை மட்டும் வெளியிடுகின்றனர். டி.இமான் இசையமைத்திருக்கிறார்.
லட்சுமி மேனன், பாரதிராஜா, சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிட ஆர்வம் காட்டி வந்தார் விஷால். இந்நிலையில் படத்தின் விநியோக உரிமையை வேந்தர் மூவிஸ் வாங்கியுள்ளது.
இவர்கள் கடைசியாக வாங்கி வெளியிட்ட படம் தலைவா. நளனும் நந்தினியும், சுட்ட கதை ஆகிய படங்களின் விநியோக உரிமையும் இவர்கள் வசமே உள்ளது. படம் தயாராகி பல மாதங்கள் ஆன பிறகும் இவ்விரு படங்களையும் வேந்தர் மூவிஸ் வெளியிடவில்லை.
பெரிய படங்களுக்கு முன்னுரிமை தருவதால் இவ்விரு பட்ஜெட் படங்களும் பெட்டிக்குள் முடங்கியுள்ளன.
பாண்டிய நாடு இப்போது வேந்தரின் கையில்
கடந்த 2012ம் ஆண்டின் மிகச்சிறந்த புதிய வானளாவிய கட்டிடம் என்ற கணிப்பீட்டில் மிசிசாகாவில் உள்ள “Marilyn Monroe” என்றழைக்கப்படும் ஜோடி கட்டிடங்கள் மிகச் சிறந்தவையென தெரிவாகியுள்ளது.
Absolute World Towers என்ற இவ்விரு கட்டிடங்களும் வளைவான அமைப்புடையவை.
Absolute World Towers
ஜேர்மனியின் ஹேம்பர்க் (Hamburg) நகரத்திலுள்ள கட்டிட கணிப்பீட்டு நிறுவனமான Emporis ஆண்டு தோறும் உலக நாடுகளில் மிகச்சிறந்த கட்டிடங்களை தெரிவு செய்து விருது வழங்கி வருகின்றது.
இதன்படி 2012ல் நடத்தப்பட்ட கணிப்பில் கனடாவின் மிசிசாகாவில் அமைந்துள்ள இரு கட்டிடங்களினதும் வளைவான அமைப்பிற்கு Emporis Skyscraper Award விருது கிடைத்துள்ளது.
கட்டிடங்களின் அமைப்புக்களும் ஒவ்வொரு தளத்திலும் 8 பாகையில் முறுக்கப்பட்டிருப்பது ஒரு சாதாரணமானதல்ல என்று கணிப்பீடு செய்த நடுவர்கள் கூறியுள்ளனர்.
இக்கட்டிடங்கள் Beijing கை அடிப்படையாக கொண்ட MAD கட்டிட கலை வல்லுநர்களாலும், Toronto- Burka Architects கட்டிட கலை வல்லுநர்களாலும் வடிவமைக்கப்பட்டனவாகும்.
இரு கட்டிடங்களிலும் உள்ள தளங்கள் ஒவ்வொன்றும் ஒரே மாதிரி ஆனவை இல்லையென்றும் கூறப்பட்டுள்ளது.
இரு கட்டிடங்களும் முறையே 176 மீற்றர், 158 மீற்றர் உயரமுடையவை. இரண்டாம் இடம் அபுதாபியிலுள்ள Al Bahr Towers ற்கும் 3ம் இடம் Burj Qatar என்ற கத்தார் தலைநகர் தோகாவில் உள்ள கட்டிடத்திற்கும் கிடைத்துள்ளன.
உலகின் சிறந்த வானளாவிய ஜோடி கட்டிடம்
சினிமா நூற்றாண்டு விழாவை இன்று மாலை முதல்வர் ஜெயலலிதா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திரைத்துறையின் வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய முதல்வர், வந்தாரை வாழ வைக்கும் நாடு தமிழ்நாடு. இங்கு தமிழ்நாட்டு கலைஞர்கள் மட்டுமின்றி பிறமொழிக் கலைஞர்களும் இங்கு முன்னணி நடிகர்களாக உள்ளனர். எனது ஆட்சி காலத்துக்கு முன் திரைத்துறை எப்படி செயல்பட்டது என்று உங்களுக்கே தெரியும். ஒருசிலரின் லாபத்துக்காக திரைத்துறை சிலரின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் இப்போது எனது ஆட்சியில் அப்படியில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக திரைத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. எனது ஆட்சியில் ஏராளமான உதவிகள் திரைத்துறைக்கு செய்யப்பட்டுள்ளது. தேவையான உதவிகள் இன்னும் தொடர்ந்து அளிக்கப்படும் என்றார்.
ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் கமலின் விஸ்வரூபம் தடையை சந்தித்தது. பிற நாடுகள், மாநிலங்களில் படம் வெளியான பிறகும் கலவரம் வெடிக்கும் என தமிழ அரசு படத்தை இங்கு மட்டும் தடை செய்தது. நீதிமன்றம் சென்று நீண்ட போராட்டத்துக்குப் பின்பே படத்தை வெளியிட முடிந்தது.
கடந்த தேர்தலில் திமுக வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வடிவேலால் பிறகு படங்களிலேயே நடிக்க முடியவில்லை. சினிமா நூற்றாண்டு விழாவில் அவர் கலந்து கொள்ள விரும்பியதாகவும், அரசு தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் சில பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன.
அதேபோல் விஜய்யின் தலைவா படமும் அரசின் நெருக்கடியை சந்தித்தது. விஸ்வரூபம் போலவே வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் வெளியான படம் இரண்டு மூன்று வாரங்கள் கழிந்தே தமிழகத்தில் வெளியானது.
இவை அனைவருக்கும் தெரிந்த நிலையில் திரைத்துறை தனது ஆட்சியில் சுதந்திரமாக செயல்படுகிறது என்ற முதல்வரின் பேச்சு அனைவருக்கும் ஆச்சார்யத்தை அளித்தது.
'எனது ஆட்சியில் திரைத்துறை சுதந்திரமாக செயல்படுகிறது'
இன்று மாலை முதல்வர் குத்து விளக்கேற்றி இந்திய சினிமாவின் நூற்றாண்டுவிழா கொண்டாட்டத்தை தொடங்கி வைக்கிறார். முதல்நாள் தமிழ் திரைக்கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதுபோன்ற நிகழ்ச்சிகளின் முதல் மற்றும் முக்கிய டார்கெட், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை. முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டால்தான் ஒளிபரப்பு உரிமைக்கு அதிக பணம் கிடைக்கும், ரசிகர்களும் விரும்பிப் பார்ப்பார்கள்.
பெப்சி தொழிலாளர்கள் சார்பில்...
நடந்த விழாவில் ரஜினிகாந்திடம் கே.பாலசந்தர் கேள்விகள் கேட்க, ரஜினி பதில் சொல்வது போல் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். நீங்களும் பார்த்திருப்பீர்கள். அதுபோன்ற கேள்வி பதில் நிகழ்ச்சியை இன்று ஒழுங்கு செய்துள்ளனர்.
இந்தமுறை கமல், ரஜினி இருவரும் கேள்வி - பதில் நிகழ்ச்சியில் பங்கு பெறுகின்றனர். அவர்களிடம் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார் இருவரும் கேள்விகள் கேட்பார்கள். இன்றைய தொடக்க நிகழ்ச்சியில் அஜித் கலந்து கொள்கிறார்.
விஜய், வடிவேலு இருவரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என தெரிகிறது.
கேள்வி - பதில் நிகழ்ச்சியில் கமல், ரஜினி
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் செல்வாக்கு குறித்து பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும் என்று தி.மு.க எம்.பி. கனிமொழி கூறினார்.
ஆரணி வழியாக போளூருக்குச் சென்ற எம்.பி. கனிமொழிக்கு திருவண்ணாமலை மாவட்ட எல்லையான ஆரணியை அடுத்த அப்பந்தாங்கல் கிராமத்தில் திமுக மாவட்ட செயலாளர் எ.வ.வேலு தலைமையில் மேளதாளத்துடன் அக்கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் ஆரணி விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, "பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்திருப்பது அக்கட்சியின் விருப்பம். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் நரேந்திர மோடியின் செல்வாக்கு தெரியும்" என்றார்.
'மோடியின் செல்வாக்கு தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும்'
இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் சினிமா நூற்றாண்டு விழாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். முன்னாள் நடிகைகள் சரோஜாதேவி, வைஜெயந்திமாலா ஆகியோரும் குத்து விளக்கேற்றினர். பிறகு சினிமா குறித்தும், அதன் வளர்ச்சி குறித்தும் ஜெயலலிதா உரையாற்றினார்.
திரைப்படங்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி பேசிய முதல்வர் ஜெயலலிதா சமூகத்தை நல்வழிப்படுத்துவதே திரைப்படங்களின் நோக்கமாக இருக்க வேண்டும், வன்முறை, ஆபாசம் கூடாது என்றார்.
திரைத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு முதல்வர் நினைவுப்பரிசுகளை வழங்கினார். கமல்ஹாசன், ரஜினிகாந்த், இளையராஜா, எஸ்.எஸ்.ஆர்., ஏ.வி.எம்.சரவணன், எல்.ஆர்.ஈஸ்வர், கவிஞர் புலமைப்பித்தன், சிவகுமார், ஆர்.பி.சௌத்ரி, மனோரமா, ஜெயசுதா, ஜெயப்ரதா, த்ரிஷா, சிம்ரன், வசனகர்த்தா ஆரூர்தாஸ் ஆகியோர் விருது பெற்றவர்களில் சிலர்.
விழாவில் முதல்வருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
சினிமா நூற்றாண்டு விழா: ஜெ. விருது வழங்கினார்
பெயரில் திருப்பதி இருப்பதாலா தெரியவில்லை. திகட்ட திகட்ட திருப்தி வரும்வரை சம்பளம் தருகிறார்கள். நிறுவனத்தின் முதலாளி முன்னணி இயக்குனராக இருந்தாலும் சம்பள விஷயத்தில் படு தாராளத்தை இந்த சகோதரர்கள் கடைபிடிக்கிறார்கள்.
சமீபத்தில் சங்கம் வைத்து வெற்றி பெற்ற ஹீரோவும், இயக்குனரும் இவர்களின் தயாரிப்புக்காக ஒரு படம் பண்ணுகிறார்கள். இயக்குனருக்கு 75 லட்சங்களும், ஹீரோவுக்கு 5 கோடியும் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. இரண்டாவது படத்தில் இப்படியொரு சம்பளம் ஒரு இயக்குனருக்கு கிடைப்பது அரிது.
அதேபோல் சங்கத்துக்கு இரண்டுக்கும் குறைவாகதான் சம்பளம் வாங்கினார் ஹீரோ. இப்போது ஐந்தாக அது உயர்ந்திருக்கிறது. இப்படியே உயர்த்தி எட்ட முடியாத உயரத்தில் நீங்களே வச்சுகிட்டா எப்படி திரையுலகம் செழிக்கும் பிரதர்?
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்த சுட்ட கதை, நளனும் நந்தினியும் படங்களை வேந்தர் மூவிஸ் வாங்கியிருந்தது. ஆனால் படத்தை வெளியிடாமல் மாதங்களை கடத்த, சொந்தமாக படத்தை வெளியிடுவது என்று முடிவெடுத்திருக்கிறார் ரவீந்தர்.
வேந்தர் மூவிஸ் சுட்ட கதை, நளனும் நந்தினியும் படங்களின் விநியோக உரிமையை வாங்கி பல மாதங்களாகிறது. இவ்விரு படங்களின் பாடல்கள் வெளியீட்டு விழாவை வெனிஸில் வேந்தர் மூவிஸ் பிரமாண்டமாக நடத்தியது. ஆனால் படத்தை மட்டும் வெளியிடாமல் தாமதப்படுத்தியது.
இந்நிலையில்...
விஜய்யின் தலைவா படத்தை வாங்கியதால் லிப்ரா புரொடக்ஷன்ஸின் இரு படங்களின் வெளியீட்டை மீண்டும் ஒத்திப் போட்டது. தலைவாவும் வெளியாகி தன்னுடைய ஓட்டத்தை முடித்துக் கொண்டது.
ஆனாலும் சுட்ட கதை, நளனும் நந்தினியும் படத்தை வேந்தர் மூவிஸ் வெளியிடவில்லை. அதற்குப் பதில் விஷாலின் பாண்டிய நாடு படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருக்கிறது.
வேந்தர் மூவிஸ் தனது படத்தை கண்டு கொள்ளாததால் சுட்ட கதை, நளனும் நந்தினியும் படங்களை தானே வெளியிடுவது என்று முடிவெடுத்திருக்கிறார் ரவீந்தர் சந்திரசேகர்.
சுட்டகதை, நளனும் நந்தினியும் - கைகழுவியது வேந்தர் மூவிஸ்
நகைச்சுவை நடிகர் கருணாஸ் கோவையை அடுத்த பள்ளப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசியதாக பெருந்தலைவர் மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து அக்கட்சியினர் இன்று காலை அண்ணாநகரில் உள்ள கருணாஸ் வீட்டின் முன் திரண்டனர். கருணாசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதனையடுத்து 150 பேர் கைது செய்யப்பட்டனர். காமராஜர் எல்லா சமுதாயத்துக்கும் பொதுவான தலைவர் என் மரியாதைக்கு உரியவர். அவர் தந்த சத்துணவை சாப்பிட்டுத்தான் ஒடுக்கப்பட்டோர் உயர்ந்த நிலைக்கு வந்தனர். அவரைப் பற்றி தவறாக பேசியதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என்று அறிக்கையில் கருணாஸ் குறிப்பிட்டு உள்ளார்.
நடிகர் கருணாஸ் வீடு முற்றுகை!
சமீபத்தில் துபாயில் நடந்த விருது வழங்கும் விழாவில் அனைவரையும் கவர்ந்தது அந்த பழைய ஜோடி. தமிழ் மாமி, ஆந்திரா ஹீரோ.
உச்ச நடிகரின் ட்ராப்பான இரண்டெழுத்து படத்தின் பெயர் கொண்டவர் தெலுங்கு ஹீரோ. அவருக்கும் மாமிக்கும் காதல் என்று சில வருடங்கள் முன் பலமாக கிசுகிசுக்கப்பட்டது.
நடிகர் இந்தியில் நடிக்கச் சென்றதோடு அந்த கிசுகிசு முடிவுக்கு வந்தது. இந்நிலையில் விருது விழாவில் இவர்கள் ஒன்றாக சுற்றிக் கொண்டிருந்ததையும், நெருக்கமாக நட்பு பாராட்டியதையும் பார்த்து, நெருப்பு அணையலை, இன்னும் கனன்று கொண்டுதான் இருக்கு என சக நட்சத்திரங்கள் கமெண்ட் செய்திருக்கிறார்கள். மாமியின் ஜோவியலான கேரக்டரை அறிந்தவர்கள் இதெல்லாம் சகஜம்பா, காதல் எல்லாம் கிடையாது என்கிறார்கள். எது எப்படியோ, துபாய் விழா இந்த ஜோடிக்கு புத்துணர்ச்சியை தந்திருக்கிறது.
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் படங்கள் மட்டுமே யுகே யில் வெளியிடப்படும். சிவ கார்த்திகேயனின் படத்துக்கும் இப்போது அந்த அந்தஸ்து கிடைத்திருக்கிறது.
சிவ கார்த்திகேயன், சூரி, சத்யராஜ;, ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளிவந்திருக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் சிவ கார்த்திகேயனின் மாஸுக்காக யுகே யில் வெளியிடப்பட்டிருக்கிறது.
முதல் வார இறுதியில் இப்படம் பத்து திரையிடல்களில் 17,311 பவுண்ட்களை வசூலித்துள்ளது. நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 17.33 லட்சங்கள்.
இந்த வசூல் சிவ கார்த்திகேயனின் பெயருக்காக கிடைத்தது என்ற வகையில் டீசன்டான வசூல்தான்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் தமிழகத்தில் பிரமாதமான வசூலுடன் ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
யுகே.யில் அசத்தும் சிவகார்த்திகேயனின் வாலிபர் சங்கம்!
ஒரு தேர்தலில் அதிமுகவையும், மறுதேர்தலில் தங்களையும் மக்கள் தேர்வு செய்வார்கள் என்ற எண்ணத்தில் திமுக இருந்து கொண்டிருக்கிறது. அந்த எண்ணம் இனி எக்காலத்திலும் ஈடேறாது என்று பரிதி இளம்வழுதி தனது உரை ஒன்றில் கூறியுள்ளார்.
வேலூர், விருதம்பட்டு பெரியார் திடலில் வெள்ளிக்கிழமை மாலை அண்ணாவின் 105-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் அதிமுக சார்பில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பரிதி இளம்வழுதி பேசியது:
பலருடைய நூல்களை நாட்டுடமையாக்கிய கருணாநிதிக்கு, அண்ணாவின் நூல்களை நாட்டுடமையாக்க மனமில்லை.
ஒரு தேர்தலில் அதிமுகவையும், மறுதேர்தலில் தங்களையும் மக்கள் தேர்வு செய்வார்கள் என்ற எண்ணத்தில் திமுக இருந்து கொண்டிருக்கிறது. அந்த எண்ணம் இனி எக்காலத்திலும் ஈடேறாது. மக்களுக்கான இயக்கம் அதிமுக மட்டுமே என்பதை எல்லோரும் உணரத் தொடங்கி விட்டார்கள். அண்ணாவின் கனவுகளை நனவாக்கும் ஆட்சியை முதல்வர் ஜெயலலிதா நடத்தி வருகிறார்.இதை இப்போதாவது உணர்ந்து திமுகவில் இருப்பவர்கள் அதிமுகவில் இணைய வேண்டும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று நாட்டின் பெரும்பாலான தலைவர்கள் எதிர்பார்ப்போடு உள்ளனர்.
இந்தியாவை இந்திராகாந்திக்கு பிறகு...
ஆளக்கூடிய திறமை படைத்தவராக முதல்வர் ஜெயலலிதா உள்ளார் என்பதை வெளிநாட்டு பத்திரிகைகள் எழுதுகின்றன. தமிழகத்தில் என்எல்சி பிரச்னைக்கு எப்படி தீர்வு கண்டாரோ அதேபோன்ற தீர்வுகளை இலங்கை பிரச்னை, கச்சத்தீவு பிரச்னை, காவிரி பிரச்னை ஆகியவற்றில் காண முதல்வர் ஜெயலலிதாவால் மட்டுமே முடியும். அதனால்தான் அவர் நாட்டின் பிரதமராக வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலில் புதுவை உள்பட 40 இடங்களையும் அதிமுக கைப்பற்றுவதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார் பரிதி இளம்வழுதி.
திமுக இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது
Labels
tv serials
(682)
tv news
(553)
tv shows
(437)
cinema news
(424)
puthiya
(243)
Sun Tv Serials
(233)
captain
(173)
vijay tv shows
(162)
vijay tv serials
(145)
other
(108)
NEWS
(106)
cinema interviews
(104)
sun tv shows
(99)
singer
(93)
super singer 4
(93)
raj tv serials
(85)
raadanserials
(83)
raj
(82)
cinema news
(81)
cooking
(80)
zeetamil
(78)
thanthi
(76)
zeetamil serials
(76)
suriayavanakkam
(68)
polimer tv serials
(65)
spiritual
(63)
captaintvnews
(62)
press meet
(58)
interviews
(55)
sun news
(51)
saregama
(45)
audio
(44)
events
(36)
diwali
(34)
recipes
(34)
eelam
(33)
vivathamedai
(31)
comedy
(29)
rasi
(29)
other shows
(26)
Tamil New Year 2013 Programs
(24)
vimarsanam
(24)
songs
(23)
yoga
(23)
Trailer
(22)
beautytips
(22)
solvathellamunmai
(22)
amazing
(21)
sathiyamtv
(21)
kaatrukkenna veli
(20)
home funny
(19)
pillai nila
(19)
health
(18)
koffee with suchi
(18)
mundhanai mudichu
(18)
sports
(18)
2013
(17)
Uravugal Thodarkathai
(17)
koppiyam
(17)
madhubala
(17)
Thendral
(16)
Valli
(16)
anjaraipetti
(16)
thayumanavan
(16)
Rudhra Veenai
(15)
crimestory
(15)
nadheswaram
(15)
puthuyugam
(15)
selvi
(15)
Bommalattam
(14)
Pattimandram
(14)
Saravanan Meenakshi
(14)
Sindhu Bairavi
(14)
achilvandhavai
(14)
chitthi
(14)
cinema seithigal
(14)
deivam thandha veedu
(14)
deivamagal
(14)
elavarasi
(14)
thangai
(14)
Chinna Papa Periya Papa
(13)
Devathai
(13)
Ponnunjal
(13)
annamalai
(13)
arasi
(13)
athu
(13)
homeminister
(13)
jayatv
(13)
kanavan
(13)
kedi boys killadi girls
(13)
magalirkaaga
(13)
manvasanai
(13)
mutharam
(13)
nalla neeram
(13)
politics
(13)
samayalmanthiram
(13)
sollungaboss
(13)
ullam kollai pogudhada
(13)
virunthinarpakkam
(13)
Azhagi
(12)
Sontha Bandham
(12)
atlas
(12)
dhinapalan
(12)
entertainment
(12)
luckkakickka
(12)
office vijay tv serial
(12)
puguntha veedu
(12)
seeman
(12)
aalayavazhipadu
(11)
karuthamma
(11)
mamiyaarthevai
(11)
maruthuvaneram
(11)
rani
(11)
sakthi
(11)
Sivam
(10)
bhama vijayam
(10)
captain tv shows
(10)
deivavazhipaadu
(10)
nigalvugal
(10)
saami potta mudichu
(10)
shooting spot
(10)
sunsinger
(10)
toptennews
(10)
adhitya
(9)
ayutha
(9)
captainvasthu
(9)
inthanaal
(9)
jodiseason6
(9)
kalaigar
(9)
kalakkapovathuyaaru
(9)
mahabharatham vijay tv serial
(9)
puthuarthangal
(9)
vaangapesalam
(9)
aanmigakathaigal
(8)
dhinamjothidam
(8)
krishna
(8)
masala kudumbam
(8)
nilavae malare
(8)
pondatti
(8)
raja
(8)
velan
(8)
atthipookkal
(7)
bootham
(7)
captaintvserials
(7)
karunamanjari
(7)
maruthani
(7)
shiradijaisairam
(7)
soolam
(7)
then
(7)
veetukkuveedu
(7)
Paasa Malar
(6)
kadhalukku Salam
(6)
mega
(6)
moondru mudichu
(6)
neeya
(6)
nerpadapesu
(6)
vamsam
(6)
7c
(5)
captainsports
(5)
dance
(5)
marumanam
(5)
nenjam pesuthe
(5)
vadivelu
(5)
accidents
(4)
doctorx
(4)
kitchen superstars
(4)
mozhi
(4)
namma
(4)
pongal2014
(4)
sunmusichd
(4)
superkudumbam
(4)
uravugal sangamam
(4)
Ganga Yamuna Saraswathi
(3)
Idhu Kadhala
(3)
Marakatha Veenai
(3)
Mayakkam Enna
(3)
Nandhavanam
(3)
bairavi
(3)
goundamani
(3)
hot news
(3)
kalyanamaalai
(3)
kavithai
(3)
kuttychutties
(3)
nanbenda
(3)
robbery
(3)
sapthanimidangal
(3)
superdancer
(3)
tamil pechu engal moochu
(3)
top10movies
(3)
vijay tv shows
(3)
60seconds
(2)
Chellakili
(2)
En Vazhkai
(2)
Zee tamil
(2)
asathalarangam
(2)
beauty
(2)
cinema360
(2)
hairstyles
(2)
kalaingar
(2)
keerthanatips
(2)
mahabharatham
(2)
old tamil songs
(2)
polimer
(2)
puthu
(2)
raj tv shows
(2)
sollunganne
(2)
sundaygalatta
(2)
tv shiows
(2)
tv shows vijay tv shows
(2)
tvnews
(2)
ungal
(2)
vazhkaikovilgal
(2)
Arasiyalla
(1)
Gama
(1)
Makkalukkaga
(1)
Orukaiosai
(1)
Zee tamil shows
(1)
agnii
(1)
amuthamozhigal
(1)
chinnasanthippu
(1)
cienma news
(1)
cinema
(1)
discovery tamil
(1)
gossip
(1)
historyfiles
(1)
kadupethuraangalord
(1)
kayitham
(1)
malli
(1)
mp3
(1)
nijam
(1)
payanam
(1)
penn
(1)
rachaeltips
(1)
ras
(1)
saathanaipengal
(1)
santhanam
(1)
sareg
(1)
sathya
(1)
senthil
(1)
short
(1)
sivasankari
(1)
sports puthiya
(1)
thenali dharbar
(1)
tvshows
(1)
tvv news
(1)
unarvugal
(1)
varthagaulagam
(1)
veppilai
(1)
vivathameda
(1)
yog
(1)


















































