Recent Posts
Thursday, 19 September 2013
Shiradi Jai Sairam 20-09-2013 - Captain TV Serial | Shiradi Jai Sairam –20-09-2013 | Captain Tv Serial Shiradi Jai Sairam 20-09-13 | Captain TV Serial 20th Sep 2013 | Shiradi Jai Sairam 20th Sep 2013 | Shiradi Jai Sairam 20.09.13 | Captain tv Shiradi Jai Sairam 20/09/13
Captain TV News 20-09-2013 | Captain Tv Tamil News | Captain News 20th Sep 2013
captain News TV, adutha vaarisu, Shanmuga Pandian, Pongal, Jallikattu, Alnganallur, mattu pongal, merina beach, besent nagar beach, Captain News Reader Swetha, Captain News Reader Papeetha, Captain News Reader Ramya, Captain News VJ Divya, narendra modi gujarat election, himachal pradesh, tsunami, japan china war, dayanithi azhagiri granite case, 2013,thala, Ajith Kumar,happy new year, christmas, x-mas, Aamir Khan, Sepan calendar, Sepan, kamalahasan vishvaroobam, david ,vishwaroobam movie booking,Svishvaroobam, paradesi, adarva, director bala, aadhibagavan, sattam oru iruttarai, 13 Sep 2013, rani Mukherjee.
Captain TV News 07.00 A.M 20-09-2013 | Captain Tv Tamil News | Captain News 20th Sep 2013
Raja Rajeswari is about Lakshmi Amma, an ardent devotee of Goddess Raja Rajeswari, her son Rajan and how they win destiny with the grace of God.
Cast: Prithviraj, Malavika Avinash, KR Vijaya, Fathima, Aishwarya, Rajasekhar, Bhuvaneswari, Vietnam Veedu Sundaram, Baby
Praharshitha
Singers: Manicka Vinayagam, Periya Karuppu Thevar, Baby MR Divya, M John Nirmal
Music: X Paulraj
Story, Screenplay: Selvapandi
Director: BR Vijayalakshmi
Raja Rajeswari Episode 96
Cast: Prithviraj, Malavika Avinash, KR Vijaya, Fathima, Aishwarya, Rajasekhar, Bhuvaneswari, Vietnam Veedu Sundaram, Baby
Praharshitha
Singers: Manicka Vinayagam, Periya Karuppu Thevar, Baby MR Divya, M John Nirmal
Music: X Paulraj
Story, Screenplay: Selvapandi
Director: BR Vijayalakshmi
Raja Rajeswari Episode 96
Raja Rajeswari Episode 96
பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா ஏ - வெஸ்ட் இண்டீஸ் ஏ மோதிய 3வதும் கடைசியுமான ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணியை வென்று வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி ஒருநாள் தொடரை 2- 1 என்று கைப்பற்றியது.
முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் எட்வர்ட்ஸின் சதத்துடன் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்கள் விளாசியது. தொடர்ந்து ஆடிய இந்தியா ஏ அணி 50 ஓவர்களில் 267 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.
முதல் ஒருநாள் போட்டியில் யுவ்ராஜ் சதம் மற்றும் யூசுப் பத்தான் அதிரடியில் வென்ற இந்தியா ஏ அடுத்த 2 போட்டிகளில் தோல்வி தழுவியது.
டாஸ் வென்ற யுவ்ராஜ் சிங் முதலில் மேற்கிந்திய அணியை பேட் செய்ய அழைத்தார். அந்த அணியின் துவக்க வீரர்கள் பிளெட்சர்(28), போவெல் (40) துவக்க விக்கெட்டுக்காக 13.2 ஓவர்களில் 74 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுக்க, எட்வர்ட்ஸ் 12 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 104 ரன்கள் விளாசினார்.
கார்ட்டர் 35 ரன்களையும், ஜான்சன் 54 ரன்களையும் எடுத்து வலு சேர்த்தனர். கடைசி 8 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 74 ரன்கள் குவித்தது. உடட்கட் 5 விக்கெட்டுகளை கக்ப்பற்றினாலும் யுவ்ராஜ், யூசுப் பத்தான், அபராஜித், கவுல் ஆகியோர் ரன்களை வாரி வழங்கினர்.
தொடர்ந்து ஆடிய இந்தியா ஏ அணியில் உத்தப்பா 27 ரன்களில் வெளியேறினார். அபராஜித், யுவ்ராஜ் 19 ஓவர்களில் 3வது விக்கெட்டுக்காக 112 ரன்களைச் சேர்த்து நம்பிக்கை அளித்தனர்.
ஆனால் 59 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களை விளாசிய கேப்டன் யுவ்ராஜ் நர்ஸ் வீசிய அபாரமான தூஸ்ராவுக்கு ஸ்டம்ப்களை இழந்தார். அபராஜித் 78 ரன்களில் ஆட்டமிழக்க 33வது ஓவரில் 181/4 என்று தடுமாறியது.
யூசுப் பத்தன் மட்டுமே அதிரடி வீரராக மீதமிருந்தார். ஆனால் அவர் தடவு தடவென்று தடவி 18 ரன்களில் அசிங்கமாக அவுட் ஆகி வெளியேறினார்.
கடைசியில் வினய் குமார் 37 ரன்கள் எடுத்து பொழுதுபோக்கைக் கூட்டினார். ஆனால் வெற்றி கைகூடவில்லை.
தொடரை இழந்தது இந்தியா ஏ.
கிரிக்கெட்: தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் ஏ - இந்தியா ஏ 3வது போட்டியில் தோல்வி!
த டார்க் நைட் ரைசஸ் படத்துடன் கிறிஸ்டியன் பேய்ல் பேட்மேன் ட்ரெஸ்ஸை கழற்றியதால் அடுத்த பேட்மேனாக நடிகர் பென் அஃப்லெக்கை தேர்வு செய்திருக்கிறார்கள். ஆன் லைனில், அவரா பேட்மேன் என்று பேட்மேன் ரசிகர்கள் கதறியது நினைவிருக்கலாம். தற்போது தனது புதிய ரன்னர் ரன்னர் படத்தை புரமோட் செய்வதில் அஃப்லெக் பிஸி.
ரன்னர் ரன்னர் படம் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகிறது. டுவென்டியன்த் செஞ்சுரி பாக்ஸ் தயாரித்திருக்கும் படத்தை இயக்கியிருப்பது பிராட் ஃபர்மன்.
படத்தின் புரமோஷனின் போது பேட்மேனாக பென் அஃப்லெக் நடிப்பது பற்றி கேட்கப்பட்டது. முக்கியமாக இணையத்தில் அவருக்கு எழுந்த எதிர்ப்பு. இன்னொரு நடிகராக இருந்தால் சீரியஸாகியிருக்கக் கூடும். அந்தளவுக்கு பென் அஃப்லெக்கை ரசிகர்கள் கலாய்த்திருந்தனர்.
பேட்மேனாக ஸ்டுடியோ அவரை ஒப்பந்தம் செய்ததும் அவரிடம் கேட்டுக் கொண்டது, கொஞ்ச நாள் இணையத்தை பார்க்காதீர்கள் என்பதுதானாம். அதற்கு பதிலளித்த அஃப்லெக், ஐ யம் ஏ பிக் பாய் என்று கூறிவிட்டு முதலில் இணையத்தைதான் பார்த்திருக்கிறார். முதல் கமெண்டே, பென் அஃப்லெக்கா பேட்மேன்? நோ என்றிருந்திருக்கிறது.
படு காமெடியாகதான் இந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டார் பென் அஃப்லெக். பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன் படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் அதிருப்தி ரசிகர்களின் ஆதரவை பெற்றுவிடுவார் என்றுதான் தோன்றுகிறது.
புதிய பேட்மேன் சொல்வதை கேளுங்கள்
ஹாரிபாட்டர் நாவலினால் உலகம் முழுவதும் பிரபலமான, உலகின் மிகப்பணக்கார எழுத்தாளராக மாறிய ஜே.கே.ரவ்லிங் மீண்டும் சினிமாவுக்கு வருகிறார்.
ஹாரிபாட்டர் கதையில் வரும் மேஜிக்கல் கிரியேச்சர்ஸ் குறித்த புத்தகத்தை 2001 ல் ரவ்லிங் வெளியிட்டார். புத்தகத்தின் பெயர் Fantastic Beasts and Where to Find Them. ஹாரிபாட்டர் கதையில் ஹாரிபாட்டர் இந்தப் புத்தகத்தை வைத்திருப்பதாக வரும்.
ஹாரிபாட்டர் கதை நிகழ்வதற்கு 70 வருடங்களுக்கு முன் நடக்கும் கதைதான் இந்தப் புத்தகத்தில் உள்ளவை. ஒருவகையில் ஹாரிபாட்டரின் ப்ரிக்வெல். அதனை சினிமாவாக எடுக்கிறது வார்னர் பிரதர்ஸ். அதற்காக ரவ்லிங்குடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்.
முக்கியமாக படத்தின் திரைக்கதையை ரவ்லிங்தான் எழுதயிருக்கிறார். ஏழு பாகங்கள் திணறத் திணற எடுத்த பிறகும் ஹாரிபாட்டர் மீதான தாகம் ஹாலிவுட்டுக்கு குறையவில்லை. ஹாரிபாட்டரைப் போலவே இந்த படத்தையும் பல பாகங்களாக எடுக்கிறது வார்னர் பிரதர்ஸ்.
பாக்கெட்டை காலி பண்ணாமல் ஓயமாட்டார்கள்.
ஹாரிபாட்டர் ஜே.கே.ரவ்லிங் பராக் பராக்
வெல்ல முடியாத சோதனைகள்
சினிமா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முக்கிய நட்சத்திரங்களை வருந்தி அழைக்கிறார்கள். ரஜpனி, கமல் எல்லாம் கலந்து கொள்கிறார்கள். விஜய்க்கு அழைப்பிதழ் தரலாமா, கூடாதா என்பதை விழாக்குழுவால் தீர்மானிக்க இயலவில்லை என்கிறார்கள். யார் யாருக்கு அழைப்பு என்பதை அரசுதான் தீர்மானிக்கிறது என்றும் கூறப்படுகிறது.
பொதுவான விழாவுக்கு சொந்த கோபதாபங்களை காட்டுவது சரியானதல்ல. ஆனால் காலங்காலமாக அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. விழாவில் பங்கேற்பதால் விஜய்யின் மவுசு தடாலடியாக உயரப் போவதில்லை. பங்கேற்காததால் எதுவும் குறைந்துவிடப் போவதுமில்லை. விஜய்யைப் பொறுத்தவரை எல்லாமே ஒன்றுதான். அதே நேரம் மனரீதியாக தொடுக்கப்படும் இந்த தாக்குதல்கள் எந்த நடிகருக்கும் நெருக்கடியானதே.
இதுபோன்ற நெருக்கடிகளை வெளிப்படையாக அணுக முடியாத மொண்ணையான அமைப்பாக திரைத்துறை இருப்பதுதான் கவலைக்குரியது. கேரளாவிலோ, ஆந்திராவிலோ, கர்நாடகத்திலோ இப்படி ஒரு நடிகரை தனியாக கட்டம் கட்ட முடியுமா?
இப்படியும் காமெடியை ரசிக்கலாம்
டிவியில் ஒரே காமெடியை போட்டு போரடிக்கிறாங்க என்று கவலையா? கவலையே வேண்டாம். பார்த்த காமெடியிலேயே பார்க்காத விஷயங்கள் நிறைய இருக்கும். முக்கியமாக காமெடி காட்சிகளின் பேக்ரவுண்ட். மருதமலை படத்தில் அம்மா பாசத்தில் அழும் அக்யூஸ்ட் கிரேன் மனோகரை வடிவேலு வலுக்கட்டாயமாக அர்ஜுனின் பேச்சை மீறி அழைத்துச் செல்லும் காட்சி நினைவிருக்கிறதா? கிரேன் மனோகர் எஸ்கேப் ஆகும் அந்தக் காட்சியின் பின்னணியில் பலரும், தெரு மாதிரியான சூழலை உருவாக்க நடந்து கொண்டிருப்பார்கள். அதில் நடக்கும் அனைவரும் பத்து விநாடிகளுக்கொருமுறை அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்கும் நடந்து கொண்டேயிருப்பார்கள். வடிவேலு காமெடிக்கு இணையாக சிரிப்பை தரக்கூடிய காமெடி இது. அதேபோல் படிக்காதவன் படத்தில் வரும் ரயில்வே ஸ்டேஷன் விவேக் காமெடி. இப்படி பல உதாரணங்கள் சொல்லலாம்.
துணை நடிகர்கள் என்று இயக்குனர்களுக்கு கிடைப்பவர்கள் அவ்வளவு சிறப்பானவர்கள் இல்லை. நிமிர்ந்து பார்க்கச் சொன்னால் பார்ப்பார்கள், நேராக நடக்கச் சொன்னால் நடப்பார்கள். சூழலுக்கு ஏற்ற ரியாக்ஷன் அவர்களிடமிருந்து கிடைப்பது ரொம்ப கடினம். இவர்களை கையாள்வதை வைத்தே இயக்குனரின் திறமையை ரளவு மதிப்பிடலாம்.
நூற்றாண்டுவிழா புறக்கணிப்புகள்
சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் படங்களுக்கே முக்கியத்துவம் தரப்பட்டு திரையிடப்படுகிறது. இவர்கள்தான் நூற்றாண்டுவிழா நாயகர்களா? முதல் மௌனப் படத்தை தந்த நடராஜ முதலியார் தொடங்கி எத்தனையோ இயக்குனர்கள், டெக்னீஷியன்கள் சினிமாவுக்கு பங்களிப்பு செலுத்தியிருக்கிறார்கள். சாதாரண காலங்களில்தான் அவர்களை நினைவுகூர்வதில்லை என்றால் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்திலுமா? பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கிற வகையில் அவர்களை முதன்மைப்படுத்தி படைப்புகளை திரையிட்டிருக்க வேண்டும். சில கோரிக்கைகள் எப்போதும் நிறைவேறுவதில்லை. அதில் இதுவும் ஒன்று.
தீபாவளிக்கு நான்கு படங்கள் சாத்தியமா?
அஜித்தின் ஆரம்பம்...
கார்த்தியின் அழகுராஜா, செல்வராகவனின் இரண்டாம் உலகம், விஷாலின் பாண்டிய நாடு என்று நான்கு படங்கள் தீபாவளியை குறி வைக்கின்றன. தமிழகத்தில் ரிலீஸ் படங்களை வெளியிடுகிற திரையரங்குகளின் எண்ணிக்கை 750 க்குள்தான். அதில் தரமானவை இன்னும் குறைவு. ஒரு மாஸ் நடிகரின் படம் 300 முதல் 350 திரையரங்குகளில் வெளியாகும். எனில் இரண்டு படங்களுக்குதான் திரையரங்குகள் சாத்தியம். முட்டி மோதினால் மூன்று. நான்குக்கு சாத்தியமேயில்லை.
ஆந்திராவில் திரையரங்குகளின் எண்ணிக்கை அப்படியே ஒரு மடங்குக்கு மேல் அதிகம். அங்கு சினிமா ஆரோக்கியமாக இருப்பதற்கு திரையரங்குகளின் எண்ணிக்கையும் பிரதான காரணம். பராமரிப்பில்லாத திரையரங்குகள், அதிக கட்டணம், பார்வையாளர்களை நடத்தும் விதம் எல்லாமும் சேர்ந்து திரையரங்குகளின் எண்ணிக்கையை குறைத்துவிட்டது. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கப் பொறுப்பில் இருப்பவாpன் திரையரங்குகள் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ளது. அந்தத் திரையரங்குகளில் கட்டண விவரம் எதுவும் இருப்பதில்லை. டிக்கெட்டிலும் கட்டணம் ஒருபோதும் குறிப்பிடப்பட்டதில்லை. அவர்களுக்கு தோன்றுவதுதான் கட்டணம்.
இந்த முறைகேடுகளை கண்காணிக்க, நெறிப்படுத்த எந்த முயற்சியும் அதிகாரிகள் தரப்பில் எடுக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட அந்த திரையரங்கு உரிமையாளர்தான் மேடைகளில் சினிமா சீரழிந்துவிட்டது என்று அடிக்கடி மூக்கு சிந்துகிறார். இப்படி நாயணயமில்லாது நடத்தப்படும் வியாபாரம் சீரழியத்தான் செய்யும். சினிமாவின் ஒளிமயமான எதிர்காலம் சினிமாக்காரர்களின் கைகளில்தான் உள்ளது.
பாப்கார்ன் - வெல்ல முடியாத சோதனைகள்
பெண் ஊழியரை சில்மிஷம் செய்த வழக்கில் ஒரு பள்ளியின் வகுப்பறைகளுக்கு ஓராண்டுக்கு தேவையான வாசனை திரவியங்கள் மற்றும் தேவையான பொருட்களை வாங்கித்தரவேண்டும் என்று தொழிலதிபருக்கு நீதிபதி வித்தியாசமான தண்டனை அளித்தார்.
டெல்லி ஆர்கே புரத்தில் வசித்து வரும் பெண் (பெயர் மாற்றப்பட்டுள்ளன) மீனா. குர்கானை சேர்ந்தவர் தீபக். தொழிலதிபர். குர்கானில் உள்ள இவரது நிறுவனத்தில் மீனா, கடந்த 2012 டிசம்பர் முதல் வேலை செய்து வந்தார். தீபக் அடிக்கடி தவறாக நடந்துகொள்ள முயன்றதை தொடர்ந்து மீனா 2013 மார்ச் மாதம் அந்நிறுவனத்தில் இருந்து நின்றுவிட்டார்.
இதையடுத்து மீனா வேறொரு நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார்.இந்நிலையில் கடந்த ஜூன் 29ம் தேதி வீட்டில் மீனா தனியாக இருந்த நேரம் பார்த்து தீபக் வந்தார். மீனாவின் ஆடைகளை பிடித்து இழுத்து சில்மிஷம் செய்தார்.
மீனாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். அதைக்கண்ட தீபக் அங்கிருந்து தப்பியோடினார். இதுபற்றி மீனா போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், தீபக்கை கைது செய்தனர். இதையடுத்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி விசாரித்து வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது:மீனா வீட்டில் தனியாக இருந்தபோது, தீபக் அத்துமீறி உள்ளே நுழைந்து மீனாவை , சில்மிஷம் செய்திருப்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற செயல் செய்ததற்கு நீதிமன்றத்தில் அவர் மன்னிப்பு கடிதமும், வரும் காலங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என்று உறுதியளித்துள்ளார்.
மேலும், தன்னால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.6 லட்சம் நிவாரண தொகை தருவதாக தீபக், நீதிமன்றத்துக்கு வெளியே ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சமரசம் எற்பட்டுள்ளது. இருந்தாலும் அவர் செய்த குற்றத்துக்காக ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கிறேன். அந்த தொகையை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வக்கீல்களுக்கான நூலகம் மற்றும் டெல்லி போலீஸ் நலவாழ்வு சங்கத்துக்கு பிரித்து தரவேண்டும். இதுமட்டும் அல்லாது, ஒரு பள்ளியில் உள்ள வகுப்பறைகளுக்கு ஒரு ஆண்டுக்கு தேவையான அறைவாசனை திரவியங்கள் மற்றும் தேவையான பொருட்களை தீபக் வாங்கித்தர வேண்டும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.
பெண் ஊழியரிடம் சில்மிஷம்; Delhi Highcourt சூப்பர் தீர்ப்பு
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா வரும் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை சென்னையில் நடக்கிறது. விழாவை முன்னிட்டு ஏற்கனவே படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முதல்நாள் நிகழ்ச்சிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.
நான்கு நாட்கள் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை பெரும் தொகைக்கு (சுமார் 22 கோடிகள்) தனியார் நிறுவனம் ஒன்று வாங்கியதாகவும் பிறகு அது ஜெயா தொலைக்காட்சிக்கு கைமாறியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிக்கு விற்பதன் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
இந்நிலையில் முதல்வர் விழாவுக்கு எவ்வளவு செலவாகும் என கேட்டிருக்கிறார். முப்பது கோடிகள் வரை செலவாகும் என்று சொல்ல, உடனே பத்து கோடி ரூபாய் தமிழக அரசு சார்பில் அளித்துள்ளார். இந்த பணத்தைக் கொண்டு நடத்தப்படும் நிகழ்ச்சிகளை ஜெயா தொலைக்காட்சியில் நீங்கள் கண்டு களிக்கலாம்.
நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண் நதியுதவி அளித்ததற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.
சினிமா நூற்றாண்டு விழா - தமிழக அரசு 10 கோடி நிதியுதவி
சில மாதங்கள் முன்புதான் ஜேம்ஸ் வானின் த கன்ஜுரிங் வெளியாகி பாக்ஸ் ஆபிஸை கலக்கியது. சென்ற வாரம் அவரின் இன்சைடியஸ் - சேப்டர் 2 ஹாரர் படம் வெளியானது. இப்போதுதான் வானின் மாஸ்டர் பீஸான த கன்ஜுரிங் வெளியாகியிருக்கிறது. அதற்குள் இன்னொரு படம் என்றால் ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள் என்று ஒரு பிரிவு கூறியது.
த கன்ஜுரிங் படம் பிடித்ததால் ஜேம்ஸ் வான் புதிய படத்தில் என்ன காட்டியிருக்கிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் திரையரங்குக்கு வருவார்கள் என நம்பிக்கை தெரிவித்தது தயாரிப்பு தரப்பு. பாக்ஸ் ஆபிஸ் ரிசல்டில் தயாரிப்பு தரப்புக்குதான் வெற்றி.
வெறும் 5 மில்லியன் டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 3,049 திரையரங்குகளில் வெளியாகி மூன்றே தினங்களில் 40.3 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. த கன்ஜுரிங் வசூலுடன் ஒப்பிட்டால் ஜஸ்ட் ஒரு மில்லியனுக்குள்தான் வித்தியாசம்.
இவ்வளவு அதிக வசூலை யாரும் எதிர்பார்க்கவில்லை. வெள்ளிக்கிழமை வசூலை வைத்து 30 முதல் 35 மில்லியன் டாலர்களை வசூலிக்கும் என்றுதான் கணக்குப் போட்டனர்.
ஜேம்ஸ் வானின் படமும் அனைத்துக் கணக்கையும் காலி செய்துள்ளது.
மீண்டும் பாக்ஸ் ஆபிஸை திணறடித்த ஜேம்ஸ் வான்
நாட்டின் கையிருப்பில் இருந்த வெங்காயத்தின் 90% அளவிற்கு ஏற்கனவே காலியாகிவிட்டதால் வரும் வாரங்களில் வெங்காயம் விலை உயரும் அபாயம் உள்ளது.
அரசின் கையிருப்பில் தற்போது சுமார் 4 லட்சம் டன் வெங்காயம் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. இது சுமார் 10 நாள் விநியோகத்திற்கு மட்டுமே போதுமானதாகும். இந்நிலையில் வெங்காயம் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே வெங்காய விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பதுக்கல் காரர்கள் மற்றும் தரகர்கள் ஏராளமான வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்பதால் செயற்கை பற்றாக்குறை காணப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெங்காய விலையை கட்டுபடுத்த குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை அதிகரிக்குமாறு கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் யோசனை தெரிவித்துள்ளது.
வெங்காயம் விலை மீண்டும் உயரும் அபாயம்
ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவுக்காக ஸ்கிரிப்ட் ஒன்றை எழுதியிருப்பதும் தனது ஒய்எம் புரொடக்சன் சார்பில் ஆரோஸ் இன்டர்நேஷனல்ஸுடன் இணைந்து தயாரிப்பதும் நாம் அறிந்ததே. இந்தப் படத்தை யார் இயக்குவார் என்பது தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் ராஞ்சனா படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் பெயர் முன்மொழியப்பட்டிருக்கிறது.
ஆனந்த் எல்.ராய் ஏற்கனவே இரு படங்கள் இயக்கியிருந்தாலும் 2011ல் வெளியான அவரின் தனு வெட்ஸ் மனு படமே அவரது பெயரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. அதன் பிறகு அவர் இயக்கிய ராஞ்சனா மிகப்பொpய வெற்றியை பெற்றது. தற்போது தனு வெட்ஸ் மனு படத்தின் சீக்வெலை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்.
ரஹ்மான் தனது கதையை இயக்க ஆனந்த் எல்.ராயை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ரஹ்மானின் ஸ்கிரிப்டை இயக்குகிறார் ராஞ்சனா இயக்குனர்?
அழகுராஜா, பிரியாணி படங்களைத் தொடர்ந்து அட்டகத்தி இயக்குனர் ரஞ்சித்தின் இயக்கத்தில் கார்த்தி நடிக்கிறார். இந்தப் படத்துக்கு பெயர் வைக்கப்படாமல் இருந்தது. தற்போது காளி என்று பெயரிட்டுள்ளனர்.
காளி ரஜினி நடித்த படத்தின் பெயர். கார்த்தி, ரஞ்சித் இணையும் படத்துக்கு ரஜினி நடித்தப் படத்தின் பெயரை வைக்கப்போகிறார்கள் என்று சில வாரங்கள் முன்பே கூறப்பட்டது. காளி என்று பெயர் வைக்கப்பட்டதன் மூலம் அது உண்மையாகியிருக்கிறது.
காளியில் கத்ரினா தெரசா நாயகியாக அறிமுகப்படுத்தப்படுகிறார். வட சென்னையை களமாகக் கொண்டு படம் உருவாகிறது. அட்டகத்தியில் அறிமுகமான சந்தோஷ் நாராயணன் இசையமைக்க நாசர், பாலாசிங் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் காளியை தயாரிக்கிறது.
கார்த்தியின் புதிய படம் காளி - அட்டகத்தி ரஞ்சித் இயக்குகிறார்
பிளண்டர்ஸ் பிரைட் விஸ்கியை விளம்பரப்படுத்த நடந்த பேஷன் ஷோவில் சமீரா ரெட்டி அணிந்து வந்த உடை சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிளண்டர்ஸ் பிரைட் விஸ்கியை உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் அதுசார்பாக நடந்த ஃபேஷன் ஷோவில் தோல் நிறத்தில் நெட்டட் உடை அணிந்து வந்ததிருந்தார் சமீரா. உடை ஒன்றும் பெரிய அளவில் ஆபாசமானதல்ல. ஆனால் சில இணைய விஷமிகள் காஸ்ட்யூமில் தங்களின் கைவரிசையை காட்டி ஆபாசமாக சித்தரித்தனர். அது சர்ச்சையை கிளப்பியது.
நான் எப்படி உடை அணிய வேண்டும் என்று யாரும் அறிவுரை சொல்ல வேண்டாம் என காட்டமாக பதிலளித்திருக்கிறார் சமீரா.
சர்ச்சையை கிளப்பிய சமீராவின் உடை
கேள்விக்குள்ளாகாத எதுவும் புனிதமாகிவிடும், புனிதமானதாக கருதும் எதுவும் கேள்விக்குள்ளாகாது என்பதை ஆன்மீகவாதிகளைவிட அதிகம் தெரிந்து வைத்திருப்பவர்கள் அரசியல்வாதிகள். அவர்களால் புனிதப்படுத்தப்பட்ட ஒன்று இந்திய ராணுவம்.
தேசபக்தியின் பௌதிக வடிவமாகதான் இந்தியாவில் ராணுவம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனை கேள்விக் கேட்கிற எவரும் அடுத்தகணம் தேசவிரோதியாக முத்திரைக் குத்தப்படுவர். ஜெயமோகன் போன்றவர்கள் அப்படி கேள்வி கேட்பவர்களுக்கு கூலி அறிவுஜீவிகள் என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்திய ஒருமைப்பாடை குலைப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து பணம் பெறும் கருங்காலிகள் இவர்கள் என்பது ஜெயமோகனின் கூற்று.
இந்தியாவின் எல்லை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வதில் ராணுவத்தின் பங்கு முக்கியமானது. அதில் மாற்று கருத்தில்லை. அதேநேரம் இந்தியாவின் பிற அரசு நிறுவனங்களைப் போல இதுவும் ஒரு நிறுவன கட்டுமானம் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். அல்லது மறக்கடிக்கப்பட்டிருக்கிறோம். ராணுவம் தேசபக்தியின் பௌதீக அடையாளமாக்கப்பட்டதன் விளைவாக, போரில் இறக்கும் வீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்துவதுடன் நமது கடமை முடிந்துவிடுகிறது. அரசியல்வாதிகள் இந்த எல்லைக்கப்பால் யாரையும் அனுமதிப்பதில்லை. ராணுவத்தை தேசபக்தியுடன் இணைப்பதன் வழியாக அதனை காலங்காலமாக அவர்கள் சாதித்தும் வந்திருகிறhர்கள்.
ராணுவத்தை கொண்டாடாத அரசியல்வாதி இந்தியாவில் இல்லை. ராணுவ வீரனாக இருப்பதே மகத்தானது என்று அவர்கள் நம்மை போதிக்கிறார்கள். அப்படி போதிப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் ராணுவத்தில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை. இந்தியாவில் எம்பி கள், எம்எல்ஏ க்கள், மந்திரிகள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், பிரதமர் என்று மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில். இவர்களில் எத்தனை பேர் ராணுவப் பணியில் தங்கள் குடும்பத்தினரை ஈடுபடுத்தியிருக்கிறார்கள்? எத்தனை பேரின் பிள்ளைகள் கார்கில் போன்ற போர்களில் உயிரிழந்திருக்கிறhர்கள்? யாருமில்லை என்பதுதான் இதற்கான பதிலாக இருக்கும். அதேநேரம் அமெரிக்காவில், சினிமாவில், அரசியலில் இவர்களின் வாரிசுகள் எத்தனை பேர் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று பார்த்தால் நமது மக்கள் பிரதிநிகள் கிட்டத்தட்ட அனைவருமே வளையத்துக்குள் வந்துவிடுவார்கள்.
இந்த இடத்தில் மனம் திறந்து சில உண்மைகளை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். எல்லாத் துறைகளிலும் அர்ப்பணிப்புணர்வுடைய பலர் இருப்பது போலவே, ராணுவத்தை தனது லட்சியமாகக் கொண்டு அதில் பணியாற்றுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் வேலைக்கான உத்தரவாதத்துக்காக மட்டுமே ராணுவத்தில் சேர்கிறார்கள். வேலைக்கான இன்னொரு வாய்ப்பு இல்லாமல் ராணுவத்தை தேர்வு செய்கிறவர்களே அதிகம். அதற்காக அவர்களுக்கு தேசபக்தி இல்லை என்று அர்த்தமில்லை. உயிருக்கு உத்தரவாதமில்லை என்பது தெரிந்தே அவர்கள் ராணுவத்தை நாடுகிறார்கள்.
இந்த நடைமுறை யதார்த்தத்தை மறைத்து ராணுவத்துக்கு புனிதச் சாயம் ஏற்றுவதில் எந்த லாபமும் இல்லை. ராணுவத்தில் நடக்கும் அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் ஊழல்களை மறைப்பதற்கே அது உதவும்.
13-08-13 அன்று மும்பை கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிந்துரக்ஷக் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து சிதறி கடலில் மூழ்கியது. 18 இந்திய வீரர்கள் பலியானார்கள். ஏன் நீர்மூழ்கி கப்பல் வெடித்தது, என்ன காரணம் என்று இதுவரை பதிலில்லை. வழக்கம்போல மரணமடைந்தவர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தியதோடு சிந்துரக்ஷக் இந்திய மனங்களிலிருந்து மறைந்துவிட்டது.
1997 ல் 400 கோடி தந்து ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட அந்தக் கப்பல் 2012 ல் பராமரிப்புக்காக ரஷ்யா அனுப்பப்பட்டது. வாங்கிய செலவு 400 கோடி என்றால் அதனை சரிசெய்ய செலவு 450 கோடிகள். 2013 ஏப்ரலில் மீண்டும் இந்தியா கொண்டு வரப்பட்டு மும்பையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதுதான் கப்பல் வெடித்தது. 18 இந்திய வீரர்கள் பலி. ஆனால் கப்பலுடன் வந்த ரஷ்ய வீரர்கள் ஹhயாக ஹேhட்டலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். 450 கோடிகள் பராமாpப்பு செலவு பிடிக்கும் ஒரு கப்பலை 400 கோடிகள் கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன? யாருடைய நலனுக்காக வாங்கப்பட்டது?
இந்த கேள்விகள் உண்மைக்கான திசையில் ஒரு அடிகூட முன்னகரவில்லை. இது மட்டுமல்ல. கார்கில் போரில் நூற்றுக்கணக்கான வீரர்கள் பலியானதற்கு தவறான வழிகாட்டலும் ஒரு காரணம் என்ற சர்ச்சை, மும்பை தாக்குதலில் காவல்துறை அதிகாரியின் மரணத்துக்கு தரமற்ற புல்லட்புரூஃப் உடை காரணம் என்ற புகார் என எதுவுமே அடுத்தகட்டத்தை நோக்கி நகரவில்லை.
ராணுவத்தை தேசபக்தியின் வடிவமாகவும், கேள்விக்கப்பாற்பட்ட புனிதமாகவும் கட்டமைத்ததுதான் இதற்கு காரணம்.
அரசியல் கட்சிகளுக்கு தங்களின் விருப்பத்தை செயல்படுத்த கேள்விக்கு அப்பாற்பட்ட அதிகார மையங்கள் தேவை. மத்திய அளவில் ராணுவம் என்றால் மாநில அளவில் காவல்துறை. இவற்றின் தவறான நடைமுறைகளை கேள்விக்குட்படுத்தும் போதெல்லாம் தேசத்தின் ஒற்றுமையை குலைக்கும் சதி, தேசத்தை பலவீனமாக்கும் வெளிநாட்டு கூலி அறிவுஜீவிகளின் முயற்சி என்று ஒரே வரியில் கடந்து போகிறார்கள். பொதுமக்களாகிய நாமும் தேசபக்தியின் பெயரால் இந்த கேள்விகளை கண்ணை மூடி கடந்து விடுகிறோம். இந்த மௌனத்தின் விளைச்சல்கள்தான் போபர்ஸ் முதல் சவப்பெட்டிவரையிலான ஊழல்களும், சிந்துரக்ஷக் கப்பல் வெடித்து சிதறியதும். இந்த தவறுகளின் முதல் பலனை அனுபவிப்பவர்கள் ராணுவ வீரர்களாகவே எப்போதும் இருக்கிறார்கள். அவர்களுக்கான நீதியை பெற்றுத் தராமல் வீர அஞ்சலி செலுத்தி தேசபக்தி கோஷம் போடுவது அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய அநீதி. நமது இந்த அறியாமையை பயன்படுத்திதான் மத்திய அரசு ராணுவத்தையும் ஊழல் மலிந்ததாக மாற்றியிருக்கிறது.
தவறுகளை மூடி மறைப்பதன் வழியாக எந்தவொரு நிறுவனமும் வலுப்பட்டதாக சரித்திரம் இல்லை. தவறுகளை திறந்த மனதுடன் விவாதித்து அதனை களைந்து முன்னோக்கி நகர்வதே ஆரோக்கியமான பாதை. ஆனால் தேசபக்தியின் பெயரால் அரசியல்வாதிகளும், அடிப்படைவாத அறிவுஜீவிகளும் தவறுகளை மூடி மறைப்பதை ராஜதந்திரம் என்று கருதுகிறார்கள். இந்த நோய்க்கூறு எவ்வளவு வலிமை பொருந்திய அமைப்பையும் பலவீனப்படுத்திவிடும்.
பா.ஜ.க. யின் பிரதம வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருக்கும் மோடி, வேட்பாளர் அறிவிப்புக்கு பின் பேசிய ராணுவம் குறித்த புகழுரைகளை இந்த தரவுகளின், புரிதலின் அடிப்படையில்தான் பார்க்க வேண்டும். மத்தியில் ராணுவம் என்றால் மாநிலத்தில் காவல்துறை. 2002 குஜராத் இனப்படுகொலைக்குப் பிறகு அம்மாநில காவல்துறை நடத்திய போலி என்கவுண்டர்கள் காரணமாக 32 போலீஸ் அதிகாரிகள் சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதில் பலரும் ஐபிஎஸ் அதிகாரிகள்.
இனப்படுகொலைக்குப் பின் மோடி மீதான விமர்சனங்கள் கூர்மையடைந்த காலகட்டத்தில் இந்த போலி என்கவுண்டர்கள் நடத்தப்பட்டன. 2004 ல் 19 வயது இளம் பெண் இஷ்ரத் ஜஹன் உள்பட நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 2006 ல் சொராபுதீன் ஷேக் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது மோடி, அத்வானி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களை கொலை செய்யும் திட்டத்துடன் வந்தவர்கள் என்றும், லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடையவர்கள் எனவும் மோடி அரசு கூறியது. அவர்களை சுட்டுக் கொன்றதை சாதனையாக பேசினார் மோடி. 2006 நவம்பாpல் நடந்த செராபுதீன் ஷேக் என்கவுண்டருக்கு போலீஸுக்கு உதவியாக இருந்தவன் துளசிராம் பிரஜhபதி. அவனும் 2006 டிசம்பரில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
மோடியையும் பா.ஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்களையும் கொலை செய்ய முயன்றவர்கள், பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த என்கவுண்டர்கள் மூன்றுமே போலியானவை என்பது நிரூபணமாகியிருக்கிறது. சிறையில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரியும், முன்னாள் டிஐஜி யுமான வன்சாரா அரசின் வழிகாட்டுதலில்தான் அனைத்தையும் செய்தோம். மோடி எனக்கு கடவுள், அவர் எங்களை கைவிட்டுவிட்டார் என்று கடிதம் எழுதியிருக்கிறார். இவர் ஆன்டி டெரரிஸ்ட் ஸ்குவாடின் தலைவராக இருந்து செராபுதீன் ஷேக்கின் என்கவுண்டரை நடத்தியவர்.
அன்று இந்த படுகொலைகளை தனது சாதனையாக பேசிய மோடி அவை போலியானவை என்று நிரூபணமான பிறகு அதுபற்றி வாயே திறக்கவில்லை. தனது பக்தனை (வன்சாரா) காப்பாற்ற முனைந்தால் தாம் மாட்டிக் கொள்வோம் என்பதால் கள்ள மௌனத்தை வன்சாரா விஷயத்தில் கடைபிடிக்கிறார். இனப்படுகொலையால் உருவான விமர்சனத்தையும், தனது அரசு மீதான களங்கத்தையும் திசை திருப்ப மோடி நடத்திய நாடகம் இந்த போலி என்கவுண்டர்கள் என்ற விமர்சனத்தை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. குஜராத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்களை சுட்டுக் கொன்றதான தோற்றத்தை ஏற்படுத்தி, முஸ்லீகளை படுகொலை செய்ததற்கு நியாயம் கற்பிக்க முயன்றார் மோடி. மேலும், அரசின் வழிகாட்டுதல் இன்றி எந்தவொரு என்கவுண்டரும் சாத்தியமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த எளிய உண்மை.
இந்த என்கவுண்டர்கள் போலியானவை என்ற உண்மை வெளிவந்ததில் மோடி அரசுக்கு எந்த பங்கும் இல்லை. செராபுதீன் ஷேக்கின் என்கவுண்டருடன் அவரது மனைவியும் மாயமானார். அவர் என்ன ஆனார் என்பது தெரியாத நிலையில் என்கவுண்டரில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் குடிபோதையில் அவரை ரகசியமான இடத்தில் கொலை செய்ததை உளற, அதைக் கேட்டுக் கொண்டிருந்த பத்திரிகையாளர் மூலமாக உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி 2007 முதல் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள். அவர்களுக்கு வழிகாட்டிய, அவர்களை செயல்பட வைத்த அதிகார மையங்கள் இந்தியாவை காப்பாற்றப் போவதாக அறைகூவல்விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ராணுவத்தை புனிதப்படுத்தியதன் வழியாக அதனை ஊழல் மலிந்ததாக மாற்றியது மத்திய காங்கிரஸ் அரசு. அதன் விளைவுதான் போபர்ஸ் போன்ற ஊழல்களும், கப்பல் வெடித்து சிதறியதும். காவல்துறையை மோடி அரசு கையாண்டவிதத்தின் விளைவுகள்தான் குஜராத்தில் வெளிச்சத்துக்கு வந்திருக்கும் போலி என்கவுண்டர்கள்.
ராணுவமும், காவல்துறையும் மிகப்பெரிய அமைப்புகள். சோனியா தலைமையிலான காங்கிரசானாலும், மோடியை முன்னிறுத்தும் பாஜக வானாலும் அவற்றை மாற்றியமைக்கப் போவதில்லை. அரசியல் கட்சிகள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்த அமைப்புகளையே பயன்படுத்துகின்றன. அரசியல் கட்சிகளால் கட்டுப்படுத்தப்படுபவை என்றவகையில் இந்த அமைப்புகளும் அரசியல் சார்புடையவையே. இவற்றுக்கு தேசபக்தியின் புனிதச் சாயம் ஏற்றுவதன் வழியாக தங்களின் சுயநல நடவடிக்கைகளை - ஊழலானாலும், இனப்படுகொலையானாலும், போலி என்கவுண்டர்களானாலும் - மூடி மறைக்க அரசியல் கட்சிகள் முயல்கின்றன.
முகம் தெரியாத வழிபோக்கன் விபத்தில் சிக்கினால்கூட அதன் பின்னணி விசாரிக்கப்படுகிறது. கப்பல் வெடித்து 18 வீரர்கள் பலியானதற்கு எந்த விசாரணையும் இல்லை, பதிலும் இல்லை. 18 வீரர்களின் உயிர்கள் எந்த மதிப்புமில்லாமல் கடலில் கரைந்துவிட்டது. அவர்களை தியாகியாக்கி, சில லட்சங்கள் நஷ்டஈடாக அவர்களின் குடும்பங்களுக்கு தருவதன் வழியாக தனது தவறுகளை அரசும் அரசியல்வாதிகளும் மூடி மறைக்கப் பார்க்கிறhர்கள். இந்த அநீதிக்கு பொதுமக்களாகிய நாமும் தேபக்தியின் பெயரால் எப்போதும் துணை நின்று வருகிறோம்.
தேசத்தின் கௌரவத்தை முன்னிறுத்தி உணர்ச்சிகரமான அஞ்சலியுடன் அனைத்தையும் மறந்துவிடுவது ஒருவகையில் கௌரவக் கொலைகளைப் போன்றதுதான். காரணங்களை அறிய முற்படுவதே உண்மையான தேசபக்தி. அந்த உண்மைகளை சோனியா தலைமையிலான காங்கிரஸிடமோ, மோடியை முன்னிறுத்தும் பாஜக விடமோ எதிர்பார்த்தால் ஏமாந்து போவோம். அது கட்சிகளிடம் அல்ல, நம் ஒவ்வொருவாpன் விழிப்புணர்வில் இருக்கிறது.
ராணுவத்தை புனிதப்படுத்துதல்
அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தில் அர்னால்ட் வில்லனாக நடிக்கக் கூடும் என புதிய செய்தி வெளியாகியுள்ளது.
அவதாரின் இரண்டு, மூன்று, நான்கு பாகங்களை அடுத்த வருடம் முதல் படமாக்குகிறார் nஜம்ஸ் கேமரூன். தற்போது திரைக்கதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அவதாரின் இரண்டாவது பாகத்தில் வில்லனாக நடிக்கக்கூடும் என்று ஹாலிவுட்டில் ஒரு தகவல் உள்ளது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.
அர்னால்ட் ஜேம்ஸ் கேமரூனின் விருப்ப நடிகர்களில் ஒருவர். டெர்மினேட்டர், டெர்மினேட்டர் 2 ஜட்ஜ்மெண்ட் டே, ட்ரூ லைஸ் போன்ற ஜேம்ஸ் கேமரூனின் படங்களில் அர்னால்ட்தான் ஹீரோ.
அர்னால்டுக்கு இப்போது 66 வயதாகிறது. தாத்தா ஆனபிறகும் அவரின் ஆக்சன் போகவில்லை. விரைவில் டெர்மினேட்டர் 5, எக்ஸ்பென்டபிள்ஸ் 3, எஸ்கேப் பிளான் ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார். எக்ஸ்பென்டபிள்ஸ் படத்தில் அர்னால்டைப் போன்று பல தாத்தாக்கள் - சில்வஸ்டர் ஸ்டாலோன், ஹாரிஸன் ஃபோர்ட் (இவருக்கு வயது 71) நடிக்கயிருப்பது குறிப்பிடத்தக்கது.
அவதார் வில்லன் அர்னால்ட் ஸ்வார்ஸ்நேகர்...?
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரசிகையின் கனவை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நனவாக்கியுள்ளார்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கரோலின் ஜெடர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2005ம் ஆண்டு கண் பார்வை பறிபோனது.
கரோலினுக்கு ஒரு கனவாம். பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மிகவும் பிடிக்கும் என்பதால் அவரின் முகத்தை தொட்டுப் பார்க்க வேண்டும் என்பது தான் அவரது கனவு.இந்நிலையில் திருமணம் ஒன்றுக்காக இங்கிலாந்துக்கு சென்ற ஷாருக்கானுக்கு இது குறித்து தகவல் கிடைத்தது. இதையடுத்து ஷாருக்கான் கரோலினை சந்தித்து அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
இது குறித்து கரோலின் கூறுகையில், திடீர் என்று ஒரு நாள் ஷாருக் என் அருகே வந்து ஹலோ கரோலின் என்று கூறி என் தோளில் தட்டிக் கொடுத்தார்.பின்னர் என்னை கட்டிப் பிடித்தார். நான் எப்படி இருக்கிறேன், லண்டன் பிடித்திருக்கிறதா என்று கேட்டார்.
மேலும் துபாய்க்கு போக வேண்டி இருப்பதால் சீக்கிரம் கிளம்ப வேண்டும், அதற்காக மன்னித்துக்கொள் என்றார்.
நான் அவரின் முகத்தை தொட்டுப் பார்க்க 8 ஆண்டுகளாக காத்திருந்தேன். தற்போது அவரின் முகத்தை தொடாமல் எப்படி அனுப்புவது. கிளம்பும் முன்பு அவர் மீண்டும் என்னை கட்டிப்பிடித்தார். அப்போது அவரது முகத்தை தொட்டுப் பார்த்தேன்.இந்த தருணத்தை நான் எப்பொழுதுமே மறக்க மாட்டேன் என்றும் நன்றி ஷாருக்கான் எனவும் தெரிவித்துள்ளார்.
பார்வையற்ற பெண்ணின் கனவை நனவாக்கிய ஷாருக்கான்
ஹரியானா மாநிலத்தில் குடும்ப எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்ட இளம் ஜோடிகளை கொன்ற குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 20 வயது பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார் அவரது 23 வயது காதலனின் தலை வெட்டப்பட்டு அவரது தலை துண்டிக்கப்பட்ட உடல் அவரின் வீட்டின் முன் வீசியெறியப்பட்டிருந்தது.
அந்தப் பெண்ணின் தந்தை, தாய் மற்றும் மாமா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில் ரொத்தக் பகுதியை சேர்ந்த நிதி என்ற பெண்ணும், தர்மேந்தர் என்ற ஆணும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இந்த ஜோடிகள் சாதி மாறி திருமணம் செய்து கொள்ள முயன்றதால் இந்த எதிர்ப்பு என்று கூறப்படுகிறது.
இந்த எதிர்ப்பை அடுத்து அந்த ஜோடிகள் டெல்லிக்கு தப்பியொடிவிட்டனர். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் அவர்கள் பாதுகாப்பாக இருக்க அனுமதிக்கப்படுவர் என்று உறுதி மொழி தந்ததால் சொந்த ஊருக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சொந்த ஊருக்கு வந்த இந்த ஜோடிகள், தனியே வாழ வேண்டாம், குடும்பத்தில் சேர்ந்து இருக்கலாம் என்று ஏமாற்றியுள்ளனர். இதனிடையே நேற்று தர்மேந்தர் பாரக்கின் கை, கால்களை தனித்தனியே வெட்டி பின்னர் தலையை வெட்டி வீசிய நிதியின் அப்பா, தலையை தர்மேந்தர் வீட்டின் வெளியே தூக்கி எறிந்துள்ளார்.
இதனை அடுத்து தன் மகள் நிதி பாரக்கை கொன்று அந்த குடும்பமே எரித்து ஒரு கொளரவ கொலையை நிகழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் ஹரியானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதி மீறி திருமணம்;காதலன் தலை துண்டு,பெண் எரிப்பு
Labels
tv serials
(682)
tv news
(553)
tv shows
(437)
cinema news
(424)
puthiya
(243)
Sun Tv Serials
(233)
captain
(173)
vijay tv shows
(162)
vijay tv serials
(145)
other
(108)
NEWS
(106)
cinema interviews
(104)
sun tv shows
(99)
singer
(93)
super singer 4
(93)
raj tv serials
(85)
raadanserials
(83)
raj
(82)
cinema news
(81)
cooking
(80)
zeetamil
(78)
thanthi
(76)
zeetamil serials
(76)
suriayavanakkam
(68)
polimer tv serials
(65)
spiritual
(63)
captaintvnews
(62)
press meet
(58)
interviews
(55)
sun news
(51)
saregama
(45)
audio
(44)
events
(36)
diwali
(34)
recipes
(34)
eelam
(33)
vivathamedai
(31)
comedy
(29)
rasi
(29)
other shows
(26)
Tamil New Year 2013 Programs
(24)
vimarsanam
(24)
songs
(23)
yoga
(23)
Trailer
(22)
beautytips
(22)
solvathellamunmai
(22)
amazing
(21)
sathiyamtv
(21)
kaatrukkenna veli
(20)
home funny
(19)
pillai nila
(19)
health
(18)
koffee with suchi
(18)
mundhanai mudichu
(18)
sports
(18)
2013
(17)
Uravugal Thodarkathai
(17)
koppiyam
(17)
madhubala
(17)
Thendral
(16)
Valli
(16)
anjaraipetti
(16)
thayumanavan
(16)
Rudhra Veenai
(15)
crimestory
(15)
nadheswaram
(15)
puthuyugam
(15)
selvi
(15)
Bommalattam
(14)
Pattimandram
(14)
Saravanan Meenakshi
(14)
Sindhu Bairavi
(14)
achilvandhavai
(14)
chitthi
(14)
cinema seithigal
(14)
deivam thandha veedu
(14)
deivamagal
(14)
elavarasi
(14)
thangai
(14)
Chinna Papa Periya Papa
(13)
Devathai
(13)
Ponnunjal
(13)
annamalai
(13)
arasi
(13)
athu
(13)
homeminister
(13)
jayatv
(13)
kanavan
(13)
kedi boys killadi girls
(13)
magalirkaaga
(13)
manvasanai
(13)
mutharam
(13)
nalla neeram
(13)
politics
(13)
samayalmanthiram
(13)
sollungaboss
(13)
ullam kollai pogudhada
(13)
virunthinarpakkam
(13)
Azhagi
(12)
Sontha Bandham
(12)
atlas
(12)
dhinapalan
(12)
entertainment
(12)
luckkakickka
(12)
office vijay tv serial
(12)
puguntha veedu
(12)
seeman
(12)
aalayavazhipadu
(11)
karuthamma
(11)
mamiyaarthevai
(11)
maruthuvaneram
(11)
rani
(11)
sakthi
(11)
Sivam
(10)
bhama vijayam
(10)
captain tv shows
(10)
deivavazhipaadu
(10)
nigalvugal
(10)
saami potta mudichu
(10)
shooting spot
(10)
sunsinger
(10)
toptennews
(10)
adhitya
(9)
ayutha
(9)
captainvasthu
(9)
inthanaal
(9)
jodiseason6
(9)
kalaigar
(9)
kalakkapovathuyaaru
(9)
mahabharatham vijay tv serial
(9)
puthuarthangal
(9)
vaangapesalam
(9)
aanmigakathaigal
(8)
dhinamjothidam
(8)
krishna
(8)
masala kudumbam
(8)
nilavae malare
(8)
pondatti
(8)
raja
(8)
velan
(8)
atthipookkal
(7)
bootham
(7)
captaintvserials
(7)
karunamanjari
(7)
maruthani
(7)
shiradijaisairam
(7)
soolam
(7)
then
(7)
veetukkuveedu
(7)
Paasa Malar
(6)
kadhalukku Salam
(6)
mega
(6)
moondru mudichu
(6)
neeya
(6)
nerpadapesu
(6)
vamsam
(6)
7c
(5)
captainsports
(5)
dance
(5)
marumanam
(5)
nenjam pesuthe
(5)
vadivelu
(5)
accidents
(4)
doctorx
(4)
kitchen superstars
(4)
mozhi
(4)
namma
(4)
pongal2014
(4)
sunmusichd
(4)
superkudumbam
(4)
uravugal sangamam
(4)
Ganga Yamuna Saraswathi
(3)
Idhu Kadhala
(3)
Marakatha Veenai
(3)
Mayakkam Enna
(3)
Nandhavanam
(3)
bairavi
(3)
goundamani
(3)
hot news
(3)
kalyanamaalai
(3)
kavithai
(3)
kuttychutties
(3)
nanbenda
(3)
robbery
(3)
sapthanimidangal
(3)
superdancer
(3)
tamil pechu engal moochu
(3)
top10movies
(3)
vijay tv shows
(3)
60seconds
(2)
Chellakili
(2)
En Vazhkai
(2)
Zee tamil
(2)
asathalarangam
(2)
beauty
(2)
cinema360
(2)
hairstyles
(2)
kalaingar
(2)
keerthanatips
(2)
mahabharatham
(2)
old tamil songs
(2)
polimer
(2)
puthu
(2)
raj tv shows
(2)
sollunganne
(2)
sundaygalatta
(2)
tv shiows
(2)
tv shows vijay tv shows
(2)
tvnews
(2)
ungal
(2)
vazhkaikovilgal
(2)
Arasiyalla
(1)
Gama
(1)
Makkalukkaga
(1)
Orukaiosai
(1)
Zee tamil shows
(1)
agnii
(1)
amuthamozhigal
(1)
chinnasanthippu
(1)
cienma news
(1)
cinema
(1)
discovery tamil
(1)
gossip
(1)
historyfiles
(1)
kadupethuraangalord
(1)
kayitham
(1)
malli
(1)
mp3
(1)
nijam
(1)
payanam
(1)
penn
(1)
rachaeltips
(1)
ras
(1)
saathanaipengal
(1)
santhanam
(1)
sareg
(1)
sathya
(1)
senthil
(1)
short
(1)
sivasankari
(1)
sports puthiya
(1)
thenali dharbar
(1)
tvshows
(1)
tvv news
(1)
unarvugal
(1)
varthagaulagam
(1)
veppilai
(1)
vivathameda
(1)
yog
(1)















































