Recent Posts
Wednesday, 25 September 2013
Raja Rajeswari is about Lakshmi Amma, an ardent devotee of Goddess Raja Rajeswari, her son Rajan and how they win destiny with the grace of God.
Cast: Prithviraj, Malavika Avinash, KR Vijaya, Fathima, Aishwarya, Rajasekhar, Bhuvaneswari, Vietnam Veedu Sundaram, Baby
Praharshitha
Singers: Manicka Vinayagam, Periya Karuppu Thevar, Baby MR Divya, M John Nirmal
Music: X Paulraj
Story, Screenplay: Selvapandi
Director: BR Vijayalakshmi
Raja Rajeswari Episode 100
Cast: Prithviraj, Malavika Avinash, KR Vijaya, Fathima, Aishwarya, Rajasekhar, Bhuvaneswari, Vietnam Veedu Sundaram, Baby
Praharshitha
Singers: Manicka Vinayagam, Periya Karuppu Thevar, Baby MR Divya, M John Nirmal
Music: X Paulraj
Story, Screenplay: Selvapandi
Director: BR Vijayalakshmi
Raja Rajeswari Episode 100
Raja Rajeswari Episode 100
சீனாவில் இரண்டு வயது பச்சிளங்குழந்தையை தூக்கி வீசி கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனையும், காரில் தப்பிச்செல்ல உதவியவருக்கு 5 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கார் நிறுத்துமிடத்தில் காரை ஓட்டிச்செல்ல வழிவிடுவது தொடர்பாக ஹேன் லீ என்பவர் ஒரு பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் கோபமடைந்த ஹேன் லீ தள்ளுவண்டியில் அந்த பெண் கொண்டுவந்த இரண்டு வயது கைக்குழந்தையை வண்டியுடன் பிடுங்கி வீசி எறிந்தார்.
பின்னர் அங்கிருந்து ஹேன் லீ தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த அந்த குழந்தை பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனது. ஜூலை மாதத்தில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக ஹேன் லீயிடம் விசாரணை நடைபெற்று வந்தது.
அதில், நான் எந்த உள்நோக்கத்துடனும் அந்த குழந்தையை கொலை செய்யவில்லை. ஏனெனில் நான் குடித்திருந்ததால் அந்த தள்ளுவண்டியை கடை சாமான் கொண்டுவந்த வண்டியென நினைத்தேன் என்று ஹேன்லீ வாதிட்டார். இந்த வழக்கு சீனாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஊடகங்களிலும் ஹேன் லீ-க்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஜெயிலில் இருந்து வந்த ஒரு வருடத்திற்குள்ளேயே ஒன்றும் அறியாத அப்பாவி குழந்தையை அவர் கொன்றிருக்கிறார். மேலும் அந்த குழந்தையின் தாயாரையும் ஹேன் லீ அடித்து இருக்கிறார் என்பது விசாரணையில் நிரூபணம் ஆகியுள்ளது. இதனால் அவருக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கிறேன் என்று டேக்ஜிங் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் ஹேன் லீயை சம்பவ இடத்திலிருந்து காரில் தப்பிச்செல்ல உதவிய குற்றத்திற்காக, மற்றொருவருக்கு 5 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கைக்குழந்தையை தூக்கி வீசி கொன்றவருக்கு தூக்கு
ஐக்கிய நாடுகள் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஈரான் அதிபர் ஹசன் ருஹானி அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவை சந்திப்பதை புறக்கணித்து பிரான்ஸ் அதிபர் ஹாலன்டேவைச் சந்தித்துப் பேசியுள்ளது சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சியின் விளைவாக மேற்கத்திய நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. மேலும், ஈரான் அணுகுண்டு தயாரிக்கக்கூடும் என்ற அச்சமும் அந்நாடுகளுக்கு இருந்து வந்தது. ஈரான் அந்தக் குற்றச்சாற்றை தொடர்ந்து மறுத்து வந்த போதிலும் அரசியல் சூழ்நிலைகள் ஈரானுக்கு சாதகமாக இல்லை.
இந்த நிலையில், ஈரானின் புதிய அதிபராக ஹசன் ருஹானி பதவி ஏற்றபின் பதட்ட சூழ்நிலைகள் தணிந்து காணப்படுகின்றன. ருஹானி நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு தனது முதல் உரையை ஆற்றினார். இந்த சமயத்தில் அவர் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை சந்திப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆயினும் இந்த சந்திப்பு சிக்கல்களைத் தோற்றுவிக்கக்கூடும் என்பதால் தவிர்க்கப்பட்டதாக அமெரிக்க மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று காலை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்துகொண்டார். ஈரானின் சார்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சரிப் அந்தக் கூட்டத்தில் பங்கு கொண்டார். அப்போது ஈரானின் புதிய அரசாங்கத்தை வரவேற்றுப் பேசிய ஒபாமா, அணுசக்தி குறித்த விஷயங்களிலும் புதிய அணுகுமுறைகள் பரிசீலிக்கப்படும் என்று தான் நம்புவதாகக் குறிப்பிட்டார்.
நேற்று மதியம் ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூன் அளித்த விருந்திலும் மதுவகைகள் பரிமாறப்படும் என்ற காரணத்தினால் ருஹானி அதனைத் தவிர்த்துவிட்டார். நேற்று மதியம் ஐநா பொதுக்குழுவில் உரையாற்றிய ருஹானி பிரான்ஸ் அதிபர் ஹாலன்டேவைச் சந்தித்தார். கடந்த 2005 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நடைபெற்றுள்ள இந்த முதல் சந்திப்பிற்குப் பின்னர், ஈரான் அணுசக்தித் திட்டங்களின் மூலம் பொதுப் பலன்களைப் பெறலாம், ஆனால் அணு ஆயுதங்களைப் பெறுவதற்கான வேலைகளில் ஈடுபட முடியாது என்று தொடர்ந்து 10 வருடங்களாக பிரான்ஸ் கூறிவருவதாக அதிபர் ஹாலன்டே தெரிவித்தார்.
நாளை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியுடன் சந்திக்க இருக்கும் ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சரிப் மூலம் மேற்கத்திய நாடுகளுடனான ஈரானின் புதிய உறவுகள் குறித்த சகாப்தம் தொடங்கக்கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் எதிர்நோக்குகின்றனர்.
ஒபாமாவை புறக்கணித்த ஈரான் அதிபர் ஹசன் ருஹானி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கடந்த செவ்வாய்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்.ஐ மற்றும் போலீசார் மீது வெடிகுண்டை வீசியும் ஆயுதங்களைக் காட்டி மிரட்டியும் தப்பிச் சென்ற பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய மூவரை போலீசார் விரட்டிச் சென்று கைது செய்து அவர்களிடமிருந்து வெடிக்காத நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள், மோட்டார் பைக் ஆகியவற்றை கைப்பற்றினர்.
மானாமதுரை சிப்காட் போலீஸ் சரகம் வேலூர் விலக்கு அருகே சிப்காட் காவல்நிலைய எஸ்.ஐ தவமுனி போலீஸார் செந்தில், ராஜா ஆகியோர் இரவு நேரத்தில் வாகனச் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் மூன்று பேர் வந்துள்ளனர் போலீசார் இவர்களை மறித்து நிறுத்தியுள்ளனர். பைக்கிலிருந்து இறங்கிய அந்த மூவரும் தாங்கள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து போலீஸார் மீது வீசினர். ஆனால் அது வெடிக்காமல் உருண்டு ஓடியது. அதன்பின் அவர்கள் பைக்கில் வைத்திருந்த அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்து போலீஸாரிடம் காட்டி பக்கத்தில் வந்தால் வெட்டிவிடுவோம் என மிரட்டி தாங்கள் வந்த பைக்கில் ஏறி சிவகங்கையை நோக்கி தப்பிச் சென்றனர்.
அதன்பின் எஸ்.ஐ தவமுனி மானாமதுரை இன்ஸ்பெக்டர் பால்பாண்டிக்கு இது குறித்து தகவல் தெரிவித்தவுடன் அவர் போலீஸாருடன் அங்கு வந்து சேர்ந்தார். அதன்பின் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி, எஸ்.ஐ க்கள் தவமுனி, பூமிநாதன் மற்றும் போலீஸார் பைக்கில் தப்பிச் சென்ற அந்த மூவரையும் ஜீப், பைக்குகளில் விரட்டிச் சென்றனர்.
மானாமதுரை அருகே பெரியகோட்டை உப்பாற்றுப் பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் விசாரித்தபோது அவர்கள் மானாமதுரை அருகே வேலூர் கிராமத்தைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் காளீஸ்வரன்(24), கருப்புச்சாமி மகன் வினோத் கண்ணன்(25) செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த சோணைமுத்து மகன் ஆனந்த்பாபு(26) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்கள் தப்பி வந்த பைக் அவர்கள் வைத்திருந்த கத்தி, அரிவாள்கள், ஒரு நாட்டு வெடிகுண்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேற்கண்ட மூவரும் மானாமதுரை அருகே துத்திக்குளம் விலக்கு பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு உதயக்குமார் என்பவரையும் கடந்த 2012 ஆம் ஆண்டு சிவகங்கை அருகே முத்துப்பட்டி என்ற இடத்தில் இரு சகோதரர்களையும் வெட்டி கொலை செய்த வழக்குகளில் தொடர்புடைய முக்கிய எதிரிகள் ஆவர். இந்த வழக்குகளில் இவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
இவர்களில் வினோத் கண்ணன் மானாமதுரை கன்னார்தெரு பகுதியில் வசித்து வரும் தனது பெற்றோருடன் தங்கியுள்ளார். மற்ற இருவரும் அவ்வப்போது தங்களது கிராமத்துக்கு வந்துபோய் உள்ளனர். மானாமதுரை சிப்காட் எஸ்.ஐ தவமுனி கொடுத்த புகாரின்போரில் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி, நகர் காவல் நிலைய எஸ்.ஐ பூமிநாதன் ஆகியோர் காளீஸ்வரன், வினோத் கண்ணன், ஆனந்த்பாபு ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிந்து அவர்களை கைது செய்து ரிமாண்டுக்கு அனுப்பி வைத்தனர்.
சினிமா போல போலீசார் மீது குண்டு வீசிய ரவுடிகள்
நாம் அனைவரும் ஏதாவது ஒரு விஷயத்திலிருந்து வெளியேறுவதற்கு முயன்று கொண்டேயிருக்கிறோம். சிலருக்கு அது சொந்த குடும்பமாக இருக்கலாம், சிலருக்கு சொந்த ஊராக இருக்கலாம், வேறு சிலருக்கு மீள முடியாத பழக்கமாகவோ, உறவாகவோ இருக்கலாம். இவர்கள் அனைவருக்கும் சென்றடையக் கூடிய கனவு நிலம் என்று ஒன்று இருக்கும். வெளியேறத் துடிப்பது விசையேற்றப்பட்ட நாண் என்றால், இலக்கு அந்த கனவு நிலம்.
அப்படி பூடானின் மலைகள் சூழந்த இயற்கை எழில் நிரம்பிய கிராமத்திலிருந்து அமெரிக்க கனவுடன் கிராமத்திலிருந்து வெளியேறும் இளைஞனைப் பற்றியது 2003ல் வெளியான ட்ராவலர்ஸ் அண்ட் மெஜிஷியன்ஸ் திரைப்படம். அழகிய மலைக்கிராமத்தில் அரசு ஊழியனாக இருப்பவன் டென்டப். நகரத்திலிருந்து வந்த இளைஞன். அவனது உள்ளம் முழுக்க அமெரிக்காவே நிரம்பியிருக்கிறது. பூடானில் அவனுக்கு கிடைக்கும் மாதச் சம்பளத்தை அமெரிக்காவில் அரை நாளில் அவனால் சம்பாதிக்க முடியும். அமெரிக்காவின் துள்ளல் இசை, கவர்ச்சிகரமான பெண்களுக்கு முன்னால் பூடான் கிராமம் வறிய பிச்சைக்காரனைப் போல அவனுக்கு தெரிகிறது.
ஒருநாள் அவன் எதிர்பார்த்த அமெரிக்க நண்பனின் கடிதம் வருகிறது. விசா தயாராக உள்ளது. அவன் கிளம்ப வேண்டியதுதான் பாக்கி. திருவிழாவுக்கு செல்வதாக பொய் சொல்லி என்றென்றைக்குமாக அந்த கிராமத்தைவிட்டு அவன் கிளம்புகிறான்.
துரதிர்ஷ்டவசமாக அன்றைய பேருந்தை அவன் தவறவிடும்படி ஆகிறது. அங்கு சில நாட்களுக்கு ஒருமுறைதான் பேருந்து வரும். அதிர்ஷ்டமிருந்தால் திம்பு செல்லும் ஏதாவது வண்டியில் தொற்றிக் கொள்ளலாம். ஒரு வயதான ஆப்பிள் விற்கும் கிழவர், இளம் புத்த துறவி ஆகியோருடன் அவன் பயணம் தொடர்கிறது. வழியில் ரைஸ் பேப்பர் தயாரிக்கும் கிழவரும், அவரது இளம் மகளும் சேர்ந்து கொள்கிறார்கள்.
லாரியிலும், கால்நடையாகவும் செல்லும் அந்தப் பயணத்தின் நடுவில் இளம் புத்த துறவி கதை சொல்ல ஆரம்பிக்கிறார். நமது டென்டப்பைப் போல் கனவு நிலத்தைப் பற்றிய கற்பனையில் இருக்கும் தஷி என்ற இளைஞனின் கதை.
இந்தப் படத்தின் முக்கியமான அம்சம், கதைக்குள் கதை சொல்லும் பாணி. பூடானின் மரபான கதை சொல்லல் முறையில் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. நம்மூர் பஞ்ச தந்திரக்கதைகளைப் போல என்று ஓரளவுக்கு சொல்லலாம். படத்தில் வரும் கதாபாத்திரம் ஒரு கதையை சொல்லும் போது, அது கதை என்பது பார்வையாளர்களுக்கு தெரிந்துவிடுவதால் அந்தக் கதையில் முழுதாக அவர்களை கவனப்படுத்துவது கடினம். வெறும் கதைதானே என பார்வையாளன் எளிதாக அதிலிருந்து வெளியேறிவிடுவான். தத்துவார்த்தமாகவும், கனவு சார்ந்தும் அந்தப் பகுதியை கையாண்ட விதத்தில், அந்த அபாயத்தை இயக்குனர் Khyentse Norbu அனாயாசமாக கடந்து விடுகிறார்.
தஷி இளம் பெண்களை பற்றி சதா கனவில் இருப்பவன். ஒருமுறை அவனது குதிரை கட்டுப்பாடில்லாமல் ஓடி அவனை அடர்ந்த வனத்துக்குள் கொண்டு சேர்க்கிறது. மழை பெய்யும் அந்த இரவில் அவன் ஒரு குடிசையை கண்டடைந்து உதவி கேட்கிறான். அங்கு ஒரு வயதான விறகு வெட்டியும், அவரின் அழகான இளம் மனைவியும் மட்டுமே இருக்கிறார்கள்.
மறுநாள் அங்கிருந்து கிளம்பும் தஷி வழி தெரியாமல் மீண்டும் கிழவர் இருக்கும் இடத்திற்கே வருகிறான். கிழவரின் இளம் மனைவி டெஹி அவனை சில நாட்கள் தங்கி இருக்குமாறும், அவள் தறியில் நெய்துவரும் துணி தயாரானதும்; அதனை விற்க கிழவர் கிராமத்துக்கு செல்வார், அப்போது அவனும் உடன் செல்லலாம் எனவும் அறிவுறுத்துகிறாள். ஆனால் துணி நெய்யும் வேலை நாள் கணக்கில் நீள்கிறது. துணிக்கு தேவையான நூல் இதுவரையில்லாத அளவுக்கு சிக்குண்டு கிடக்கிறது. கிழவரால் அதனை சரி செய்யவே முடிவதில்லை.
அதற்குள் டெஹியின் பேரழகில் தஷி சிக்குண்டு போகிறான். அவன் கனவு கண்ட இளம் பெண் அவள். ஒருநாள் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறுகிறாள் டெஹி. அதனை கலைக்க அவளுக்கு விருப்பமில்லை. அது அவர்களின் குழந்தை. கிழவருக்கு தெரிந்தால் அவரின் கூரிய கத்தி இருவரின் உயிரையும் பலி வாங்கிவிடும். ஒரே வழி கிழவரை கொல்வதுதான். டெஹியின் கடுமையான முடிவை தஷியால் மீற முடிவதில்லை.
தனது அரைகுறை வைத்திய அறிவை வைத்து அவன் தயாரிக்கும் மூலிகை விஷம் கிழவரை கொல்ல போதுமானதாக இல்லை. அவர் இரவு முழுவதும் வலியில் அரற்றிக் கொண்டேயிருக்கிறார். அழகான அவனது கனவுப் பெண் டெஹி இப்போது அவனால் ஜீரணிக்க முடியாதவளாக மாறிவிட்டாள். அதிகாலையில் உயிருக்குப் போராடும் கிழவரையும், கர்ப்பமான டெஹியையும் விட்டு அவன் ஓடத் தொடங்குகிறான். பின்னால் டெஹியின் அபயக்குரல் அவனை துரத்துகிறது. ஆற்றைக் கடப்பவன் அந்த குரலின் சோகத்தை தாங்க முடியாமல் டெஹியை தேட ஆரம்பிக்கிறான். ஆனால் அவனால் ஆற்றில் அடித்துச் செல்லப்படும் அவளின் ஆடையையே பார்க்க முடிகிறது.
புத்த துறவியின் கதை முடியும் போது டென்டப்பின் மனமும் பயண நிகழ்வுகளினூடே ரொம்பவும் மாறிப் போயிருக்கிறது. ரைஸ் பேப்பர் தயாரிப்பவரின் மகள் சோனத்தின்பால் பலமான நட்பை உணர்கிறான். சோனம் அவனை விரும்புவதாக துறவி அவனை சதா கிண்டல் செய்து கொண்டேயிருக்கிறார். பயணத்தின் ஆரம்பத்தில் சிடுசிடுவென்று அனைவரிடமிருந்தும் தள்ளி இருக்கும் டென்டப் துறவியின் கிண்டலை சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொள்கிறான். கடைசியில் அவர்கள் பிரிய வேண்டி வருகிறது. துறவி அவனிடம் இன்னொரு கதையை சொல்கிறேன் என்று அவனுடைய கதையையே சொல்ல ஆரம்பிக்கிறார். அவனும் சிரித்துக் கொண்டே, அமெரிக்கா செல்லாமல் கதை நாயகன் கிராமத்துக்கே திரும்புவதாக கதையை முடிக்கிறான்.
மனுஷ்யபுத்திரனின் கவிதையொன்று, பூக்கள் உதிர்ந்து கிடக்கும் சாலை வழியாக உன்னை பார்க்க வந்தேன் என காதலன் காதலியிடம் சொல்வதாக ஆரம்பிக்கும். போகப் போக கவிதை, அன்பின் மிருக விழிகளோடு பழி தீர்க்க வந்தேன் என்பதாக மாறும். முதலில் ஸ்தூலமான பாதையைச் சொல்லும் கவிதை அரூபமான காதலனின் உணர்வை சொல்வதாக பரிமாணம் கொள்ளும். இந்தப் படத்தில் வரும் டென்டப்பின் கதை ஸ்தூலமான அவனின் அமெரிக்க கனவு நிலத்துக்கு செல்வதைப் பற்றியது. கதைக்குள் வரும் தஷியின் அனுபவம் அரூபமான தத்துவத்தால் பின்னப்பட்டது.
நாம் ஏற்கனவே சொன்னது போல் நாம் அனைவருமே எதிலிருந்தாவது வெளியேற முயன்று கொண்டேயிருக்கிறோம். நிலமாக இருந்தாலும், உறவாக இருந்தாலும், எதிலிருந்து வெளியேற வேண்டும் என்று விரும்புகிறோமோ அதற்கும், எதை சென்றடைய விரும்புகிறோமோ அதற்கும் பெரிய வித்தியாசமிருப்பதில்லை. ஒருவனின் மகிழ்ச்சியும், துக்கமும் அவனிடத்தில் இருக்கிறதே தவிர வெளியில் இல்லை என்ற புரிதலின் அடிப்படையில் பார்த்தால் கனவு நிலம் என்பதே காற்றை பிடிக்க முயலும் வெற்று துரத்தல் மட்டுமே.
தனது முதல் படம் த கப் (The Cup - 1993)க்குப் பிறகு 2003 இல் இந்தப் படத்தை Khyentse Norbu இயக்கினார். அடிப்படையில் அவர் ஒரு புத்த துறவி. இந்தப் படத்தில் வரும் தஷியின் கதையை பூடானின் புத்த கதையிலிருந்தே அவர் உருவாக்கினார். டென்டப்பின் கதை பிரபல எழுத்தாளர் யசுனாரி கவப்பட்டோவின் த டேன்சிங் கேர்ள் ஆஃப் இஸு வின் பாதிப்பில் உருவானது. Khyentse Norbu அமெரிக்காவில் அரசியல் மற்றும் திரைப்படக்கலையை கற்று படமெடுக்க வந்தவர்.
இந்தக் கதை பூடானின் மரபான கதை சொல்லல் முறையில் அமைக்கப்பட்டது. டென்டப்பின் கதை, அதற்குள் வரும் தஷியின் கதை. உண்மையில் தஷிக்கு நடுக்காட்டில் டெஹியுடன் ஏற்படும் அனுபவங்கள் அனைத்தும் அவனின் கற்பனை. அவனது தம்பி சில போதையேற்றும் மூலிகைகளை வைனில் போட்டு தருகிறான். அதனைக் குடிக்கும் தஷிக்கு ஏற்படும் கற்பனைதான் டெஹியின் கதை. இந்த கதைக்குள் கதைக்குள் கதை மிகச்சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. பூடானின் பழக்க வழக்கங்கள், அதன் இயற்கை வனப்பு கதையினூடாக நமக்கு அனுபவமாகிறது.
தத்துவார்த்தமான கதை என்பதால் வசனங்கள் இயல்பாகவே தத்துவத்தின் சாயலை பெறுகின்றன. மரம் வெட்டியான கிழவர் தஷியிடம், நாம் ஆண்கள், நமக்கு வயதானாலும் நமது பொறாமை இளமையாகவே இருக்கும் என்கிறார். டென்டப் தனது ட்ரிம் லேண்ட் அமெரிக்காவுக்கு செல்வதை துறவி அனைவரிடமும் கிண்டல் தொனியில் கூறிக் கொண்டேயிருக்கிறார். அதனை கேட்கும் அவர்களுடன் பயணிக்கும் குடிகாரன், நான் இப்போதே அங்குதான் இருக்கிறேன் என்று பதிலளிப்பான்.
படத்தில் மிகக் குறைந்த அளவே இசை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் சினிமாவுக்கு புதியவர்கள். அவர்களின் முதலும் கடைசியுமான படம் இதுதான்.
டெஹியை கனவு நிலமாகவும், அதனை சென்றடையும் வேட்கையை காமமாகவும் இப்படம் சித்தரிக்கிறது. தஷி தனது கனவு நிலத்தை கண்டடைகிறான். ஆனால் அவன் கற்பனை செய்தபடி அதில் முழுமையை காண முடிவதில்லை. குற்றவுணர்வு கிழவரின் வடிவில் அவனை துரத்திக் கொண்டேயிருக்கிறது. குற்றவுணர்வை சாகடிப்பது என்பது நமது மனசாட்சியை கொலை செய்வதைப் போன்றது. ஒருபோதும் நம்மால் அது முடிவதில்லை. குற்றுயிராக முனகும் கிழவரைப் போல அது நம் ஆன்மாவை அமைதியிழக்க செய்கிறது.
அடர்ந்த வனம்-அழகிய இளம்பெண்-தனித்து விடப்பட்ட காமம்
மும்பையில் திரையரங்கில் திரைப்படம் பார்த்து சிரித்த வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மும்பையில் கிராண்ட் மஸ்தி என்ற இந்தி திரைப்படத்தை பார்க்க மங்கேஷ் போகல் என்பவர் அவரது காதலியுடன் வந்திருந்தார்.
22 வயதான மங்கேஷ் போகல் திரைப்படத்தை பார்த்தப்போது, தன்னையே மறந்து தொடர்ச்சியாக சிரித்துள்ளார்.
இந்நிலையில், சிரித்துக் கொண்டிருக்கையிலேயே அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை வசாயில் உள்ள கார்டினல் கிராசியாஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மங்கேஷை உடனடியாக பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சிரித்துக்கொண்டிருந்த மங்கேஷ் மரணம் அடைந்தது அவரது காதலி மற்றும் திரையரங்கில் இருந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
தியேட்டரில் படம் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தவர் மரணம்
பிரிட்டனில் 12 வயது சிறுவன் ஒருவன் 6 வயது சிறுமியை 2 முறை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குற்றசெயலில் ஈடுபட்ட 12 வயது சிறுவன் பிரிட்டனின் சப்போல்க் அண்ட் நார்போல்க் பகுதியில் தனது தாய் தந்தையுடன் வசிக்கின்றான்.
இவன் 2 முறை ஆறு வயது சிறுமியை பாலியல் சித்ரவதைக்கு உட்படுத்தியதாக அவனது பெற்றோரிடம் தெரிவித்தப்போது அதிர்ந்தப்போன அவர்கள், உடனடியாக அவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.
காவல் நிலையத்தில் சிறுவனை விசாரித்தப்போது, அவன் செய்த தவறுக்காக பெரியளவில் வருத்தப்படவில்லை என்பதை காவல் துறையினர் புரிந்துக்கொண்டனர்.
'அவள் என்ன நினைப்பாள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை' என்று பாதிக்கப்பட்ட சிறுமி குறித்து அச்சிறுவன் விசாரணை அதிகாரியிடம் தெரிவித்துள்ளான்.
பாதிக்கப்பட்ட சிறுமி, மிகவும் பயந்து ஆழ்ந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக அச்சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி அல்லது அவளது குடும்பத்தை அச்சிறுவன் 12 மாத காலத்துக்கு சந்திக்கக்கூடாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதும் பாதிக்கப்பட்ட அச்சிறுமிக்கு 300 பவுண்ட் மட்டும் நஷ்ட ஈடாக சிறுவனின் பெற்றோர் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
'அவளை பற்றி கவலையில்லை':பலாத்காரம் செய்த சிறுவன்
சினிமா நூற்றாண்டுவிழா நிகழ்ச்சிகளில் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதனை சில நடிகைகள் மீறினர். குறிப்பாக நயன்தாரா மற்றும் ஸ்ரேயா. இரண்டு பேரும் விழாவில் நடனமாடுவார்கள் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நடனமாடவில்லை என்பதுடன் விழாவுக்கே இவர்கள் இருவரும் வரவில்லை. அவர்களைப் போல விழாவுக்கு வராத முன்னணி நட்சத்திரங்களை பட்டியலிட்டு விளக்கம் கேட்க வேண்டும், தடை போட வேண்டும் என ஒரு குரூப் கொந்தளிக்கிறது.
சினிமா நூற்றாண்டு விழாவுக்கு சினிமாவில்...
பணியாற்றும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு அழைப்பில்லை. அதற்கு விழாக்குழுவால் எந்த பதிலும், விளக்கமும் தர இயலவில்லை. அப்படியிருக்க வராதவர்கள் என்று ஒருசிலரின் மீது மட்டும் எப்படி நடவடிக்கை எடுக்க இயலும்? தவிர இது தென்னிந்திய வர்த்தக சபை மாநில அரசு அளித்த தமிழக மக்களின் வரிப்பணத்தில் நடத்திய விழா. அதில் பங்கேற்காததற்கு ஒரு நடிகையை எப்படி தண்டிக்க முடியும்?
விழாவுக்கு வராதவர்கள் என்று எந்த நடிகைக்காவது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினால் அதைவிட கொடுமை இருக்க முடியாது.
நயன்தாராவுக்கு ரெட்? - என்ன கொடுமை இது
ஹன்சிகா, சிவ கார்த்திகேயன் நடிக்கும் மான் கராத்தே படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடக்கிறது. இதற்காக படயூனிட் கொடைக்கானல் சென்றுள்ளது.
மான் கராத்தேயின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார். அவரது அசிஸ்டெண்ட் திருக்குமரன் படத்தை இயக்குகிறார். சென்னையில் இதன் படப்பிடிப்பு நடந்தது. இரண்டு ஷெட்யூல்கள் முடிந்த நிலையில் கொடைக்கானலில் எட்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டனர். இந்நிலையில் சினிமா நூற்றாண்டு விழாவுக்காக திரையுலகத்துக்கு பத்து தினங்கள் விடுமுறைவிட, கொடைக்கானல் பயணம் தடைபட்டது.
இன்றுமுதல் கொடைக்கானலில் மீண்டும் படப்பிடிப்பு நடக்கிறது. ஒரு பாடல் காட்சியும், வசனக் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து 45 நாட்கள் பெங்களூருவில் படப்பிடிப்பு நடக்கிறது.
அடுத்த வருட தொடக்கத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
கொடைக்கானலில் ஹன்சிகா, சிவ கார்த்திகேயன்
பிரபல அரசியல் பிரமுகர் ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் பெண் தொகுப்பாளரை அவருடன் வலுக்கட்டாயமாக ஆட வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான நாராயன் தட் திவாரிக்கு 90 வயதாகிறது.
இவர் லக்னோவில் தியாகிகளின் நினைவு நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் நடந்த கலை விழாவின்போது மேடையேறிய திவாரி அங்கு நின்றுக்கொண்டிருந்த நிகழ்ச்சித் தொகுப்பாளினியை வலுக்கட்டாயமாக தன்னுடன் ஆட வைத்ததாக தெரிகிறது.
தொகுப்பாளினியை தன்னுடன் வலுக்கட்டாயமாக ஆடவைத்த பிரமுகர்(வீடியோ)
டெல்லியில் ஏடிஎம்-மிற்கு பணம் எடுத்துச்செல்லும் வாகன ஓட்டுனர் ஒருவர் வாகனத்தில் இருந்த 54 லட்சம் பணத்துடன் தப்பித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏடிஎம்-மிற்கு பணம் விநியோகிக்கும் கேஷ் மானேஜ்மென்ட் செர்விசெஸ் (Cash Management Services ) வாகன ஓட்டுனர், வண்டியிலிருந்த 54 லட்சம் ரூபாயுடன் தப்பித்து சென்றுள்ளார்.
1 கோடி ரூபாய் பணத்துடன் வாகனத்தை ஓட்டிச்சென்ற 30 வயது சஞ்சய், 46 லட்ச ரூபாயை பிற ஏடிஎம்-மில் அளித்துவிட்டு மீதமிருந்த பணத்துடன் தலைமறைவாகியுள்ளார்.
இன்று காலை சுமார் 10.50 மணிக்கு நடந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது.
தகவலறிந்த போலீசார், உடனடியாக இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட சஞ்சயை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
54,00,000 பணத்துடன் எஸ்கேப்பான ஏடிஎம் கேஷ்-வேன் ஓட்டுனர்
சூர்யா அடுத்து லிங்குசாமியின் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு, யுவன் ஷங்கர் ராஜா இசை, நா.முத்துக்குமார் பாடல்கள். ஹீரோயின் சமந்தா.
படத்தின் பெயர் ரவுடி என்று பல பத்திரிகைகள் எழுதின (இந்த விஷயத்தில் நாம் உஷார். எதுவும் எழுதவில்லை). சூர்யா படத்தின் பெயர் ரவுடியா? இருக்க வாய்ப்பில்லையே என்ற நினைத்தவேளை இயக்குனர் லிங்குசாமி ரவுடி பெயர் குறித்து விளக்கமளித்தார்.
இதுவரை படத்துக்கு பெயர் வைக்கவில்லை. சிலர் சொல்வது போல் ரவுடி எல்லாம் கிடையாது. படத்தின் பெயரை நானே அறிவிப்பேன் என தெரிவித்தார்.
சூர்யா படத்தின் பெயர் ரவுடியா? - லிங்குசாமி விளக்கம்
சீனாவில் வாஷிங்மெஷினில் தவறி விழுந்த 2 மற்றும் 4 வயது சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள ஜியாங்ஸி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இரு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். 2 மற்றும் 4 வயதான இச்சிறுமிகள் விளையாடுவதற்காக அவர்கள் வீட்டிலிருந்த வாஷிங்மெஷினிற்குள் இறங்க முயன்றுள்ளனர்.
இதற்காக வாஷிங்மெஷின் அருகே ஒரு நாற்காலியை போட்ட அச்சிறுமிகள் ஒருவர் பின் ஒருவராக அதற்குள் இறங்கியுள்ளனர். இதில் எதிர்பாராத விதமாக ஒரு சிறுமியின் கைப்பட்டு வாஷிங்மெஷின் இயங்க தொடங்க, உள்ளே இருந்த சிறுமிகள் காயம் ஏற்பட்டு பரிதாபமாக பலியானதாக தெரிகிறது.
குழந்தைகளை காணாமல் அனைத்து இடங்களிலும் தேடிய பெற்றோர், வாஷிங்மெஷின் இயங்கிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அதனுள் பார்க்கும்போதுதான், ரத்த வெள்ளத்தில் குழந்தைகள் சடலமாக இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, உடனடியாக இறுதி சடங்குகள் முடிக்கப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மக்கள், குழந்தைகள் வாஷிங்மெஷினிற்குள் விழுந்து பலியாக வாய்ப்பில்லை எனவும், எதற்காக சிறுமிகளின் பெற்றோர் உடனடியாக இறுதி சடங்குகளை செய்தனர் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமிகளின் 32 வயது தாய், என்னுடைய குழந்தைகளின் மரணத்திற்கு என்னால் எப்படி காரணமாக முடியும் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்மெஷினிற்குள் விழுந்து குழந்தைகள் பலியான பரிதாபம்
நாளை (வியாழக்கிழமை) அபாரமான பார்மில் உள்ள தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியின் சொந்த மண்ணான ராஞ்சியில் தவான் தலைமை ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் அன்று டைட்டன்ஸ் அணி நிர்ணயித்த மிக கடினமான 185 ரன்கள் இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் பவர் ஊதித் தள்ளியது.
இதனால் நாளையும்....
அந்த அணி பலமாகவே களமிறங்கும், சன் ரைசர்ஸ் அணிக்கு சரியான சவால் நாளை காத்திருக்கிறது.
ஆனால் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ள சன் ரைசர்ஸ் அணி பயிற்சியாளர் மோடியின் உற்சாகத்துடன் விளையாடுவதால் தோனிக்கும் வெற்றி அவ்வளவு சுலபமாகிவிடாது என்று கூறலாம்.
விஜய், ஹஸி, ரெய்னா, தோனி, டுபிளெசி, டிவைன் பிராவோ, ஆல்பி மோர்கெல் என்று சென்னை பேட்டிங் ஒரு மாட்டடி வரிசையைக் கொண்டுள்ளது. சன் ரைசர்ஸுக்கு பிரச்சனை என்னவெனில் கடந்த போட்டியில் விரைவில் ஆட்டமிழந்த தோனி நாளை நிச்சயம் ஒரு காட்டுக் காட்ட்வார் என்பதே.
சன் ரைசர்ஸ் அணி ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சை எழும்ப விடாமல் அன்று டிவிலியர்ஸ் சாத்தியது போல் சாத்தி எடுத்து விடவேண்டும். அவரை செட்டில் ஆகவிட்டால் சன் ரைசர்ஸ் அணிக்கு நிச்சயம் தோல்வி உண்டாகும். பந்து வீச்சில் மோகித் சர்மா, ஜடேஜா, அஷ்வின், பிராவோ, மோர்கெல் என்று நல்ல வரிசை இருக்கிறது. ஆனால் அடித்து நொறுக்கினால் இவர்களுக்கு வெறு வகையில் பந்து வீசத் தெரியாது.
மாறாக சன் ரைசர்ஸ் அணியில் டேல் ஸ்டெய்ன், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா ஆகியோர் சிறப்பாகவே பந்து வீசுகின்றனர்.
தோனியா, தவானா? சூப்பர் கிங்ஸ்-சன் ரைசர்ஸ் மோதல்!
Labels
tv serials
(682)
tv news
(553)
tv shows
(437)
cinema news
(424)
puthiya
(243)
Sun Tv Serials
(233)
captain
(173)
vijay tv shows
(162)
vijay tv serials
(145)
other
(108)
NEWS
(106)
cinema interviews
(104)
sun tv shows
(99)
singer
(93)
super singer 4
(93)
raj tv serials
(85)
raadanserials
(83)
raj
(82)
cinema news
(81)
cooking
(80)
zeetamil
(78)
thanthi
(76)
zeetamil serials
(76)
suriayavanakkam
(68)
polimer tv serials
(65)
spiritual
(63)
captaintvnews
(62)
press meet
(58)
interviews
(55)
sun news
(51)
saregama
(45)
audio
(44)
events
(36)
diwali
(34)
recipes
(34)
eelam
(33)
vivathamedai
(31)
comedy
(29)
rasi
(29)
other shows
(26)
Tamil New Year 2013 Programs
(24)
vimarsanam
(24)
songs
(23)
yoga
(23)
Trailer
(22)
beautytips
(22)
solvathellamunmai
(22)
amazing
(21)
sathiyamtv
(21)
kaatrukkenna veli
(20)
home funny
(19)
pillai nila
(19)
health
(18)
koffee with suchi
(18)
mundhanai mudichu
(18)
sports
(18)
2013
(17)
Uravugal Thodarkathai
(17)
koppiyam
(17)
madhubala
(17)
Thendral
(16)
Valli
(16)
anjaraipetti
(16)
thayumanavan
(16)
Rudhra Veenai
(15)
crimestory
(15)
nadheswaram
(15)
puthuyugam
(15)
selvi
(15)
Bommalattam
(14)
Pattimandram
(14)
Saravanan Meenakshi
(14)
Sindhu Bairavi
(14)
achilvandhavai
(14)
chitthi
(14)
cinema seithigal
(14)
deivam thandha veedu
(14)
deivamagal
(14)
elavarasi
(14)
thangai
(14)
Chinna Papa Periya Papa
(13)
Devathai
(13)
Ponnunjal
(13)
annamalai
(13)
arasi
(13)
athu
(13)
homeminister
(13)
jayatv
(13)
kanavan
(13)
kedi boys killadi girls
(13)
magalirkaaga
(13)
manvasanai
(13)
mutharam
(13)
nalla neeram
(13)
politics
(13)
samayalmanthiram
(13)
sollungaboss
(13)
ullam kollai pogudhada
(13)
virunthinarpakkam
(13)
Azhagi
(12)
Sontha Bandham
(12)
atlas
(12)
dhinapalan
(12)
entertainment
(12)
luckkakickka
(12)
office vijay tv serial
(12)
puguntha veedu
(12)
seeman
(12)
aalayavazhipadu
(11)
karuthamma
(11)
mamiyaarthevai
(11)
maruthuvaneram
(11)
rani
(11)
sakthi
(11)
Sivam
(10)
bhama vijayam
(10)
captain tv shows
(10)
deivavazhipaadu
(10)
nigalvugal
(10)
saami potta mudichu
(10)
shooting spot
(10)
sunsinger
(10)
toptennews
(10)
adhitya
(9)
ayutha
(9)
captainvasthu
(9)
inthanaal
(9)
jodiseason6
(9)
kalaigar
(9)
kalakkapovathuyaaru
(9)
mahabharatham vijay tv serial
(9)
puthuarthangal
(9)
vaangapesalam
(9)
aanmigakathaigal
(8)
dhinamjothidam
(8)
krishna
(8)
masala kudumbam
(8)
nilavae malare
(8)
pondatti
(8)
raja
(8)
velan
(8)
atthipookkal
(7)
bootham
(7)
captaintvserials
(7)
karunamanjari
(7)
maruthani
(7)
shiradijaisairam
(7)
soolam
(7)
then
(7)
veetukkuveedu
(7)
Paasa Malar
(6)
kadhalukku Salam
(6)
mega
(6)
moondru mudichu
(6)
neeya
(6)
nerpadapesu
(6)
vamsam
(6)
7c
(5)
captainsports
(5)
dance
(5)
marumanam
(5)
nenjam pesuthe
(5)
vadivelu
(5)
accidents
(4)
doctorx
(4)
kitchen superstars
(4)
mozhi
(4)
namma
(4)
pongal2014
(4)
sunmusichd
(4)
superkudumbam
(4)
uravugal sangamam
(4)
Ganga Yamuna Saraswathi
(3)
Idhu Kadhala
(3)
Marakatha Veenai
(3)
Mayakkam Enna
(3)
Nandhavanam
(3)
bairavi
(3)
goundamani
(3)
hot news
(3)
kalyanamaalai
(3)
kavithai
(3)
kuttychutties
(3)
nanbenda
(3)
robbery
(3)
sapthanimidangal
(3)
superdancer
(3)
tamil pechu engal moochu
(3)
top10movies
(3)
vijay tv shows
(3)
60seconds
(2)
Chellakili
(2)
En Vazhkai
(2)
Zee tamil
(2)
asathalarangam
(2)
beauty
(2)
cinema360
(2)
hairstyles
(2)
kalaingar
(2)
keerthanatips
(2)
mahabharatham
(2)
old tamil songs
(2)
polimer
(2)
puthu
(2)
raj tv shows
(2)
sollunganne
(2)
sundaygalatta
(2)
tv shiows
(2)
tv shows vijay tv shows
(2)
tvnews
(2)
ungal
(2)
vazhkaikovilgal
(2)
Arasiyalla
(1)
Gama
(1)
Makkalukkaga
(1)
Orukaiosai
(1)
Zee tamil shows
(1)
agnii
(1)
amuthamozhigal
(1)
chinnasanthippu
(1)
cienma news
(1)
cinema
(1)
discovery tamil
(1)
gossip
(1)
historyfiles
(1)
kadupethuraangalord
(1)
kayitham
(1)
malli
(1)
mp3
(1)
nijam
(1)
payanam
(1)
penn
(1)
rachaeltips
(1)
ras
(1)
saathanaipengal
(1)
santhanam
(1)
sareg
(1)
sathya
(1)
senthil
(1)
short
(1)
sivasankari
(1)
sports puthiya
(1)
thenali dharbar
(1)
tvshows
(1)
tvv news
(1)
unarvugal
(1)
varthagaulagam
(1)
veppilai
(1)
vivathameda
(1)
yog
(1)







.jpg)








































