தொப்புள் தெரிய நடிக்க மறுத்த நஸ்ரியாவின் உணர்வை இயக்குனர்கள் மதிக்க வேண்டும் என்றார் மேக்னா ராஜ். காதல் சொல்ல வந்தேன் 420 போன்ற படங்களில் நடித்த மேக்னா ராஜ் கூறியதாவது: தமிழில் லட்சுமிமேனன் நடித்த சுந்தரபாண்டியன் படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது.
இதில் லட்சுமி மேனன் நடித்த வேடத்தை நான் ஏற்றிருக்கிறேன். அவர் நடிப்பு எனக்கு பிடித்திருந்தது.
ஆனால் அதை அப்படியே காப்பி அடிக்கமாட்டேன். கன்னட கலாசாரத்துக்கு ஏற்ப கதையும், கேரக்டர்களும் மாற்றப்பட்டுள்ளன. எனவே லட்சுமி மேனன் நடிப்புடன் என்னை ஒப்பிடக்கூடாது.
நய்யாண்டி படத்தில் நடித்தபோது தன்னைப்போல் டூப் வைத்து எடுத்த ஆபாச காட்சிகளுக்கு நஸ்ரியா நாசிம் எதிர்ப்பு தெரிவித்ததுபற்றி கேட்கின்றனர்.
தொப்புள் தெரியும்படி உடை அணிந்து நடிக்கும்படி என்னிடம் ஒரு இயக்குனர் கூறினால் அதுபற்றி நான் கவலைப் படமாட்டேன். இப்படி நடிப்பது அவரவரின் விருப்பத்தை பொருத்தது. நஸ்ரியா எனது நெருங்கிய தோழி.
அவர் குடும்பத்தினர் பழமை மாறாதவர்கள். எனவே அவர் அப்படி நடிக்க மறுத்தால் அவரது உணர்வுக்கு மதிப்பு தரவேண்டும்.


0 comments:
Post a Comment