பூமியைச் சுற்றிவரும் சூரியன், சந்திரன் ஆகியவை இந்த ஆண்டு ஐந்து முறை ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் வாய்ப்பு வருகின்றது.
அப்போது சந்திரன் சூரியனைவிட பூமியின் அருகில் வருவதால் அதனுடைய பிரகாசம் அதிகமாகவும், அளவு பெரியதாகவும் தெரியும் வாய்ப்பு உள்ளது.
அளவில் பெரியதாகத் தோன்றும் இந்த சந்திரனே சுமார் 30 வருடங்களுக்கு முன் கடந்த 1979ஆம் ஆண்டில் சூப்பர் நிலவு என்று ரிச்சர்டு நொள்ளே என்ற வானவியல் ஆராய்ச்சியாளரால் பெயரிடப்பட்டது.
இந்த ஆண்டு இதுபோன்று ஐந்துமுறை இந்த மூன்று கோள்களும் ஒரே கோட்டில் வரும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் நிகழ்வு இந்த மாதம் ஒன்றாம் திகதி ஏற்பட்டது. தற்போது இன்று மாலை 3.30 மணிக்கு இரண்டாவது முறையாக இந்த சூப்பர் நிலவைக் காண முடியும் என்றும் விண்வெளி பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.
அந்த சமயத்தில் நிலவின் அளவு 14 சதவிகிதம் பெரியதாகவும், 30 சதவிகிதம் அதிக பிரகாசமாகவும் காணப்படும் என்று அந்த அமைப்பின் தலைவர் சி.பி.தேவ்கன் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே மாதத்தில் இரண்டு முறை இதுபோன்று சூப்பர் நிலவு தோன்றும் வாய்ப்பு இனி 2018ஆம் ஆண்டு ஜனவரியில் தான் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இருக்கும் மற்ற மூன்று நிகழ்வுகள் ஜூலை 12, ஆகஸ்ட் 10 மற்றும் செப்டம்பர் 9ஆம் திகதியில் காணப்படும் என்றும் விண்வெளி பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.


0 comments:
Post a Comment