Wednesday, 6 November 2013

உடல் எடையை குறைக்க ஆயுர்வேதம் கை கொடுக்குமா?


இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் நாம் சந்திக்கும் முக்கிய பிரச்சனை உடல் பருமன். அதற்கு காரணம் நம்முடைய சுற்றுச் சூழலும், மோசமான உணவு பழக்கமும் தான். உடல் எடையை குறைக்க பல வழிகள் உள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், பத்திய உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றை சொல்லலாம்.

ஆனால் ஆயுர்வேதமும் அதற்கு கை கொடுக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? உடல் பருமன் பிரச்சனைக்கான ஆயுர்வேத சிகிச்சை, உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றுவதிலிருந்து தொடங்கும்.

இதனை 'அமா' என்று அழைப்பார்கள். முறையற்ற உணவு பழக்கம், சுற்றுப்புற மாசு, சுமையான வாழ்க்கை முறையால் ஏற்படும் தீவிரமான மன அழுத்தம் போன்றவைகளால் உடலில் நச்சுத்தன்மை குவியும். தண்ணீரில் கரையும் நச்சுப் பொருட்கள் சிறுநீர், மலம் மற்றும் வியர்வை வழியாக சுலபமாக வெளியேறிவிடும். ஆனால் மற்றவைகள் எல்லாம் சிரமப்படும்.

முறையான உணவு பழக்கமும், உடற்பயிற்சியும் இவ்வகை நச்சுப்பொருட்களை நீக்க உதவும். இருப்பினும், கொழுப்பில் கரையும் நச்சுப் பொருட்கள் அவ்வளவு சுலபமாக வெளியேறி விடாது. இவ்வகை அசுத்தம் வயிறு, இடுப்பு மற்றும் தொடை பகுதிகளை தான் முதலில் குறி வைக்கும்.

இப்பகுதிகளில் இவை கொழுப்பாக தேங்கி விடும். ADVERTISEMENT ஆயுர்வேத நுட்பங்கள் முதலில் 'அமா' வை தான் குறி வைக்கும். அதன் படி உடலில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும். அதிலும் கொழுப்பு அணுக்களை சுருக்கி, இதனை சிறப்பாக செயல்படுத்தும். உங்களுக்கு வயது அதிகமாக அதிகமாக கொழுப்பு வெளியேற்றம் குறையும்.

அதனால் இந்த நுட்பத்தை அடிக்கடி செய்து வந்தால், நச்சுப் பொருட்கள் மற்றும் அசுத்தங்களை சீரான முறையில் உடலில் இருந்து வெளியேற்றலாம். மேலும் இது வருங்காலத்தில் ஏற்படும் தீவிரமான உடல் பருமனையும் தடுக்கும். உடல் பருமனை நீக்க செய்யப்படும் ஆயுர்வேத சிகிச்சைக்கு முக்கியமாக விளங்குவது ஆரோக்கியமான வாழ்வு முறை.

இது பொதுவான ஒரு வாக்கியமாக இருக்கலாம், ஆனால் அது தான் உண்மை. அதற்கு முதலில் இரவு வேகமாக தூங்கி, காலையில் வேகமாக விழிக்க வேண்டும்.

நம் உடம்பிலும் ஒரு கடிகாரம் உள்ளது. அது பாதிக்கப்பட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும். ஆரோக்கியமான வாழ்வு முறை உணவு பழக்கத்தை பொறுத்து அமையும். ஆயுர்வேதத்தை பொருத்தவரை, உடல் எடையை அதிகமாக உள்ளவர்களை பருவகால காய்கறிகளையும், பழங்களையும் உண்ண சொல்கின்றனர் வல்லுனர்கள்.

மேலும் இவ்வகை இயற்கை உணவு மற்றும் பழங்களில் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆயுர்வேத முறைப்படி உடல் எடையை குறைக்க முற்படும் போது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

இதோ உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை ஆயுர்வேத முறைப்படி நீக்குவதற்கான சில டிப்ஸ்...

எலுமிச்சை ஜூஸ் காலையில் எழுந்ததும் தினத்தை தேன் மற்றும் எலுமிச்சை கலந்த ஒரு டம்பளர் தண்ணீருடன் ஆரம்பியுங்கள். இது நச்சுத்தன்மையை நீக்கும் பானமாக அமையும். அதனால் இது நச்சுப்பொருட்களை சிறந்த முறையில் உடலில் இருந்து வெளியேற்றும்.

காய்கறிகள் மற்றும் பழங்கள் எப்போதும் பச்சை காய்கறிகள் மற்றும் சமைத்த நற்பதமான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். அதிகமாக உண்ணுவதற்கு பதிலாக, குறைந்த அளவிலான உணவை பல முறை உண்ணுங்கள்.

அதிலும் ஒரு நாளைக்கு அதிக அளவு உணவை 3 முறை சாப்பிட்டு வந்தால், உணவின் அளவை குறைத்து 6 முறை அல்லது அதற்கு மேலாக உண்ணலாம். இது நல்ல பலனை தரும். மேலும் சிறந்த பலனை பெற நற்பதமான பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நல்ல தூக்கம் வாழ்க்கையில் எவ்வளவு சுமை இருந்தாலும் பரவாயில்லை, தினமும் 8 மணி நேரமாவது தூங்க தவறாதீர்கள். அதே மாதிரி தினமும் ஒரே நேரத்தில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.

ஜங்க் உணவுகளை தவிர்க்கவும் ஜங்க் வகை உணவுகளை முக்கியமாக தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக அதிக நார்ச்சத்துள்ள முழு தானியங்கள் மற்றும் முளைத்த பயறுகளை உண்ணுங்கள்.

மசாலா பொருட்கள் ஆயுர்வேத சிகிச்சையானது நற்பதமான மஞ்சள், இஞ்சி, பூண்டு, சீரகம் மற்றும் கருப்பு மிளகை சேர்த்துக் கொள்ள வலியுறுத்துகிறது. இவ்வகை மசாலா உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை சிறந்த முறையில் நீக்கி உடலின் மெட்டபாலிச சக்தியை மேம்படுத்தும்.

உடற்பயிற்சி அவசியம் உண்மையிலேயே கொழுப்பை குறைக்க முயற்சி செய்தால், வெறுமனே உணவை மட்டும் நம்பாதீர்கள். உணவுடன் சேர்த்து போதுமான உடற்பயிற்சியிலும் ஈடுபட வேண்டும். உடல் எடையை வேகமாகவும், பாதுகாப்பாகவும் குறைக்க யோகாசனம் சக்தி வாய்ந்த வழியாக விளங்குகிறது.

எதிலும் அளவாக இருக்கவும் எப்போதும் நடுநிலையுடன் வாழுங்கள். எதையுமே அளவுக்கு அதிகமாக செய்யாதீர்கள். இது தான் ஆயுர்வேதத்தின் மூல மந்திரம்.

மது குடிக்கும் பழக்கம் இருந்தால், அதனை முற்றிலும் ஒரே நேரத்தில் நிறுத்த வேண்டியதில்லை. மாறாக குடிக்கும் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். இது வாழ்க்கையில் அனைத்திற்குமே பொருந்தும்.


0 comments:

Post a Comment