Wednesday, 6 November 2013

ஏமாற்றத்தை தாங்கும் பக்குவம் வந்துவிட்டது: அமலா பால்


சென்னை: எந்த விஷயத்திலும் அதிகம் எதிர்பார்க்காமல் நடந்து கொள்கிறாராம் அமலா பால். தலைவா படத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்று அவர் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகிவிட்டது.

அமலா பால் விஜய்யுடன் தலைவா படத்தில் ஜோடி சேர்ந்ததில் மகிழ்ச்சியாக இருந்தார். இந்த படம் தனது கெரியரில் முக்கியமான ஒன்று என்று கருதினார்.

தலைவா படத்தில் தனது கதாபாத்திரம் சவாலானது என்றும், அதனை சிறப்பாக செய்ய முயன்றதாகவும் அமலா தெரிவித்தார்.

தலைவா மட்டும் தலைவா படம் மட்டும் ஹிட்டானால் தான் தான் கோலிவுட்டின் நம்பர் ஒன் நாயகி என்று அமலா பால் தெரிவித்திருந்தார்.

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று அமலா பால் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகிவிட்டது. தலைவா படம் ஓடினாலும் அமலாவை பாவம் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் இனிமேல் எந்த விஷயத்திலும் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளார் அவர்.

பட வாய்ப்புகள் அமலா பால் தற்போது தமிழில் 2 படங்களில் நடிக்கிறார். மேலும் தெலுங்கிலும், மலையாளத்திலும் தலா ஒரு படங்களில் நடிக்கிறார். அமலா பால் தற்போது தமிழில் 2 படங்களில் நடிக்கிறார். மேலும் தெலுங்கிலும், மலையாளத்திலும் தலா ஒரு படங்களில் நடிக்கிறார்.

வெற்றி, தோல்வி வெற்றி, தோல்வியை எதிர்பார்க்காமல் படங்களில் பணியாற்ற வேண்டும் என்பதை தான் உணர்ந்துவிட்டதாக அமலா தெரிவித்துள்ளார். மேலும் ஏமாற்றம் அடைந்தாலும் அதை தாங்கிக் கொள்ளும் பக்குவம் வந்துவிட்டது என்றார் அவர்.


0 comments:

Post a Comment