Tuesday, 12 November 2013

உலக சாதனைக்காக தொடர்ந்து 50 மணிநேரம் போனில் பேசும் நோயாளி.....


தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட ஒருவர் தொடர்ந்து 50 மணி நேரம் போனில் பேசி புதிய சாதனை ஒன்றை முயற்சித்துள்ளார். தலைநகர் பிரெட்டோரியாவின் தெற்கே உள்ள செண்சூரியன் நகரில் ஆண்ட்ரே வன் ஜிஜ்ல் (63) என்பவர் இவ்வாறு முயற்சித்துள்ளார்.

தொடர்ந்து 50 மணி நேரமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் இவர், இதற்கு முன்னர் தொடர்ந்து 54 மணி நேரம் 4 நிமிடங்களுக்கு தொலைபேசியில் பேசிய முந்தைய உலக சாதனையை முறியடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஏற்கனவே இவர் தொடர்ந்து 13 நாட்கள் வெந்நீர் தொட்டியில் அமர்ந்திருந்தது, டிஸ்கோ இசைக்கேற்ப தொடர்ந்து 345 மணி நேரம் நடனம் ஆடியது உள்ளிட்ட 39 வகை அரிய சாதனைகளையும் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment