மும்பை: எப்பப்பா மிஸ்டர் இந்தியா பார்ட் டூ எடுப்பீங்க என்ற கேள்விக்கு பதிலளித்து டயர்ட் ஆகிப் போய் விட்ட ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தற்போது ஸ்ரீதேவியி்ன் புதுப் படத்தில் பிசியாகியுள்ளார்.
இந்தப் படத்தில் ஸ்ரீதேவிக்கு முக்கிய ரோலாம். அதில் அவரது கணவர் வேடத்தில் நடிக்க நடிகரைத் தேடிக் கொண்டிருக்கிறாராம்.
ஸ்ரீதேவிக்கு கணவர் கிடைத்து விட்டார் நேராக ஷூட்டிங்தான் என்றும் தெளிவாகப் பேசுகிறார் போனி.
அனில் கபூரை வைத்து நோ என்ட்ரி தற்போது அனில் கபூர், சல்மான், பர்தீன் கான் ஆகியோரை வைத்து நோ என்ட்ரி படத்தின் தொடர்ச்சியை தயாரிக்கப் போகிறார் போனி கபூர்.
தம்பி படத்தையும் பார்க்கிறார் அதேபோல தனது தம்பி சஞ்சய் கபூர் தனது மகனுடன் இணைந்து உருவாக்கும் படத்தின் வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்கிறாராம் போனி.
சோனாக்ஷியும், மனோஜ் பாஜ்பாயும் இந்தப் படத்தில் சோனாக்ஷியும், மனோஜ் பாஜ்பாயும் இணைந்து நடிக்கிறார்கள்.
3 மொழிகளில் ஸ்ரீதேவி படம் அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தியில் ஸ்ரீதேவியை நாயகியாக போட்டு ஒரு படம் தயாரிக்கப் போகிறார் போனி.
கணவரைத் தேடுகிறோம் இந்தப் படத்தில் ஸ்ரீதேவிக்கு முக்கியப் பாத்திரமாம். அவர்தான் நாயகியாம். அவருக்கு கணவர் வேடத்தில் நடிக்க நல்ல நடிகர் கிடைக்கவில்லையாம். கிடைத்ததும் ஷூட்டிங்தானாம்... பேசாம போனியே நடிக்கலாமே.. ஓ.. படம் போணியாகாதோ...!


0 comments:
Post a Comment