காலை வேளையில் தோசை, இட்லி என்று சாப்பிட்டு அலுத்துவிட்டதா? அப்படியானால் தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ள முட்டை சீஸ் ரோலை முயற்சி செய்து பாருங்கள்.
இது ஒரு சுவையானது மட்டுமின்றி, ஆரோக்கியமான காவை உணவும் கூட. மேலும் சீக்கிரம் செய்து முடிக்க கூடியது.
இப்போது அந்த முட்டை சீஸ் ரோலை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
முட்டை - 2
சீஸ் - 8 துண்டுகள்
பிரட் - 8 துண்டுகள்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1 சிட்டிகை (துருவியது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய இஞ்சி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு மிளகாய் தூள், சாட் மசாலா சேர்த்து, கலவை நன்கு கெட்டியாகும் வரை கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு சோள மாவை தண்ணீர் ஊற்றி ஓரளவு நீர்ம நிலையில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பிரட் துண்டை எடுத்து, அதன் மேல் ஒரு சீஸ் துண்டை வைத்து, பின் கலந்து வைத்துள்ள முட்டைக் கலவை சிறிதை சீஸ் மேல் வைத்து, நீர்ம நிலையில் கலந்து வைத்துள்ள சோள மாவு கொண்டு ரோல் போன்று சுருட்டிக் கொள்ள வேண்டும்.
இதேப் போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் செய்ய வேண்டும்.
இறுதியில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சுருட்டி வைத்துள்ள ரோல்களை வைத்து, நன்கு பொன்னிறமாகும் வரை பிரட்டி எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான முட்டை சீஸ் ரோல் ரெடி!!!


0 comments:
Post a Comment