Thursday, 31 October 2013

கௌதம் மேனன்-அஜித் கூட்டணியில் அடுத்த படம் உறுதி!


சமீப காலமாக தமிழ்த்திரையுலகின் சூடான தலைப்புகளில் இடம்பெற்றிருந்த கௌதம் மேனனின், சூர்யாவுடனான புராஜக்ட் டிராப் ஆகிவிட கௌதம் மேனன் மறுபடியும் தலைகாட்ட நீண்ட நாட்கள் ஆகும் என்று நினைத்திருந்த திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் ஆச்சர்யமளிக்கும் விதத்தில் ’அடுத்த படம் அஜித்துடன்’ என்று களம் இறங்கியிருக்கிறார் கௌதம் மேனன்.

சில நாட்களாகவே கௌதம் மேனன் அஜித் இணைகிறார்கள் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டுவந்தாலும், இவ்வளவு சீக்கிரம் கௌதம் மேனன் இப்படி ஒரு முயற்சி எடுக்கமாட்டார் என்றே நினைத்துவந்தது கோடம்பாக்கம். ஆனால் அஜித்துக்கு நெருங்கியவர்கள் இந்த செய்தியை உறுதிபடுத்தியிருப்பதாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதாலும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

ரசிகர்கள் அஜித்தை பார்ப்பதற்கு திரைப்படத்தை விட்டால் வேறு வழி இல்லை என்பதால் அஜித் எத்தனை படம் ஒப்புக்கொண்டாலும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஆனால் அஜித்தை பார்த்து மகிழ்ச்சியடைவது ரசிகர்கள் மட்டுமல்ல திரைத்துறையில் இருக்கும் நடிகைகளும் தான் என்பதே அஜித்தின் சிறப்பு.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் ஹீரோயின் விஷாகா சிங் சமீபத்தில் அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியில் வாயடைத்துப் போயிருக்கிறார். ராமோஜி ஃபிலிம் சிட்டியிலிருந்து படப்பிடிப்பிற்கு கிளம்பிய விஷாகா சிங் தனது அறையை விட்டு வெளியே வந்ததும் அஜித்தை சந்தித்திருக்கிறார்.

’குட் மார்னிங்’ என்ற வாழ்த்துக்களுடன் விஷாகா சிங்கிடம் பேச ஆரம்பித்த அஜித், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை பற்றியும், விஷாகா சிங் நடித்துக்கொண்டிருக்கும் ‘ஃபர்கீ’ திரைப்படத்தைப் பற்றியும் பேசிவிட்டு விடைபெற்றுச்சென்றிருக்கிறார். அஜித்தை சந்தித்த மற்றவர்கள் மாதிரியே விஷாகா சிங்கும் அஜித்தின் தாழ்மையான குணத்தைப் பற்றி டுவிட்டரில் புகழ்ந்துகொண்டிருக்கிறார்.

இதுவரை தீபாவளி ரிலீஸ் என்று குறிப்பிடப்பட்டுவந்து அஜித்தின் ’ஆரம்பம்’ திரைப்படம் அக்டோபர் 31-ஆம் தெதி ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆரம்பம் திரைப்படத்தில் அஜித் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் ‘அஷோக்’ என்று தெரிகிறது.

0 comments:

Post a Comment