Thursday, 31 October 2013

கீரை - ஓட்ஸ் பொரியல்


தினமும் ஏதாவது ஒரு வகை கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். கீரையுடன், ஓட்ஸ் சேர்த்து கொண்டால் கூடுதல் சத்துகள் கிடைக்கும்.

தேவையான பொருட்கள் :

கீரை - 1 கட்டு (ஏதாவது ஒரு கீரை)

ஓட்ஸ் - அரை கப்

எண்ணெய் - 1 ஸ்பூன்

கடுகு - தாளிக்க

பூண்டு - 2 பல்

காய்ந்த மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

• கீரையை சுத்தம் செய்து பொடியாக வெட்டி கொள்ளவும்.

• ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு 3 நிமிடம் வறுத்துக் கொள்ளவும்

• மிக்சியில் பூண்டு, காய்ந்த மிளகாய் போட்டு பொடித்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் வறுத்த ஓட்ஸை போட்டு ஒன்றும் பாதியுமாக பொடித்துக் கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கீரை, தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.

• கீரை நன்றாக வெந்தவுடன் பொடித்த ஓட்ஸ் மசாலாவை போட்டு கிளறி 2 நிமிடம் மூடி வைக்கவும்.

0 comments:

Post a Comment