Thursday, 31 October 2013

கேரட் - உருளைக்கிழங்கு சூப்


தேவையானப்பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2

கேரட் - 2

வெங்காயம் - 1

பூண்டுப்பற்கள் - 2

ஆலிவ் எண்ணெய்- 1 டேபிள்ஸ்பூன்

பட்டை இலை - 1

தண்ணீர் - 4 கப்

உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப

கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை:

• உருளைக்கிழங்கு, கேரட் இரண்டையும் கழுவி, தோலை சீவி விட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 2 கப் உருளைக்கிழங்கு துண்டுகள் மற்றும் 2 கப் கேரட் துண்டுகள் தேவை.

• கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து ஆலிவ் ஆயிலை ஊற்றி வெங்காயத்தைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

• பின்னர் அத்துடன் பூண்டு, உருளைக்கிழங்கு, கேரட் துண்டுகள் சேர்த்து 3 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.

• பின்னர் அதில் 4 கப் தண்ணீரை விட்டு, அத்துடன் பட்டை இலையை சேர்த்து மூடி போட்டு 3 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

• குக்கரின் சூடு தணிந்ததும், மூடியைத் திறந்து அதிலுள்ள பட்டை இலையை எடுத்து விட்டு, மிக்சி பிளண்டரை உபயோகித்துக் கடைந்து விட்டு, உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

0 comments:

Post a Comment