படங்களில் நடிக்க வாய்ப்பு வராததால் நாடக மேடையில் நடிக்க வருகிறார் நீது சந்திரா.யாவரும் நலம், ஆதிபகவன், தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய் படங்களில் நடித்திருப்பவர் நீது சந்திரா.
இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது. இதையடுத்து மேடை நாடகத்தில் நடிக்கிறார். நாடகத்தில் நடிப்பது பற்றி அவர் கூறியதாவது: புரட்சி பெண்ணும்.
கவிஞருமான உமராவோ ஜான் என்ற வேடத்தில் மேடை நாடகத்தில் நடிக்க உள்ளேன். இவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவானபோது ரேகா, ஐஸ்வர்யா ராய் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
அதில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தபோது உடனே ஒப்புக்கொண்டேன். ரேகா, ஐஸ்வர்யாராய் இருவரும் ஏற்று நடித்த வேடத்திலிருந்து நான் ஏற்கும் வேடம் மாறுபட்டது. அவர்கள் படங்களில் நடித்தார்கள்.
நான் நாடக மேடையில் நடிக்கப்போகிறேன். வரும் நவம்பர் 7ம் தேதி மும்பையில் உள்ள பிருத்வி தியேட்டரில் நாடகம் நடக்க உள்ளது. இந்த கதாபாத்திரத்துக்காக கதக் நடனத்தை பயிற்சி செய்து வருகிறேன்.
அத்துடன் வசனத்தில் தெளிவு வேண்டும் என்பதற்காக உருது மொழியையும் துல்லியமாக பேச பயிற்சி எடுக்கிறேன்.இவ்வாறு நீது சந்திரா கூறினார்.


0 comments:
Post a Comment