விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 திரைப்படங்களில் ஓய்வில்லாமல், இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என கடும் சுமைகளை தாங்கிக்கொண்டு நடித்துவரும் கமல்ஹாசன் அடுத்தது ரிலாக்ஸாக ஒரு காமெடி திரைப்படத்தில் நடிக்கிறார்.
லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு உத்தமவில்லன் என பெயர் வைத்து, இயக்குனர் பொறுப்பை கமலின் நீண்ட நாள் நண்பரான ரமேஷ் அரவிந்திடம் கொடுத்திருக்கிறார்கள்.
காமெடி படம் என்றவுடன் நினைவுக்கு வரும் வகையில் தொடர்ந்து காமெடிப் படங்களில் வெற்றிகளைக் கொடுத்துவரும் இயக்குனர் ராஜேஷிடம் இத்திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சந்தானத்திடமும் பேசப்பட்டுள்ளதாம். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகவிருக்கிறது உத்தம வில்லன்.


0 comments:
Post a Comment