ஆத்தூர் அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பிய 9 ஆம் வகுப்பு மாணவியை கல்லூரி வாலிபர் கடத்தி சென்று கற்பழித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மாணவி மருத்துவமனியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த வீரகனூர் அருகே உள்ள பகடபாடி பகுதியை சேர்ந்தவர் திருமால். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் வீரகனூர் அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினமும் பேருந்தில் பள்ளிக்கு சென்றுவிட்டு பின்னர் மீண்டும் மாலையில் பேருந்தில் வீட்டிற்கு வருவார்.
இதே போல் நேற்று மாலையும் பள்ளி முடிந்து மாணவி வீரகனூரில் இருந்து பகடபாடி கிராமத்துக்கு பஸ்சில் வந்தார். பின்னர் அவர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தனியாக நடந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார்.
அப்போது...
..இதே ஊரை சேர்ந்த பரஞ்ஜோதி என்பவரது மகன் விஜய் என்ற கல்லூரி மாணவர் மாணவி தனியாக வருவதை பார்த்தார். பின்னர் அவர் திடீரென பாய்ந்து மாணவியின் வாயில் துணியை திணித்து அவரை காட்டுப்பகுதிக்கு தூக்கிசென்றார்.
அப்போது மாணவி தனது பள்ளி பாடப் புத்தக்கப்பையை ரோட்டில் போட்டுவிட்டார். பின்னர் விஜய், மாணவியின் ஆடைகளை கழற்றி அவரை கற்பழித்துள்ளார். இதில் வலி தாங்க முடியாத மாணவி அலறியுள்ளார். ஆனாலும் அவர் மாணவியின் பின் கைகளை துப்பட்டாவில் கட்டி, வாயில் துணியை திணித்து கற்பழித்துள்ளார்.
மாலை 6 மணிக்கு மேல் ஆகியும் மாணவி வீட்டுக்கு வராததால் மாணவியின் தாய் மற்றும் அவரது அண்ணன் ஆகியோர் மாணவியை தேடிக்கொண்டு சென்றனர். அப்போது மாணவியின் புத்தகப்பை நடுரோட்டில் கிடந்தது. எனவே மாணவி இந்த பகுதியில் கழிவறைக்கு சென்று இருக்கலாம் என்று நினைத்து அவரது தாய் மட்டும் சென்று தேடினார்.
அப்போது மாணவி அலங்கோலமான நிலையில் இருப்பதையும், அவரை மாணவர் விஜய் பலாத்காரம் செய்து கொண்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஓடிச்சென்று விஜயை மடக்கி பிடித்துக் கொண்டு சத்தம் போட்டார்.
இதையடுத்து...
வெளியில் நின்று கொண்டு இருந்த அவரது மகன் அங்கு ஓடிவந்தார். அந்த நேரத்தில் விஜய், மாணவியின் தாயை தாக்கிவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர் அவர்கள் மாணவியின் பின் பக்ககட்டை அவிழ்ந்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். அங்கு மயங்கிய நிலையிலேயே இருந்தார்.
உடலில் பலத்த காயம் ஏற்பட்டதால் மாணவியை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாணவியின் பெற்றோர் வீரகனூர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் கல்லூரி மாணவர் விஜயை அழைத்து விசாரித்துவிட்டு பின்னர் அவரை அனுப்பிவிட்டதாக மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


0 comments:
Post a Comment