தேசிய சைபர் பாதுகாப்பு நிபுணரின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.19 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
தேசிய சைபர் பாதுகாப்பு ஆலோசனை மையத்தின் உறுப்பினராக இருப்பவர் சஞ்சய் கோவிந்த் தாண்டே(65). இவர் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கணக்கில் இருந்து கில்லாடி நபர்கள், ஆன்லைன் மூலம் 4 நாளில் ரூ.19 லட்சத்து ஆயிரத்து 73 ரூபாயை சுரண்டி பொருட்கள் வாங்கியுள்ளனர்.
ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும்போது, உடனுக்குடன் வாடிக்கையாளரின் செல்போன் எண்ணுக்கு தகவல் வரும். இதனால் தாண்டேவின் செல்போன் எண்ணையும் முடக்கியுள்ளனர்.
தாண்டே வங்கி கணக்கில் இருந்து குறுகிய இடைவெளியில் அதிக பணம், டிரான்ஸ்வர் ஆவதை கண்டறிந்த வங்கி அதிகாரிகள், தாண்டேவை தொடர்பு கொண்டனர்.
அவரது செல்போன் உபயோகத்தில் இல்லை. மாற்று எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதைக் கேட்டு தாண்டே அதிர்ச்சியடைந்தார்.
இந்த திருட்டு குறித்து புனே சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் தாண்டே புகார் அளித்துள்ளார்.
ஐசிஐசிஐ வங்கியின் சர்வருக்குள் ஊடுருவிய ஆன்லைன் திருடர்கள், தாண்டே கணக்கிலிருந்து ரூ.19 லட்சத்துக்கு பொருட்கள் வாங்கியதாக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.


0 comments:
Post a Comment