இந்தி, தெலுங்குப் படங்களில் நடித்து வரும் மதுரிமாவை தமிழ் சினிமா இதுவரை பயன்படுத்திக் கொள்ளாதது ஆச்சரியம். ஆர்கே நடிப்பில் தொடங்கப்பட்ட இபிகோ படத்தில் மதுரிமாவை ஷாஜி கைலாஷ் ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் படம் பாதியில் நிற்கிறது.
விரைவில் தொடங்கயிருக்கும் புதிய தமிழ்ப் படத்தில் வினய் ஜோடியாக நடிக்கிறார் மதுரிமா. கடைசியில் அவருக்கும் ஒரு வாய்ப்பு அமைந்திருக்கிறது. வினய் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை மலையாள இயக்குனர் அனில் குமார் இயக்குகிறார். மதுரிமாவை இபிகோ-வில் ஒப்பந்தம் செய்த ஷாஜி கைலாஷும் மலையாள இயக்குனர் என்பது முக்கியமானது.
ரொமான்டிக் த்ரில்லராக உருவாகயிருக்கும் இந்தப் படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு நியூசிலாந்தில் நடக்கிறது 25 சதவீதம் சென்னையில். மதுரிமாவுக்கு இந்தப் படம் தமிழில் பெயர் சொல்லும் படமாக அமையுமாம்.


0 comments:
Post a Comment