Wednesday, 18 September 2013

ஆட்டம்கண்ட ராபர்ட் டி நீரோவின் ஆட்டோபயோகிராஃபி



ஹாலிவுட்டின் முக்கிய நடிகர் ராபர்ட் டி நீரோ. இப்படி சொல்வது தமிழில் சிவா‌ஜி கணேசன் என்ற சிறந்த நடிகர் இருந்தார் எனபதற்கு சமம். ராபர்ட் டி நீரோவை தெரியாதவர்கள் ஹாலிவுட்டை அறியாதவர்கள்.


காட்ஃபாதர் உள்பட ஏராளமான நல்ல படங்களில் நடித்த நீரோ தனது 70 வது வயதில் ஒரு முயற்சியை மேற்கொண்டார். தனது சுயச‌ரிதையை எழுதுவது. சிலபல முயற்சிகளுக்குப் பின், அதுக்கு நான் ச‌ரிப்பட மாட்டேன் என்று ஜகா வாங்கியிருக்கிறார்.
நிறைய நினைவுகள் இருக்கிறது. ஆனால் பேப்பரை எடுத்தால் எதிலிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை, என்னால் சுயச‌ரிதை எழுதுவது இயலாத கா‌ரியம் என கூறியிருக்கிறார். மார்லன் பிராண்டோ, பிரான்ஸ் ஃபோர்ட் கப்போலோ, மார்ட்டின் ஸ்கார்ஸசிஸ் உள்பட ஏராளமான ஜாம்பவான்களுடன் பணியாற்றியவர் நீரோ. அவ‌ரின் சுயச‌ரிதை என்பது ஹாலிவுட்டின் குறுக்குவெட்டு தோற்றத்தை சொல்வதற்கு சமம். அதனை அவ்வளவு எதிளில் விடமுடியாது.
வேண்டுமானால் சுயச‌ரிதை எழுதுவதற்குப் பதில் படம் எடுக்கலாம். என்னை பற்றியல்ல. நான் அனுபவப்பட்டவற்றை, அதிலிருந்து கற்றுக் கொண்டவற்றை.
நீரோ சொல்வதைப் பார்த்தால் ஆட்டோபயோகிராஃப் இப்போதைக்கு சாத்தியமில்லை.

0 comments:

Post a Comment