கர்நாடகாவின் பெங்களூருவைச் சேர்ந்தவர் மனிஷா யாதவ். இருபதிலிருந்து இருபத்தியொன்றாவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் மனிஷாவின் முதலிரு படங்களும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டவை. ஜன்னல் ஓரம், பட்டைய கிளப்பு பாண்டியா என்று இப்போதுதான் வழக்கமான ஹீரோயின் ரோலுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார். வெற்றிமாறனின் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கப் போகிற மகிழ்ச்சி மனிஷாவிடம் தெரிகிறது.
வழக்கு எண் படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டீர்கள் போலிருக்கிறதே...?
வழக்கு எண் படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் எந்தக் கதையும் மனசுக்கு நெருக்கமானதாக இல்லை. அப்போதுதான் சுசீந்திரன் சார் ஆதலால் காதல் செய்வீர் படத்தின் கதையை சொன்னார். கொஞ்சம் வழக்கு எண் மாதிரியான கேரக்டர்தான். ஆனாலும் நல்ல கதை என்பதால் நடித்தேன். படம் முடிந்தவுடன் வெளிவந்திருந்தால் உங்களுக்கு இந்த இடைவெளி தெரிந்திருக்காது.
ஆதலால் காதல் செய்வீர் படமும், உங்க கதாபாத்திரமும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறதே?
என்னுடைய திறமையை வெளிப்படுத்துகிற கேரக்டர் என்பதால்தான் நடித்தேன். அதுவும் கதையை கேட்டுவிட்டுதான். பெரிய அளவில் எதிர்மறை விமர்சனங்கள் இல்லை என்றுதான் நினைக்கிறேன். துணிச்சலான கேரக்டர், நல்லா நடிச்சிருக்கீங்க என்றுதான் அனைவரும் பாராட்டுகிறார்கள். முதலிரண்டு படங்களும் ஒரே மாதிரியாகிவிட்டது. ஆனால் அடுத்தடுத்தப் படங்கள் வேறு மாதிரி இருக்கும்.
நீங்கள் நடித்த இந்த இரண்டு கேரக்டர்களும் உங்களை பிரதிபலிப்பது மாதிரி உணர்கிறீர்களா?
கண்டிப்பாக கிடையாது. சினிமாவில் நீங்க பார்க்கும் மனிஷாவும், நிஜ மனிஷாவும் வேறு. நான் அவ்வளவு சீக்கிரம் ஏமாறக் கூடியவள் இல்லை. தெளிவானவள். சில நேரம் என்னுடைய குடும்பத்துக்கே ஆலோசனை சொல்வதுண்டு. இரண்டு படங்களில் ஒரே மாதிரியான கேரக்டர்களில் நடித்ததால் உங்களுக்கு அப்படி தோன்றியிருக்கலாம். அடுத்து வருகிற படங்களில் வித்தியாசமான வேடங்கள். அப்போது உங்களின் பார்வையும் மாறிவிடும்.
என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்?
கரு.பழனியப்பன் இயக்கத்தில் ஜன்னல் ஓரம். இது மலையாளத்தில் ஹிட்டான படத்தின் ரீமேக். எனக்கு ரொம்ப நல்ல கேரக்டர். கிராமத்து பெண்ணாக வருகிறேன். எஸ்.பி.ராஜ்குமாரின் பட்டைய கிளப்பணும் பாண்டியா படத்திலும் நடிக்கிறேன். காமெடி படம். காமெடி எனக்கு கொஞ்சம் சவாலாகதான் இருந்தது.
பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காததில் வருத்தம் இருக்கிறதா?
நான் சினிமாவுக்கு வந்து இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. அதற்குள் இந்த படத்தில்தான் நடிப்பேன், இந்த மாதிரி ஹீரோவுடன்தான் நடிப்பேன் என்றெல்லாம் டிமாண்ட் பண்ண முடியாது. த்ரிஷா, அசின் கூடவெல்லாம் போட்டியிடுகிற இடத்தில் நான் இல்லை என்பது தெரியும். அதுக்காக எந்த வருத்தமும் இல்லை. நாளையே இது மாறலாம்.
தனுஷுடன் நடிக்க கிடைத்திருக்கும் வாய்ப்பு பற்றி...?
உண்மையில் இப்படியொரு வாய்ப்பு நான் எதிர்பார்க்காதது. வெற்றிமாறன், தனுஷ் தேசிய விருது வாங்கிய கூட்டணி. ஆடுகளம் எனக்கு ரொம்பப் பிடித்த படம். தாப்ஸியை அதில் அழகாக காட்டியிருப்பார்கள். அப்படியொரு வேடம் எனக்கும் அமையும் என்று நினைக்கிறேன். படப்பிடிப்புக்கு போக ஆர்வமாக இருக்கிறேன்.
எந்த மாதிரி இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆசை?
சினிமாவில் எனக்கு வந்த வாய்ப்புகள் எல்லாமே என்னுடைய தேர்வு கிடையாது. தேடி வந்ததில் நடிக்கிறேன். என்றாலும் பாலாஜி சக்திவேல் சார் மாதிரி கதையை வடிவமைக்கிற இயக்குனர்களின் படங்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன். பாலா, மணிரத்னம், செல்வராகவன் மாதிரி கதைக்கு முக்கியத்துவம் தரும் இயக்குனர்களின் படங்களே என்னுடைய முதல் சாய்ஸ்.

சினிமாவில் மாடர்ன் உடையில் வரும் நீங்கள் விழாக்களுக்கு பாவாடை தாவணியில் வருகிறீர்களே...?
பாவாடை தாவணி எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அம்மாவும் பெண்களுக்கு அதுதான் அழகு என்பார். அடுத்து வரவிருக்கிற ஜன்னல் ஓரம், பட்டைய கிளப்பணும் பாண்டியா இரண்டிலும் எனக்கு கிராமத்து வேடம். அதில் வரும் பாவாடை தாவணி மனிஷாவை உங்களுக்கும் ரொம்பவும் பிடிக்கும்.

0 comments:
Post a Comment