யாழில் உள்ள பெண்களை வேலை வாய்பை ஏற்படுத்தி தருவதாக டக்ளஸ் மலேஷியாவுக்கு அனுப்பி வருவதாகவும், அப்பாவி பெண்களை வைத்து மலேசியாவில் பாலியல் தொழில் நடப்பதாகவும், இதில் பல அப்பாவி ஆண்களும் அடிமைகளாக வேலைப் பார்ப்பதாகவும் wikileaks சில ரகசிய குறிப்புகளை The telegraph நாளிதழுக்கு வழங்கி அம்பலப்படுத்தியுள்ளது.
விக்கிலீக்ஸ் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. பல நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரங்கள் தமது தலைமைக்கு தாம் அறியும் ரகசியங்களை பாதுகாப்பாக அனுப்பிவைப்பது வழக்கம். இவ்வாறு பல இரகசியங்கள் கேபிள் மூலமாக அமெரிக்க தலைமைக்கு செல்லும்.
இத்தகவல்கள் அமெரிக்காவுக்கு செல்லும் வேளை, விக்கிலீக்ஸ் நிறுவனம், அதனை இடைமறித்து பல தகவல்களை பெற்று தற்போது வெளியிட்டு வருகிறது
இவ்வாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், ஊடுருவி அறிந்த நம்பிக்கையான சில ரகசியத் தகவல்களை தமது தலைமைக்கு அனுப்பியுள்ளது. இத்தகவல்களே தற்போது வெளியாகியுள்ளது.
இவரைப் பற்றி, அமெரிக்க தூதரகம் எழுதியுள்ளது தலவலில்,
' இலங்கைக்கான முன் நாள் அமெரிக்க தூதுவர் ரொபேட் ஓ பிளேக் இத்தகவலை தனது தலைமைக்கு "சீக்கிரெட்" என்று பெயரிட்டு அனுப்பியுள்ளார்.
அதாவது யாழில் உள்ள பல பெண்களை டக்ளஸ் , மலேசியாவுக்கு அனுப்பிவருவதாகவும், வேலை வாய்ப்பை பெற்றுத்தருவதாகக் கூறியே இவர் பல பெண்களை மலேசியாவுக்கு அனுப்புவதாகவும், இதில் சாந்தராஜா என்னும் பெரும் புள்ளி ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அத்தகவலில் கூறப்பட்டுள்ளது.
மேற்படி யாழில் இருந்து அனுப்பப்படும் பல பெண்கள் மலேசியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடும் குழுக்களிடம் விற்கப்படுவதாகவும், யாழில் இருந்து சென்ற பல ஆண்கள், அடிமை வேலை பார்த்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சாந்தராஜா என்னும் பெரும் புள்ளிக்கு மலேசியா மற்றும் இலங்கையில் பல வர்த்தக நிலையங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் அடிக்கடி யாழ் சென்று டக்ளஸை சந்தித்து திரும்புவதை முன்னரே விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.


0 comments:
Post a Comment