Friday, 20 September 2013

தேவாவின் கருவறை கானா


தேவா என்றால் கானா... கானா என்றால் தேவா...

சினிமாவில் கானா பாடல்களை பிரபலப்படுத்தியவர் தேனிசை தென்றல் தேவா என்றால் மிகையில்லை. அவ‌ரின், கவலைப்படாதே சகோதராவாகட்டும், விதிவிதமா சோப்பு சீப்பு கண்ணாடியாகட்டும் எல்லாமே கேட்பதற்கு இதமானவை. சமீபத்தில் என் ஓவியா படத்துக்காக கருவறை என்று தொடங்கும் கானா பாடலை தேவா தனது குரலில் பாடியிருக்கிறார்.

திரைப்படக் கல்லூ‌ரி மாணவர்கள் திரையுலகில் ஆட்சி செலுத்திய காலம் ஒன்றிருந்தது. அதனை புனரமைக்கும் சவாலுடன் திரைப்படக் கல்லூரி மாணவர் பி.செல்வக்குமார் இயக்கிவரும் படம், என் ஓவியா. கண்டதும் காதல் மாதி‌ரி இது கேட்டதும் காதல். ஆம், ஹீரோயினின் குரலை கேட்டதும் ஹீரோ அவரை காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்.
ஆனால் விதி ஹீரோவின் நண்பனை மாப்பிள்ளையாக்கி விடுகிறது. அதன் பிறகு நடப்பது மனதை திடப்படுத்திக் கொண்டு பார்க்க வேண்டிய காட்சிகளாம். இந்தப் படத்துக்காக, கருவறைதான் கருவறை என்ற கானாவை தேவா பாடியிருக்கிறார்.

சோனி செ‌ரிஸ்டா என்பரை ஹீரோயினாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். கிளாம‌ரில் செ‌ரிஸ்டா நம்மை உண்டு செ‌ரித்துவிடுவார் என்கிறது யூனிட்.

0 comments:

Post a Comment