இன்று தன்ஷிகாவுக்கு ரொம்பவே முக்கியமான நாள். அரவான், பரதேசி என்று அடுத்தடுத்து கரிபூசி நடித்தவர் இன்று வெளியாகும் யா...யா... படத்தில் கலர்ஃபுல்லாக கலக்கியிருக்கிறார். சினிமாவில் நிஜத்தோற்றத்தில் தன்ஷிகாவைப் பார்த்து தன்ஷிகாவுக்கே வெகுநாளாகிறதாம்.
கிளாமருக்கு ஸ்கோப் உள்ள வேடங்களில் நடித்தால் மட்டுமே சினிமாவில் தாக்குப் பிடிக்க முடியும் என்பதை உணர்ந்து அதுமாதிரியான கேரக்டர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தருகிறார். ஆனாலும் பிகினி இனி அணிவதில்லை என்பது அவரின் சபதம். மாஞ்சா வேலு படத்தில் அணிந்த பிகினி அவரது உடல்வாகுக்கு செட்டாகவில்லை என்பதால் இந்த முடிவு.
அதேபோல் யாராவது கதை சொல்ல வந்தால் முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டுதான் கதை கேட்கவே ஆரம்பிக்கிறார். முத்தம் என்றால் அலர்ஜி எல்லாம் இல்லை. அதனை உரிமை உள்ளவரிடம் மட்டுமே பகிர வேண்டும் என்பது அவரது கொள்கை. என்னயிருந்தாலும் தமிழ் பெண் அல்லவா.
யா..யா.. வுக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் தேடி வரும் என்று நம்புகிறார் தன்ஷிகா.


0 comments:
Post a Comment