Friday, 20 September 2013

பொங்கல் வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது ‌ஜில்லா


விஜய்யின் ‌ஜில்லா 2014 பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது பிப்ரவ‌ரிக்கு தள்ளிப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜில்லா படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. மோகன்லாலுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னை மோகன் ஸ்டுடியோவில் படமாக்கினர்.

படப்பிடிப்பு இன்னும் முடியாத நிலையில் ‌ரிலீஸ் தேதியை உறுதியாக தெரிவிக்க முடியாது என கூறியுள்ளார் இயக்குனர் நேசன்.

இந்நிலையில் படத்தின் அமெ‌ரிக்க வெளியீட்டு உ‌ரிமையை வாங்கியிருக்கும் ATMUS Entertainments அ‌ஜித்தின் வீரம் பொங்கலுக்கு வெளியாகும் எனவும், ‌ஜில்லா பிப்ரவ‌ரியில் வெளியாகும் எனவும் தெ‌ரிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு மாஸ் நடிகர்களின் படங்கள் வெளியானால் லாபம் பாதிக்கப்படும். அதனால் விநியோகஸ்தர்கள் அதனை விரும்புவதில்லை. அவர்களின் கோ‌ரிக்கையின்படி ‌ஜில்லா வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெ‌ரிகிறது.


ATMUS Entertainments வணக்கம் சென்னை, நய்யாண்டி, அழகுராஜா, பி‌ரியாணி, என்றென்றும் புன்னகை ஆகிய படங்களின் அமெ‌ரிக்க விநியோக உ‌ரிமையை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment