பேஸ்புக்கில் லைக் கொடுப்பது பேச்சு சுதந்திரமாகும். அதை சட்டப்படி யாரும் தடுக்க முடியாது என்று அமெரிக்க கோர்ட் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
லைக் கொடுப்பது என்பது 21ம் நூற்றாண்டில் ஒரு பிரசாரத்திற்கு இணையான அளவுகோலாக கருதப்பட வேண்டும் என்றும் விர்ஜீனியா மாகாண கோர்ட் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
அமெரிக்காவின் தேசிய ஷெரீப்கள் சங்கத் தலைவர் பதவிக்கு ஹாம்ப்டன் நகர ஷெரீப் பி.ஜே.ராபர்ட்ஸ் என்பவர் போட்டியிட்டார்.
அவரது அலுவலக ஊழியர்கள், ராபர்ட்ஸுக்கு எதிராக போட்டியிட்டவருக்கு ஆதரவு கொடுத்தனர். அவரது பேஸ்புக்கிலும் லைக் போட்டனர். இதையடுத்து 6 பேரை வேலையை விட்டு தூக்கி விட்டார் ராபர்ட்ஸ்.
இதனால் கோபமடைந்த 6 பேரும் வழக்குப் போட்டனர். அதை விசாரித்த கோர்ட், அவர்கள் செய்தது தவறு என்றுகூறியது. இதை எதிர்த்தே ஆறு பேரும் அப்பீல் செய்தனர். அதில்தான் லைக் போடுவது அடிப்படை பேச்சு சுதந்திரம் என்று அப்பீ்ல் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால் தான் வேண்டும் என்றே அவர்களை டிஸ்மிஸ் செய்யவில்லை என்றும் சரியாக வேலை பார்க்காததாலும் திறமைக் குறைபாடு காரணமாகவுமே டிஸ்மிஸ் செய்ததாக கூறியுள்ளார் ராபர்ட்ஸ்.


0 comments:
Post a Comment