காதர் ஹசனை தமிழகத்தில் தெரியாது. மலையாள சினிமா புள்ளிகளின் வட்டாரத்தில் இவர் பிரபலம். இதுவரை நான்கைந்து படங்களை தயாரித்திருக்கிறார். அவர் இயக்குனராக வேண்டும் என முடிவு செய்ததும் எடுத்த முதல் நடவடிக்கை, சென்னைக்கு பிளைட் ஏறியது. தான் இயக்கும் முதல் படம் தமிழாக இருக்க வேண்டும் என்று காதர் ஹசனுக்கு ஆசை (தமிழன் என்ன சோதனை எலிகளா...?)
தமிழில் காதர் ஹசன் தயாரித்து இயக்கும் படம், குளு குளு நாட்கள்.
இசைக்கு கன்னடத்தின் முன்னணி இசையமைப்பாளர் பர்கான் ரோஷன், வசனத்துக்கு போக்கிரி படத்தின் வசனகர்த்தா பிரபாகர் என டெக்னீஷியன்கள் பக்கம் எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங்க். மீதியிருப்பது கதை.
பிளஸ் டூ வரை ஆண்களுடன் பழகாத பெண்கள், பெண்களுடன் பழகாத ஆண்கள்... இந்த இருதரப்பும் டியூசன் சென்டரில் முதல்முறையாக ஒன்றாக படிக்க நேர்ந்தால் என்ன ஆகும்? கேரளாவிலிருந்து இப்படியொரு கதையுடன் வந்து டேட்டிங் கலாச்சாரத்தை இந்தப் படத்தில் கற்றுத் தருகிறார் காதர் ஹசன். எல்லாமே புதுமுகங்கள்தான்.
படத்தின் பெயருக்கேற்ப கிளுகிளுப்பாக தயாராகியிருக்கிறதாம் படம்.


0 comments:
Post a Comment