Friday, 20 September 2013

நாங்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறோம்


அரசல் புரசலாக இருந்த விஷயம் அம்பலத்துக்கு வந்தாயிற்று. ஜெய், நஸ்ரியா நசீம் காதலைதான் சொல்கிறோம்.

ஜெய், நஸ்ரியா இரண்டு படங்களில் ஜோடியாக நடித்தனர். முதல் படம் ஆஸ்கர் ஃபிலிம்ஸின் திருமணம் என்கிற நிஹ்கா. படம் இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் நஸ்ரியா நடித்த நேரம் படம் முந்திக் கொண்டது.
அட்லீயின் ராஜா ராணி படத்தில் ஆர்யா, நயன்தாராவுடன் ஜெய், நஸ்ரியாவும் நடித்துள்ளனர். காதல் வதந்திக்குப் பிறகு இருவரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை, தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்கள் இருவரும்.

இது ஒருபுறமிருக்க, நஸ்ரியா எல்லோரிடமும் ஜோவியலாக பழகக் கூடியவர், அதனை வைத்து ஜெய்யுடன் காதல் என்று சொல்லலாமா என்பவர்களும் இருக்கிறார்கள். ராஜா ராணி டப்பிங்கில் நஸ்ரியாவும், அட்லீயும் அடித்துப் பிடித்து விளையாடியதை பார்த்தவர்கள்தான் இப்படியொரு ஐயத்தை கிளப்பியிருக்கிறார்கள். ஒரு கோழிக்காலை இருவரும் பகிர்ந்துண்டதை பார்த்தவர்கள் இவர்கள்.

இரண்டில் யாராவது ஒருவர் - ஜெய்யோ, நஸ்ரியாவோ - தொடர்பு எல்லைக்குள் வந்தால் மட்டுமே உண்மை தெரியவரும்.

0 comments:

Post a Comment