மும்பையில் விநாயகர் ஊர்வலத்தின் போது பெண் ஒருவர் மானபங்கம் செய்யப்பட்டதை பத்திரிகை ஒன்று ஸ்டிங் ஆபரேஷன் மூலம் வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க ஊர்வலமாக எடுத்துசெல்லபட்டன.
அப்போது பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற அந்த ஊர்வலத்தில் இளம் பெண் ஒருவரை , வாலிபர்கள் சிலர் சூழ்ந்து கொண்டு மானபங்கம் செய்த காட்சி ஸ்டிங்க் ஆபரேஷன் மூலம் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் டெல்லியை போல மும்பையில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக பெண்கள் அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரியிடம் தெரிவித்தப்போது, அவர் புகைப்படத்தை பார்த்தால்தான் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க இயலுமென கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment