Wednesday, 18 September 2013

தன் வேலையாட்கள் 10 பேருக்கு வீடு கட்டி தரும் அஜீத்!!


நடிகர் அஜீத், தன் வீட்டில் வேலை பார்க்கும் 10 பேருக்கு தன் சொந்த செலவில் வீடு கட்டி தருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜீத்.

தான் மட்டுமல்லாது தன்‌‌னை சார்ந்து இருப்பவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர். அவ்வப்போது தன்னால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் அஜீத், தன் வீட்டில் நீண்டகாலமாக வேலை செய்யும் 10 பேருக்கு வீடு கட்டி கொடுக்கிறார். இதற்காக மாமல்லபுரத்தை அடுத்துள்ள கேளம்பாக்கத்தில் தனியாக நிலம் வாங்கி, அதில் இந்த 10பேருக்கும் வீட்டு கட்டி கொடுக்கிறார்.

சமீபத்தில் இதற்கான பூமி பூஜை நடந்துள்ளது. ஷூட்டிங்கிற்காக அஜீத், ஐதராபாத் சென்றதால் இந்த பூமி பூஜையில் பங்கேற்கவில்லை. ஆனால் அவருக்கு பதில் அவரது மனைவி ஷாலினி பங்கேற்றார்.

முன்பு ஒருமுறை நடிகர் ரஜினிகாந்த், அவரது வேலையாட்களுக்கு இதேபோன்று வீடு கட்டி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment