Tuesday, 24 September 2013

சினிமா 100 - கலவரத்தை ஏற்படுத்திய இயக்குனர்



சினிமா நூற்றாண்டு விழா மேடையில் இயக்குனர் ஒருவர் ஏற்படுத்திய விரும்பத்தாகாத கலவரத்தால் இரண்டாம் நாள் நிகழ்ச்சி சிறிது நேரம் தடைபட்டது.


21 ஆம் தேதி தொடங்கிய கொண்டாட்டங்கள் 24 ஆம் தேதிவரை நடக்கிறது. நேற்று இரண்டாவது நாள் கொண்டாட்டத்தில் மாலை தெலுங்கு சினிமா சார்பில் தெலுங்கு திரைப்பட கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் பாடகர்கள் இணைந்து நடத்திய கச்சோpயும் ஒன்று.


எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் உள்பட ஏராளமானோர் மேடையில் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கையில், மேடையேறிய நாராணய மூர்த்தி என்ற இயக்குனர் நிகழ்ச்சியில் தடங்கலை ஏற்படுத்தினார்.

இது இந்திய சினிமாவின் நூற்றாண்டுவிழாவா இல்லை மியூஸிக் கான்சர்ட்டா என்றவர் எஸ்.பி.பி.யின் கையிலிருந்த மைக்கை பிடுங்குவதற்கு முயன்றார். அதனால் சற்று நேரம் நிகழ்ச்சி தடைபட்டது. நடிகர் ராஜசேகரும் பிறரும் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். நிலைமை மோசமாவதை கண்டதும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், ஊழியர்களும் நாராணய மூர்த்தியை மேடையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
அதன்பிறகு நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தது.

0 comments:

Post a Comment