பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.4 புள்ளிகளாக பதிவாகி இருப்பதால் உயிர்ச்சேதம் அதிகம் இருக்கும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே டெல்லி உள்ளிட்ட பல வட மாநிலங்களில் இன்று மாலை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி, நொய்டா, குர்கான் சுற்று வட்டாரங்களில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் நகரை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பலுசிஸ்தான் நகரில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பலுசிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல இடங்களில் உணரப்பட்டது.


0 comments:
Post a Comment