Tuesday, 24 September 2013

'சூப்பர் ஸ்டார்களில் அசிங்கமானவர் ரஜினி' - டிவிட்டர் பக்கம் கிழிய திட்டிய ரசிகர்கள்


சர்ச்சையான கருத்துக்களை மட்டுமே கூறும் நடிகர் கமால் கான், டிவிட்டரில் சூப்பர் ஸ்டாரை இழிவுப்படுத்தி பே‌சியுள்ளார். இவர் சில மாதங்கள் முன்பு தனுஷ் குறித்து வெளியிட்ட கருத்துக்களுக்கு இவர் மீது வழக்கு ஒன்றும் தொடரப்பட்டு‌ள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குறித்து பாலிவுட்டைச் சேர்ந்த தயாரிப்பாளர் - நடிகர் கமால் ரஷீத் கான் கூறியுள்ள கருத்துக்களால் ரஜினி ரசிகர்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர்.

இனவெறித்தனமான கமால் ரஷீத் கான் கருத்துக்கு அவரது டிவி்ட்டர் பக்கத்தில் உண்டு இல்லை என்று கருத்துக்களைக் குவித்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். உத்திரப‌்பிரதேசத்தை சேர்ந்த கமால், தேஷ் துரோகி என்று படத்தி‌ல் அறிமுகமானார். ஆனால் அந்த‌ப் படம் வெளியாகவில்லை.

சர்ச்சைக்கு பெயர்போன கமால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரோஹித் ஷெட்டி மீது பீர் பாட்டிலை தூக்கி வீசி போட்டியிலிருந்து நீக்கப்பட்டார் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இந்த நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில், தனது இன மற்றும் நிற வெறியை மறுபடியும் நிரூபித்துள்ளார்.

"ரஜினிகாந்த் சார் சூப்பரான சூப்பர் ஸ்டாரா? இல்லை இருக்கும் சூப்பர் ஸ்டார்களில் மோசமான சூப்பர் ஸ்டாரா? என்று எனக்கு உங்கள் கருத்து‌க்களை‌த் தெரிவியுங்கள்" என்று எழுதியுள்ளார்.

இவரது இந்த டி‌வி‌ட்டுக்கு ரஜினி ரசிகர்கள், தமிழர்கள் அல்லாது அனைத்து தரப்பினரடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேலும் கொதித்தெழுந்த ரஜினி ரசிகர்கள், கமாலின் பக்கத்‌தி‌ல் கிழிய கிழிய திட்டி வருகின்றனர். இது போதாதெ‌ன்று ஆன்லை‌‌னி‌ல் இருக்கும் அனைத்து நண்பர்களையும் கமாலை திட்டுவதற்காக அழைப்பு விடு‌த்து வருகின்றனர்.

முன்னதாக தனுஷ் குறித்து கமா‌லி‌ன் சர்ச்சையான கருத்து,

தனுஷ் இந்தியில் நடித்த ராஞ்சனா திரைப்படத்தின் இய‌க்குன‌ர், ஆனந்த் எல்.ராயின் டிவிட்டர் பக்கத்தில் கமா‌ல் கூறிய கருத்து,

"சார் நீங்க உத்திர‌ப்பிரதேசத்தை சேர்ந்தவரா என்று தெரியாது. ஆனால் உத்திர‌ப் பிரதேசம் எங்கு தேடினாலும் செருப்பு தைப்பவர், துப்புரவு தொழிலாளி என யாரும் தனுஷ் போன்று இருக்கவே மாட்டார்கள். மாறாக தனுஷை பிராமணராக நீங்கள் கதையில் அமைத்திருப்பதை என்னால் ஏற்று கொள்ளவே முடிய வில்லை'' என்று கருத்து கூறியிருந்தார்.

இத்தகைய இன மற்றும் நிற வெறி பிடித்த கமால் மீது சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கு ஒன்றையும் தொடர்ந்து‌ள்ளா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

0 comments:

Post a Comment