Tuesday, 24 September 2013

ரெய்னா, ஹஸ்ஸி வருந்தியது ஏன்?- தோனி நெகிழ்ச்சி



சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் நேற்று முந்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தென் ஆப்பிரிக்காவின் டைட்டன்ஸ் அணி நிர்ணயித்த கடுமையான இலக்கை ஊதித் தள்ளி வெற்றிபெற்றது.

ரெய்னா, ஹஸ்ஸி ஆகியோரின் அதிரடி ஆட்டத்தினால் இந்த வெற்றி சாத்தியமாயிற்று என்று கூறிய தோனி ஓய்வறையில் நடந்த மற்றொரு நெகிழ்ச்சியான தருணத்தையும் குறிப்பிட்டார்:

இது கடினமான இலக்குதான். ஆனால் ரெய்னா, ஹஸ்ஸியின் பேட்டிங் உண்மையில் அபாரம்தான். அவர்கள் இருவரும் முதல் 10 ஓவர்களில் அடித்த அடிதான் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.

ரெய்னாவும், ஹஸ்ஸியுன் அவுட் ஆகி ஓய்வறைக்கு திரும்பியபோது வருத்தத்தில் இருந்தனர். சீக்கிரம் அவுட் ஆகி விட்டோம், இன்னும் பங்களிப்பு செய்திருக்கவேண்டும் என்று கூறினர். அவர்கள் இவ்வாறு கூறியதுதான் இந்த ஆட்டத்தில் எனக்கு திருப்தி ஏற்படுத்திய விஷய்மாகும்.

இவ்வஆறு தோனி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment