Tuesday, 24 September 2013

பல பெண்களுடன் தொடர்பு; மனைவியை கொன்ற மந்திரவாதி



சென்னையில் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததைக் கண்டித்த மனைவியை மந்திரவாதி கொடூரமாக கொலை செய்தார்.

திருவொற்றியூர் சின்ன மேட்டுப்பாளையம் 1-வது தெருவை சேர்ந்தவர் முகமது ரபீக் (40). இவரது மனைவி நூர்ஜகான் (31). கேரளாவை சேர்ந்தவர். இவர்களுக்கு 23.5.2013-ல் திருமணம் நடந்தது.

மந்திரம், பில்லிசூனியம் போன்றவற்றை செய்துவரும் முகமதுரபீக் ஏற்கனவே பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்தார். பின்னர் விவாகரத்து செய்து விட்டார். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

முகமதுரபீக் மாந்திரீகம் செய்வதாகவும், பில்லி சூனியம் எடுப்பதாகவும் கூறி பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

நேற்றும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. தகவல் அறிந்த நூர்ஜகானின் உறவினர்கள் திருவொற்றியூர் வந்து சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் அவர்கள் சென்று விட்டனர்.

இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மந்திரவாதி முகமதுரபீக் கத்தியால் நூர்ஜகானை குத்தியதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே நூர்ஜகான் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி சம்பவ இடம் சென்று மந்திரவாதி முகமது ரபீக்கை கைது செய்தார். மேலும் விசாரணை நடைபெறுகிறது.

0 comments:

Post a Comment