ஆக்ரோஷமாக கூட்டப்பட்ட நடிப்பவர்களின் பேரவை கூட்டம் சவசவவென்று முடிந்தது. கூட்டத்தில் அதிகம் கொந்தளித்தது தலைவரின் துணைவியார்.
சங்க நிலத்தை எப்படி உங்க பெயரில் பதிவு செய்யலாம் என இரண்டெழுத்து நடிகர் தலைவரிடம் ரௌத்திரம் பழகியதில் துணைவியார் கோபத்துக்கு ஆளானார். அவரு எவ்ளவோ சங்கத்துக்காக செய்கிறார். இத்துனூண்டு நில விஷயத்தில் இத்துனூண்டு நடிகர் கேள்வி கேட்டுட்டாரே என்று கதகளி ஆடியிருக்கிறார் நடிகை.
சங்கம் என்பது எல்லோருக்கும் பொது. அப்படியிருக்கையில் தனிநபர் சங்க நிலத்தை தன் பெயரில் பதிவு செய்வது தவறு. நாளையே அவர் பதவி பறிபோகலாம், ஏன் சங்கத்திலிருந்தே விலகலாம். இந்த அடிப்படைகூட தெரியாமல் தவறை செய்துவிட்டு, கேள்வி கேட்டால் கொதிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? மொத்தத்தில் எந்தப் பிரச்சனையும் பேசி தீர்க்கப்படாமலே பூசி மொழுகி முடிந்திருக்கிறது கூட்டம்.


0 comments:
Post a Comment