Tuesday, 24 September 2013

இரண்டாம் உலகம், இரண்டாம் இசையமைப்பாளர்



இரண்டாம் உலகம் படத்தின் பின்னணி இசை அமைப்பதில் இருந்து ஹாரிஸ் ஜெயரா‌ஜ் பின்வாங்கியிருக்கிறார். நேற்றுவரை கிசுகிசுவாக இருந்தது இன்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனக்கு விருப்பம் உள்ள படங்களுக்கு மட்டுமே இசையமைப்பவர் ஹாரிஸ் ஜெயரா‌ஜ். கதை மென்மையாக அவருக்கு தோதாக இருக்கணும், இயக்குனர் பிடித்தமானவராகவும் வேணும், சம்பளமும் திருப்பதியாக இருக்க வேண்டும். புதுப்பேட்டை படத்துக்கு செல்வராகவன் ஹா‌ரிஸிடம்தான் சென்றார். வெட்டுக்குத்து கதை, நமக்கு தோதாகாது என்று திருப்பி அனுப்பினார் ஹாரிஸ். இரண்டாம் உலகத்துக்கு இசையமைக்க ஒத்துக் கொண்டது ஆச்ச‌ரியம்.

தீபாவளிக்கு படம் வெளிவரும் நிலையில் பின்னணி இசை சேர்ப்பிலிருந்து விலகியிருக்கிறார் ஹா‌ரிஸ். வேலைப்பளு அதனால்தான் இந்த விலகல் மற்றபடி வி‌ரிசல் எதுவும் இல்லை என படயூனிட் பூசி மொழுகுகிறது. ஓகே, அப்படியே இருக்கட்டும். அவருக்கு பதில் அனிருத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

ஹா‌ரிஸின் அதே வேலைப்பளு காரணமாக முனி 3 - கங்கா படத்திலிருந்து விலகினார் அனிருத். இப்போது இங்கு கமிட்டாகியிருக்கிறார். வேலைப்பளு...? அது போயே போச்சு.

0 comments:

Post a Comment