Tuesday, 24 September 2013

75,00,000 வரை கொடுத்து குழந்தை பெற்றுக்கொள்ளும் சீனர்கள்



சீனாவை சேர்ந்த மக்கள் அமெரிக்காவை சேர்ந்த பெண்கள் மூலமாக 'வாடகை தாய்' முறையில் அதிகம் செலவு செய்து குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துவருகிறார்கள்.

சீனாவில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. எனவே, அவர்களால், சட்டப்பூர்வமாக ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள இயலாது. மேலும், மனைவியை தவிர வேறொரு பெண் மூலம் ‘வாடகை தாய்’ முறையில் குழந்தை பெறவும் சீனாவில் அனுமதி கிடையாது.

எனவே,சீனாவை சேர்ந்த செல்வந்தர்கள் பலர் தங்களது குடும்பத்திற்கு குழந்தையை பெற்றுத்தர அமெரிக்காவை சேர்ந்த பெண்கள் மூலமாக 'வாடகை தாய்' முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துவருகிறார்கள்.

இத்தகைய தம்பதிகள் அமெரிக்காவை சேர்ந்த பெண்களை வாடகை தாயாக தேர்ந்தெடுக்க காரணம் உண்டு. அமெரிக்க வாடகை தாய் மூலம் பிறக்கும் தங்கள் குழந்தைக்கு அமெரிக்க குடிமகன் உரிமை கிடைக்கும்.அதன் மூலம் அக்குழந்தை தனது 21-வது வயதில் தங்கள் பெற்றோருக்கு ‘கிரீன் கார்டு’ திட்டத்தின் கீழ் அமெரிக்க குடியுரிமை பெற விண்ணப்பிக்கவும் முடியும்.

இந்த முறை கடந்த 2 ஆண்டுகளாக பெரும் வரவேற்ப்பை பெற்றுவருவதை அடுத்து, அமெரிக்காவை சேர்ந்த பெண்களை 'வாடகை தாய்' ஆக தேர்தெடுத்து, அவர்கள் குழந்தையை பெற்றுத்தர சீனாவை சேர்ந்தவர்கள் ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பணம் தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment