பூமி நாயகனின் பிரமாண்ட படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. ஒன்றிரண்டு வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தினாலும் முக்கியமான ஆப்கானிஸ்தான் காட்சிகளை அங்கு படமாக்கவில்லை.
இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் ஆப்கானிஸ்தான் போன்ற ஏதாவது லொகேஷனில் அந்தக் காட்சிகளை எடுத்திருக்கலாம் என்றுதான் இதுவரை நம்பிக் கொண்டிருக்கின்றனர். தவறு.
சென்னை அடையாறுக்கு அருகிலுள்ள மூன்றெழுத்து ஸ்டுடியோவின் மைதானத்தில் எடுக்கப்பட்டவைதான் அத்தனை காட்சிகளும்....
பேக்ரவுண்ட் உள்பட அனைத்தும் கிராபிக்ஸ். முக்கியமாக நடிகர் அம்மாஞ்சியாக இருந்து அசகாய சூரராக நிறம்மாறும் அந்த சண்டைக் காட்சியில் நடித்ததும்கூட நடிகர் இல்லையாம்.
எகிறி குதித்ததெல்லாம் வேறு சண்டைக் கலைஞர். அது தெரியாத அளவுக்கு காட்சிகளை மேட்ச் செய்தவர் ஹாலிவுட் படங்களில் பணிபுரியும் தமிழர்.
இரண்டாம் பாகத்துக்கான வேலைகளையும் அவர்தான் கவனித்து வருகிறார். பூமி நாயகனின் அலுவலகத்தில்தான் இறுதிகட்ட ஸீஜி வேலைகள் சில நடந்து வருகின்றன.


0 comments:
Post a Comment