ஐசிசி. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் பெட்டிப்பாம்பாக கிடக்கும் நிலையில் வணிக நலன்களையே கருத்தில் கொண்டு வீரர்களை கசரத் வாங்கும் தேவையற்ற ஒருநாள் தொடர்களை முதலில் ஒழியுங்கள் என்கிறார் ராகுல் திராவிட்.
பிரபல கிரிக்கெட் இணையதளத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இயன் சாப்பல், இங்கிலாந்து முன்னாள் வீரர் மார்க் புட்சர் ஆகியோரும் கலந்து கொண்டு விவாதித்தனர்.
அதில் ராகுல் திராவிட் கூறியதாவது: இது போன்ற ஒருநாள் தொடர்களுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கவேண்டும். நாம் விளையாடும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் அல்லது 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் பெரும்பாலும் அர்த்தமற்றவைகளாக இருக்கின்றன.
சாம்பியன்ஸ் டிராபி போன்ற...
தொடர்களுக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. அதன் மீது ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனெனில் அதற்கு ஒரு ஆரம்பம், ஒரு முடிவு என்று உள்ளது. ஆனால் இருதரப்பு ஒருநாள் தொடர்கள் வெறும் வேஸ்ட் இதனை முதலில் ஒழிக்க வேண்டும்.
சாம்பியன்ஸ் டிராபி, உலகக் கோப்பை கிரிக்கெட் போன்ற மிகப்பெரிய தொடர்களுக்கு முன்பாக தயாரிப்புக்கான தொடர்களாகவே ஒருநாள் போட்டிகள் இருக்கவேண்டும். ஆகவே நிறைய வேஸ்ட் ஒருநாள் போட்டிகளை நீக்கிவிட்டு டெஸ்ட் போட்டிகளை நடத்தவேண்டும். இவ்வாறு கூறினார் திராவிட்.
இயன் சாப்பல் கூறுகையில் பல ஒருநாள் தொடர்கள் வெறும் 'டிராவல் ரோட் ஷோ'-வாக இருக்கிறது என்று சாடியுள்ளார்.
விமர்சனங்கள் ஐசிசி. அதனை ஆட்டிவிக்கும் பிசிசிஐ-ஆகியவற்றின் காதுகளுக்கு எட்டாது! ஏன் தெரியுமா? இவற்றிற்கு காதுகளே கிடையாது. பிசிசிஐ எனும் கறை படிந்த உடலில் வெறும் சர்ட் மற்றும் பேண்ட் பாக்கெட்டுகளும் கல்லாவும் மட்டுமே உள்ளன.


0 comments:
Post a Comment