Tuesday, 17 September 2013

பல பெண்களுடன் உல்லாசம்; ஆபாசப்படம் எடுத்து மிரட்டல்


நெல்லை மாவட்டத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பல பெண்களுடன் உறவு கொண்டு அதை செல்போனில் படம் பிடித்து பணம் கேட்டு மிரட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது முதல் மனைவி காவல்துறையில் மனு கொடுத்துள்ளார்.

நெல்லை மாவட்டம் உத்தரன்கோட்டையை சேர்ந்தவர் வித்யா(வயது22). இவர் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.

மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2008 ஆண்டு காட்பாடியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் எனது சகோதரி அமுதா படித்தார். அவரை பார்ப்பதற்காக காட்பாடிக்கு நான் அடிக்கடி வருவேன். அப்போது காட்பாடி அடுத்த நாகல் கிராமத்தை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் ரவிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இது காதலாக மாறியது. எங்களது காதலுக்கு முதலில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். ஜம்முவுக்கு அழைத்து சென்று 3 மாதம் குடும்பம் நடத்தினார்.

பின்னர் ஊருக்கு வந்தேன். அப்போது எங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் நான் தாய் வீடு சென்றேன். அங்கு எனக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் வாழ்வதற்காக எனது கணவர் வீட்டுக்கு வந்தேன்.
அப்போது கணவர் ரவி என்னுடன் வாழ முடியாது என்றார். சேர்ந்து வாழ வற்புறுத்தினால் செல்போனில் நான் எடுத்துள்ள ஆபாச படத்தை இண்டர்நெட்டில் வெளியிடுவேன் என்று மிரட்டுகிறார்.

அவரது செல்போனை பார்த்தபோது, அதில் பல இளம் பெண்களுடன் அவர் உல்லாசமாக இருப்பது தெரிய வந்தது. குறிப்பாக பல கல்லூரி பெண்களுடன் ரவி நெருக்கமாக இருக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

மேலும், வாய்ஸ் ரிக்கார்டரில், பெண்களுடன் உல்லாசமாக இருந்ததை செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளதாகவும், தான் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் அந்தரங்க காட்சிகளை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என்றும் அவர் மிரட்டி இருப்பதும் தெரியவந்தது.

மேலும் அவர் திருப்பத்தூரை சேர்ந்த ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்துள்ளார்.

பல பெண்களை மயக்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதால் அவரை கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வித்யா குறிப்பிட்டுள்ளார்.

மனுவை பெற்ற எஸ்.பி.விஜயகுமார், இந்த மனு மீது உரிய விசாரணை நடத்துமாறு கே.வி.குப்பம் போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment