Tuesday, 17 September 2013

யுவ்ராஜ்,பத்தான் ஒரே ஓவரில் அவுட்! இந்தியா ஏ-உதை!


பெங்களூரில் நடைபெற்ற இந்தியா ஏ, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ-வை வெஸ்ட் இண்டீஸ் ஏ 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 1- 1 என்று தொடரில் சம்நிலை எய்தியது.

முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் ஏ, ஜே.எல். கார்ட்டரின் அதிரடி 133 ரன்களில் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா ஏ 48.4 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர் கமின்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஆனால் ஆட்டத்தின் திருப்பு முனை என்னவெனில் 28வது ஓவரை வீசிய மேற்கிந்திய ஏ அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் மில்லர் அடுத்தடுத்து யுவ்ராஜ்(40), யூசுப் பத்தான் (0) ஆகியோரை வீழ்த்தினார். ஹேட்ரிக் வாய்ப்பு பெற்றார். ஆனால் ஹாட்ரிக் எடுக்கவில்லை.

துவக்கத்தில் உத்தப்பா (10), மந்தீப் சிங் (3) வெளியேறி இந்தியா ஏ 18/2 என்று பின்னடைவு கண்டது.

இளம் வீரர் உன்முக்த் சந்த் 72 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன் பிறகுதான் யுவ்ராஜ் சிங், பத்தா ஒரே ஓவரில் வெளியேற 114/5 என்று 28வது ஓவரில் சரிவு கண்டது இந்தியா ஏ.

அதன் பிறகு கேதர் ஜாதவ் 35 ரன்களையும் நமன் ஓஜா 34 ரன்களையும் எடுத்து நம்பிக்கை அளித்தனர். ஆனால் இவர் அவுட் ஆகும்போது 41வது ஓவரில் ஸ்கோர் 177/7 என்று ஆனதால் இனி வெற்றி பெற வாய்ப்பேயில்லை என்ற நிலை உருவானது.

இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் தொடர் இந்தியாவுக்கா மேற்கிந்திய தீவுகளுக்கா என்பது விறுவிறுப்பை கூட்டியுள்ளது.

முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணி 28வது ஓவரில் 112/4 என்று இருந்தபோது இந்தியா ஏ ஆட்டத்தின் பிடியை தளரவிட்டனர். கார்ட்டர் கடைசி வரை நின்று 133 ரன்கள் விளாசினார். ஜான்சன் (39), கார்ட்டர் ஆகியோர் 5வது விக்கெட்டுக்காக 18 ஓவர்களில் 131 ரன்களைச் சேர்த்ததே இந்தியா ஏ தோல்விக்கு பிரதான காரணமாக அமைந்தது.

0 comments:

Post a Comment