Tuesday, 17 September 2013

முசாபர் கலவரமும்: ஜாட் சாதி இந்து வெறியர்களும்!


ஆகஸ்ட் 27ஆம் தேதி வழக்கம் போல் எல்லாக் கலவரங்களுக்கும் அடிப்படை காரணமாக உப்பு சப்பில்லாத விவகரம் பின்னணியில் இருப்பது போல் முசாபர் நகர் கலவரத்திற்கும் ஒரு உப்பு சப்பில்லாத காரணம்தான் உள்ளது.

ஜாட் இனத்தை சேர்ந்த ஒரு பெண்ணை முஸ்லிம் இளைஞர் ஒருவர் கேலி செய்ததாகவும் அதற்கு ஜாட் சாதியைச் சேர்ந்த இருவர் கலாப்பூர் கிராமத்திற்கு சென்று அந்த முஸ்லிம் இளைஞரை கடுமையாகத் தக்கியதாகவும் அதில் அந்த முஸ்லிம் கொல்லப்பட்டதாகவும் செய்தி.

இளைஞரைத் தாக்கியதால் கடுப்பான முஸ்லிம்கள் இந்த இரு ஜாட் சாதியினரையும் தாக்கியுள்ளனர். இதில் இவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.

கொலையுண்டவர்களுக்காக நீதி கேட்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி ஜான்சத் நகரில் ஜாட் சாதி பஞ்சாயத்து கூட்டப்பட்டது. இதில் சில பல கோரிக்கைகள் வைக்கப்பட்டன. சாவுக்கு நீதிவேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால் அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பாஜக ஜாட்டிற்கு ஆதரவாக பந்த் அறிவித்தது.

வழக்கமாக இதுபோன்ற தருணங்களில் ஜாட் சாதியினர் தங்கள் கூட்டத்தின் பவரை காண்பிக்க மகா பஞ்சாயத்து என்று ஒன்றைக் கூட்டுவர். அனைத்து ஜாட் மக்களின் பிரதிநிதித்துவ பஞ்சாயத்து ஆகும் இது.

இந்த மகா பஞ்சாயத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு - நச்சுப் பிரச்சாரம் உமிழப்பட்டதால் காவல்துறை சில சாதித் தலைவர்களைக் கைது செய்தது.

ஆனால் மதவெறியர்களும் ஜாதி வெறியர்களும் ஒத்துக் கொள்வார்களா? பஞ்சாயத்திற்கு வருபவர்களை முஸ்லிம்கள் தாக்குவதாக கதை கட்டி முஸ்லிம்கள் மீது ஜாட்டுகள் மதவெறித் தாக்குதல் நடத்தினர்.

ஜாட்களிடம் பயங்கரத்...
துப்பாக்கிகள் உள்ளன. ஜாட்களின் அராஜகத்தை படம்பிடித்த ஐபிஎன். தொலைக்காட்சி நிருபர் ராஜேஷ் வர்மா துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

சுமார் 40 பேர் ஜாட்களின் வன்முறைக்கு பலியானதோடு, முஸ்லிம்களை தேடித்தேடி வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டதால் அவர்கள் அனைவரும் சொந்த ஊரை விட்டு ஓடிப்போக வேண்டிய நிலை ஏற்பட்டது. சொந்த ஊரிலேயே நாங்கள் அன்னியர்களாக்கப்பட்டோம் என்று அவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முறையிட்டுள்ளனர்.

ஆனால் இந்து மதவெறியரான பாஜக எம்.எல்.ஏ. சோம் சங்கீத் பாகிஸ்தானில் நடந்ததாக ஒரு போலி வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு தன் பங்கிற்கு வன்முறையைத் தூண்டினார்.

அவரது பேஸ்புக் பக்கம் பிறகு முடக்கப்பட்டாலும் அது அதனையும் தாண்டி பெரிய அளவுக்கு பரவத் தொடங்கியது.

ஃபேஸ்புக், உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருக்கும் இந்து மதவெறியர்கள் இந்த வீடியோவைப் பார்த்து தங்களது உள்ளார்ந்த மதவெறித்தீயிற்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டனர்.

அகிலேஷ் யாதவ் ஜாட் சாதி வாக்குகளை பெரிதும் நம்பியிருப்பவர். கலவரத்துக்கு காரணமாந்னவர்களையும் கூட்டாளிகளையும் பிடித்து உள்ளே போடுவதை விடுத்து ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்துள்ளார். பாவம்! இந்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஜாதி வெறியர்களை மூடி மறைக்கவும், ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகளுக்கும் ஜால்ரா அடிக்கும் விசாரணையை அறிக்கையை எத்தனை நாட்கள்தான் செய்து கொண்டிருப்பார்களோ.

ஆந்னால் இந்த கலவரத்தில் ஒரே ஒரு ஆறுதலாந்ன விஷயம் ஜாட் வகுப்பை ச் சேர்ந்த சில நல்லவர்கள் முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பற்றியுள்ளனர்.

மோடியும் வந்து விட்டால் இந்து மதவெறியர்களுக்கு இன்னும் துளிர் விட்டுப் போகும். பாரதத்தாய் இன்னும் எதையெதையெல்லாம் சகித்துக் கொண்டிருக்கப் போகிறாளோ?

0 comments:

Post a Comment