நாட்டை உலுக்கிய டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார சம்பவ வழக்கில் குற்றவாளிகள் சார்பில் ஆஜரான இரண்டு வழக்கறிஞர்களின் அங்கீகாரத்தை ரத்துச் செய்வது குறித்து யோசித்து வருவதாக இந்திய பார் கவுன்சில் கூறியுள்ளது.
டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்காக ஆஜரான வழக்கறிஞரான ஏபி சிங். பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் இறந்து அந்த மாணவி திருமணத்துக்கு முன்பே உடல் உறவு வைத்துக் கொண்டிருந்தார் என்றும் நள்ளிரவில் ஒரு ஆணுடன் சென்றார் என்றும் கூறியிருந்தார்.
அந்தப் பெண் தனது மகளாக இருந்திருந்தால், தான் அவளை உயிருடன் எரித்திருப்பேன் என்றும் மற்ற பெற்றோர்களும் அதைத்தான் செய்ய வேண்டும் என்றும் அந்த வழக்கறிஞர் கூறியிருந்தார். வழக்கறஞரின் இந்த பேச்சு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படிப்பட்ட கொவுரவ கொலையை நியாயப்படுத்தும்விதமாக அவர் சில ஊடகங்களிலும் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்தப் பேச்சுக்காக, அந்த இரு வழக்கறிஞர்களும் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர்கள் வழக்கறிஞர்களாக வாதாட வழி செய்யும் லைசன்ஸ் ரத்துச் செய்யப்படும் என்று பார் கவுன்சில் கூறியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கும், நீதிமன்றம் தூக்கு தண்டனையை அளித்திருந்த பிறகு இத்தகைய கருத்துக்களை ஏபி சிங் தெரிவித்திருந்தார்.
மேலும் குற்றவாளிகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்திய ஊடகங்களிடம் பேசுகையில் கீழ் நீதிமன்றம் அரசியல் அழுத்தம் காரணமாகவே அனைவருக்கும் தூக்கு தண்டனை அளித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
இவ்வாரான கீழ்தரமான பேச்சுக்கள் வழக்கறிஞர்கள் நற்மதிப்பை கெடுப்பதாக உள்ளதாகவும், மேலும் பெண்கள் மீதான வழ்முறைகளும் அத்துமீறல்களும் தொடர்வதாகவும் இவர்களுக்கு எதிராக எதிர்ப்பு வலுத்துள்ளது.


0 comments:
Post a Comment