ராஞ்சியில் தினமும் அதிகாலை இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது பைக்கை எடுத்துக் கொண்டு ஊர்சுற்றுகிறார். இதனால் அவருக்குப் பாதுகாப்பு அளிப்பது பற்றி போலீஸ் கவலையடைந்துள்ளனர்.
இதனால் அவர் எங்கு வெளியில் சென்றாலும் செல்வதற்கு முன் பாதுகாப்பு போலீசுக்கு த்கவல் அளிக்குமாறு அவரது குடுபத்தினரை கேட்டுக் கொண்டுள்ளதாம் ராஞ்சி போலீஸ் பிரிவு.
பைக் பிரியரான தோனி தான் முதலில் வாங்கிய யமகா ராஜ்தூத் பைக்கை பிரித்து போட்டு திரும்பவும் மாட்டி அதனுடன் ஒரு குழந்தை போல் பழகி வருவது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்திய கேப்டனாக இருப்பவர், இந்தியாவின் செல்லப்பிள்ளை, தன் பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்திருப்பவர் சொல்லாமல் கொள்ளாமல் பைக்கில் ஊர் சுற்றினால் என்ன ஆவது?
இதனால் ராஞ்சி எஸ்.எஸ்.பி. எஸ்.கே.சிங் அவரது குடும்பத்தினரிடம் தோனி வெளியே போவதற்கு முன் தங்களுக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இம்மாதம் 22ஆம் தேதி டைடன்ஸ் அணிக்கு எதிராக தோனி சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துகிறார்.


0 comments:
Post a Comment