Tuesday, 17 September 2013

டிராப்பிக்கில் சிக்கி ஆட்டோவில் குழந்தை பெற்ற இளம்பெண்



மும்பையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் டிராபிக்கில் சிக்கிக்கொண்ட நிறைமாத கர்ப்பிணிக்கு ஆட்டோவில் குழந்தை பிறந்துள்ளது.

மும்பை அசால்வா பகுதியை சேர்ந்தவர் சீமா, வயது 30. நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக நேற்று காலை, தனது கணவரோடு மருத்துவமனைக்கு கிளம்பினார்.

தனது கணவர் ஆட்டோவை ஓட்ட பின்சீட்டில் சீமா பயணித்துக்கொண்டிருந்தார். மருத்துவமனை மிக அருகே இருந்த நிலையில் இந்த தம்பதி சாலை நெரிசலில் சிக்கினர்.
சிறிது நேரத்தில் சீமாவிற்கு பிரசவ வலி ஏற்பட, மருத்துவமனைக்கு அவரால் ஆட்டோவில் இருந்து இறங்கி நடந்து செல்ல முடியவில்லை. இந்நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அக்பர் தனது மனைவி ஆட்டோவிலேயே குழந்தையை பெற்றெடுக்க உதவி புரிந்தார்.

இதையடுத்து ஆட்டோவிலேயே சீமா சுமார் 10.30 மணி அளவில் ஒரு அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். உடனடியாக தனது மனைவி மற்றும் மகனை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்த அக்பர் தான் விவரிக்க முடியாத பதற்றத்திற்கு ஆளானதாக தெரிவித்தார்.

மருத்துவர்கள் தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக பரிசோதனைக்கு பின் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment