நவம்பர் ஒன்றாம் தேதி முதல் உங்கள் தொலைக்காட்சியில் தோன்றி, எனது மேனி அழகின் ரகசியம் லக்ஸ் என்று சொல்லவிருக்கிறார் நடிகை சமந்தா. எஸ், லக்ஸ் இந்த அழகான நடிகையை தனது புதிய பிராண்ட் அம்பாசிடராக்கியுள்ளது.
லக்ஸ் விளம்பரங்களில் நடிப்பதை மாடல்கள் கௌரவமாக நினைக்கிறார்கள். நடிகைகளுக்குதான் அந்த அதிர்ஷ்டம் அதிகளவில் கிடைத்து வந்தது. ப்ரியங்கா சோப்ரா, அசின், கத்ரினா கைஃப் போன்றவர்கள் லக்ஸ் விளம்பரங்களில் நடித்துள்ளனர். இப்போது சமந்தா.
லக்ஸ் கேர்ளாக வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ரகசிய ஆசை. அது இப்போது நிறைவடைந்ததில் மகிழ்ச்சி. வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் எனது விளம்பரங்கள் வெளியாகும் என சமந்தா தெரிவித்துள்ளார்.
சமந்தாவுடன் நடிக்கயிருப்பவர் மற்றும் விளம்பரப்படத்தை இயக்கப் போகிறவர் விவரம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.


0 comments:
Post a Comment