Tuesday, 17 September 2013

முதலில் ஆயுள் தண்டனை மேல் முறையீட்டில் தூக்கு!


வங்கதேசம் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற 1971 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போரின் போது, பலரை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இஸ்லாமிய அரசியல் பிரமுகருக்கு மேல் முறையீட்டில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசம் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற 1971 ஆம் ஆண்டு நடத்திய போரின் போது, ஒட்டுமொத்தமாகப் பலரை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அப்துல் குவாதர் முல்லாவிற்கு மேல் முறையீட்டில், வங்கதேச உச்ச நீதிமன்றம், மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.

சிறப்பு போர்க்குற்ற நீதிமன்றம் பிப்ரவரியில், 65 வயதான அப்துல் குவாதர் முல்லா என்ற இந்த ஜமாத் இ இஸ்லாமி கட்சித் தலைவருக்கு, ஆயுள் தண்டனை விதித்திருந்தது.
ஒருவருக்கு கீழ் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை, மேல்முறையீட்டில், மரண தண்டனையாக உயர்த்தப்படுவது இதுவே முதன் முறை என்று வழக்கறிஞர் ஒருவர் கூறினார்.

முன்பு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை தீர்ப்பை எதிர்த்தே பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கங்கள் கொண்டவை என்று முல்லாவின் ஆதரவாளர்கள் கூறினர், ஆனால் அவரது எதிர்ப்பாளர்களோ முன்பு விதிக்கப்பட்ட தண்டனை மிகவும் குறைவு எனத் தெரிவித்திருந்தனர்.

இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டதை அடுத்து, 48 மணி நேர முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment