Thursday, 19 September 2013

சினிமா நூற்றாண்டு விழா - தமிழக அரசு 10 கோடி நிதியுதவி



இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா வரும் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை சென்னையில் நடக்கிறது. விழாவை முன்னிட்டு ஏற்கனவே படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முதல்நாள் நிகழ்ச்சிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

நான்கு நாட்கள் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை பெரும் தொகைக்கு (சுமார் 22 கோடிகள்) தனியார் நிறுவனம் ஒன்று வாங்கியதாகவும் பிறகு அது ஜெயா தொலைக்காட்சிக்கு கைமாறியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிக்கு விற்பதன் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

இந்நிலையில் முதல்வர் விழாவுக்கு எவ்வளவு செலவாகும் என கேட்டிருக்கிறார். முப்பது கோடிகள் வரை செலவாகும் என்று சொல்ல, உடனே பத்து கோடி ரூபாய் தமிழக அரசு சார்பில் அளித்துள்ளார். இந்த பணத்தைக் கொண்டு நடத்தப்படும் நிகழ்ச்சிகளை ஜெயா தொலைக்காட்சியில் நீங்கள் கண்டு களிக்கலாம்.

நேற்று பத்தி‌ரிகையாளர்களை சந்தித்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண் நதியுதவி அளித்ததற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெ‌ரிவித்தார்.

0 comments:

Post a Comment