ஹாரிபாட்டர் நாவலினால் உலகம் முழுவதும் பிரபலமான, உலகின் மிகப்பணக்கார எழுத்தாளராக மாறிய ஜே.கே.ரவ்லிங் மீண்டும் சினிமாவுக்கு வருகிறார்.
ஹாரிபாட்டர் கதையில் வரும் மேஜிக்கல் கிரியேச்சர்ஸ் குறித்த புத்தகத்தை 2001 ல் ரவ்லிங் வெளியிட்டார். புத்தகத்தின் பெயர் Fantastic Beasts and Where to Find Them. ஹாரிபாட்டர் கதையில் ஹாரிபாட்டர் இந்தப் புத்தகத்தை வைத்திருப்பதாக வரும்.
ஹாரிபாட்டர் கதை நிகழ்வதற்கு 70 வருடங்களுக்கு முன் நடக்கும் கதைதான் இந்தப் புத்தகத்தில் உள்ளவை. ஒருவகையில் ஹாரிபாட்டரின் ப்ரிக்வெல். அதனை சினிமாவாக எடுக்கிறது வார்னர் பிரதர்ஸ். அதற்காக ரவ்லிங்குடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்.
முக்கியமாக படத்தின் திரைக்கதையை ரவ்லிங்தான் எழுதயிருக்கிறார். ஏழு பாகங்கள் திணறத் திணற எடுத்த பிறகும் ஹாரிபாட்டர் மீதான தாகம் ஹாலிவுட்டுக்கு குறையவில்லை. ஹாரிபாட்டரைப் போலவே இந்த படத்தையும் பல பாகங்களாக எடுக்கிறது வார்னர் பிரதர்ஸ்.
பாக்கெட்டை காலி பண்ணாமல் ஓயமாட்டார்கள்.


0 comments:
Post a Comment